மனைவியும் காதலியும், டிவியும், மொபைலும் போல - எப்படி தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

காதலித்த ஆண்கள் தான் தங்கள் நண்பர்களை காதலிக்க வேண்டாம் என்பார்கள். திருமணம் செய்த ஆண்கள் தான் தங்கள் நண்பர்களை "வேணாம் மச்சான், இந்த கல்யாணமே வேணாம்.." என்பார்கள். இதற்கான காரணங்களாக பலவற்றை கூறுவார்கள்.

இவர்கள் சொல்லும் காரணங்களில் பெரும்பாலும் ஒரே விஷயமாக தான் இருக்கும், தொல்லை என்பார்கள். ஆனால், காதல் உறவிலும், இல்லறத்திலும் நடக்கும் மகிழ்ச்சியான தருணங்கள் பற்றி ஒன்று கூட கூறமாட்டார்கள்.

ஏனெனில், அவை அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையின் அங்கங்கள். காதலியும், மனைவியும் இல்லாத ஆணின் வாழ்க்கை முழுமையடைவதில்லை. இதற்கும் மனைவியும் காதலியும், டிவியும், மொபைலும் போல என்பதற்கும் என்ன சம்மந்தம் என பார்க்கிறீர்களா? படிங்க பாஸ்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விருப்பம்

விருப்பம்

டிவி உங்களுக்கு சில குறிப்பிட்ட நேரத்தில் தான் பிடிக்கும். ஆனால், மொபைல் உங்களுக்கு பிடிக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை. கைகளிலேயே எப்போதும் செல்ல குழந்தை போல தவழ்ந்துக் கொண்டிருக்கும்.

காசு, பணம்

காசு, பணம்

டிவி'ய நீங்கள் எப்ப வேணாலும் பயன்படுத்தலாம். மாதத்திற்கு ஒருமுறை பணம் கொடுத்தால் போதும் (சம்பளம்). ஆனால். காதலி அப்படியல்ல பணம் தீரும் போதெல்லாம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். (பேலன்ஸ் முக்கியம் சாமி)

செலவு

செலவு

டிவி வாங்கும் போது மட்டும் தான் செலவு (கல்யாணம்). ஆனால், மொபைல் அப்படியில்ல ஸ்க்ரெச் கார்ட், ஹெட்செட், பேக் கவர் என பல செலவுகள் அடிக்கடி வைத்துக் கொண்டே இருக்கும்.

ரிமோட்

ரிமோட்

டிவியை கட்டுப்படுத்த நம் கையில் ஒரு ரிமோட் இருக்கும். ஆனால், மொபைலை அப்படி எல்லாம் கட்டுப்படுத்த முடியாது.

இரண்டு வகை

இரண்டு வகை

மொபைலில் நீங்கள் பேசவும் செய்யலாம், கேட்கவும் செய்யலாம். ஆனால் டிவியிடம் நீங்கள் பேச எல்லாம் முடியாது, அவர்கள் பேசுவதை கேட்க மட்டும் தான் முடியும்.

வைரஸ்

வைரஸ்

"லாஸ்ட் பேட் நாட் லீஸ்ட்....." டிவியில் வைரஸ் இல்லை, மொபைலில் எப்போது வேண்டுமானாலும் வைரஸ் வரலாம்.

கோணல் புத்தி வேண்டாம்

கோணல் புத்தி வேண்டாம்

உடனே, சரி அப்போ வீட்டில் இருக்கும் போது டிவியும், வெளியில் போகும் போது மொபைலும் பயன்படுத்துகிறேன் என்று கோண புத்தியுடன் அலைய வேண்டாம். படிச்சோமா, சிரிச்சமா-ன்னு அடக்க ஒடுக்கமா இருக்கனும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Wife Versus Girlfriend Is Like Television Versus Mobile

Do you know? Wife Versus Girlfriend Is Like Television Versus Mobile. Read here in tamil.
Story first published: Wednesday, February 10, 2016, 17:40 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter