புது காதலர்கள் மத்தியில் வெளிப்படும் விசித்திரமான உணர்வுகள்!

Posted By:
Subscribe to Boldsky

காதல் என்பது பார்த்திபனின் கவிதையை போல, கமல்ஹாசனின் இயக்கத்தை போல அதன் உண்மை ரூபத்தை புரிந்துக் கொள்ள ஓர் தனி முதிர்ச்சி வேண்டும். இங்கு பலருக்கு அது இல்லை என்பது தான் நிதர்சனம். பார்த்ததுமே காதல் தவறில்லை. ஆனால், முட்டாள் தனமாக நடந்துக் கொள்வது தான் தவறு.

தவறியும் காதலில் இந்த 6 தவறுகளை செய்துவிட வேண்டாம்...

நீதான் என் உலகம், நீதான் என் வாழ்க்கை என புலம்புவோர் ஒருபுறம். உடல் தழுவினால் போதும், விரல் உரசினால் போதும் என சில்மிசம் செய்வோர் ஒருபுறம். இவர்கள் இருவருக்கும் நடுவே சிக்கிக்கொண்டு காதல் நசுங்கிய நிலையில் தான் இருக்கிறது.

மனைவியும் காதலியும், டிவியும், மொபைலும் போல - எப்படி தெரியுமா?

இனி, புதிதாக உறவில் இணைவோரிடம் தென்படும் சில விசித்திரமான உணர்வுகள் பற்றிக் காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எங்கிருந்து வந்தாய்?

எங்கிருந்து வந்தாய்?

இவளோ நாள் நீ எங்க இருந்த.. ச்சே.. நான் உன்ன இவளோ நாள் எப்படி பாக்காம இருந்தேன். என் லைஃப-லயே நான் பாத்த பர்ஃப்பெக்ட் பொண்ணு / ஆண் நீதான்.

உனக்குமா?

உனக்குமா?

அட.. உனக்கும் ஏ.ஆர். ரகுமான் மியூசிக் பிடிக்குமா.... எனக்கும் பிடிக்கும்மா... ச்சே.. என்ன ஒரு கோ-இன்சிடெண்ட் பாத்தியா.. (மக்களே திருந்துங்க மக்களே... தமிழ்நாட்டுல எல்லாருக்குமே ஏ.ஆர். ரகுமான் மியூசிக் பிடிக்கும் மக்களே)

உன் நியாபகம்

உன் நியாபகம்

நான் எந்த பாட்டு கேட்டாலும், எந்த ஹீரோயின பாத்தாலும் உன் நியாபகமாவே இருக்கு.. இதுக்கு அவங்க ரியாக்ஷன்: நிஜமாதான் சொல்றியா???

இணையத்தில் ஊடுருவுதல்

இணையத்தில் ஊடுருவுதல்

தங்கள் பெயர் தன் துணையின் பெயரை கூகிள் செய்து அர்த்தம் பார்ப்பது. ஃப்ளேம்ஸ் போடுவது, லவ் கால்குலேட்டர் என அனைத்திலும் எவ்வளவு சதவீதம் காதல் வருகிறது என தேடி பார்ப்பது. (அப்ப உங்க மேல உங்களுக்கே நம்பிக்க இல்லையா...)

கிறுக்கு புடிச்சுருச்சு

கிறுக்கு புடிச்சுருச்சு

ஆவூன்னா... எனக்கு பைத்தியம் புடிச்ச மாதிரி இருக்கு. உன்ன பாக்காம, பேசாம இருக்க முடியில என கூறுவது.

கொக்காமக்கா லவ்வு

கொக்காமக்கா லவ்வு

எனக்கு பிடிக்காத விஷயம் கூட நீ பண்ணும் போது ரொம்ப புடிச்சுருக்கு... ஐ தின்க்.. திஸ் இஸ் ட்ரூ லவ்.... வி மேட் ஃபார் ஈச் அதர்.

வாழ்நாள் முழுக்க...

வாழ்நாள் முழுக்க...

காதலிக்க துவங்கிய ஓரிரு நாட்களிலேயே... வாழ்நாள் முழுக்க நாம் இதே போல சந்தோசமாக இருப்போம்-ல என கேட்பது. (ரெண்டு மாசம் கழிச்சு இத நெனச்சு அவங்களே சிரிச்சுப்பாங்க....)

பிரிந்துவிட்டால் ???

பிரிந்துவிட்டால் ???

ஒருவேள அப்படி ஆயிட்டா.. ஒருவேள இப்படி நடந்துட்டா.. நாம பிரிஞ்சுட்டா.... என பல நொன்னை கேள்விகளை நினைத்து வருந்துவார்கள்.

பதட்டம்

பதட்டம்

ஒரு மெசேஜ், ஒரு கால் வரவில்லை எனில்.. என்ன ஆனதோ... ஏது ஆனதோ என பதறுவார்கள். சற்று யோசித்து பார்த்தால் என்ன நடந்திருக்கும் என அறிந்துக் கொள்ளலாம். ஆனால், யோசிக்காமல் தான் பெரும்பாலும் செயல்படுவார்கள்.

என்னவா இருந்திருப்ப?

என்னவா இருந்திருப்ப?

ஒருவேள நான் உன் லைஃப்ல வராம இருந்திருந்தா நீ எப்படி இருந்திருப்ப? (நிம்மதியா இருந்திருப்பேன்... பின்ன ஜனாதிபதியாவா இருந்திருக்க போறோம். அதே குட்டி சுவர் வெட்டி பேச்சு தான்.. வேற என்ன.)

குழந்தக் குட்டி...

குழந்தக் குட்டி...

நீ இல்லாம ஒரு வாழ்க்கய யோசிக்கவே முடியாது. (கற்பனை உலகில்) இப்பவே நமக்கு ரெண்டு குழந்தைங்க தெரியுமா? (போதும்டா சாமி ரீலு அறுந்து போச்சு, முடியல)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Weird Emotional Stages Of Being In A New Relationship

Weird Emotional Stages Of Being In A New Relationship , read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter