ஆண்களை கவிழ்க்க பெண்கள் செய்யும் 12 விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

பெண்கள் எதிலுமே ஆண்களுக்கு சலைத்தவர்களல்ல. படிப்பு, வேலை, குடும்ப பொறுப்பு என அனைத்திலும் பெண்கள் ஆண்களுக்கு இணையானவர்கள் தான்.

ஆண்கள் பெண்களை கவிழ்க்க என்ன செய்வதென்று விழிபிதுங்கி நிற்கும் போது, தங்கள் ஒற்றை பார்வையில் அவர்களை கவிழ்க்கும் திறன் பெண்களுக்கு இருக்கிறது.

"அட, நீங்க பாத்தா மட்டும் போதும்.." என்ற வகையிரா நிறைய இருந்தாலும் பாசிடிவ் நெகட்டிவுடன் தானே சேரும். பெண்களும் தங்களை திரும்பி பார்காத ஆண்களை தான் விரட்டி விரட்டி லவ்வுகிறார்கள்.

இப்படி லவ்வும் போது, தான் விரும்பும் ஆணை கவிழ்க்க பெண்கள் என்னெவெல்லாம் செய்வார்கள் என இனிக் காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டீஸ் செய்வது

டீஸ் செய்வது

அதிகமாக கிண்டல் கேலி என உங்களை வாட்டி எடுப்பார்கள். சம்மந்தமே இல்லாமல் கலாய்க்க செய்வார்கள்.

விளையாட்டை பற்றி பேசுவது

விளையாட்டை பற்றி பேசுவது

பெண்களுக்கு பொதுவாக விளையாட்டு மீது பெரியளவில் ஆர்வம் இருக்காது. ஆனால், ஆண்கள் விளையாடிற்காக தேர்வை கூட உதாசீனம் செய்வார்கள். எனவே, விளையாட்டை பற்றி சந்தேகங்கள் கேட்க ஆரம்பிப்பார்கள்.

சிரிப்பது

சிரிப்பது

மொக்கை ஜோக்குக்கு கூட கெக்கபிக்கவென ஓயாமல் ஊரை கூட்டும் அளவிற்கு சப்தம் போட்டு சிரிப்பார்கள்.

வழிக்கேட்பது

வழிக்கேட்பது

வழி தெரியவில்லை என்னுடன் வருகிறாயா என மறைமுகமாக உங்களை தங்களுடன் அழைத்து செல்ல ரூட்டு போடுவார்கள்.

கண்களை பார்ப்பது

கண்களை பார்ப்பது

பேசும் போது 99% ஷார்ப்பாக உங்கள் கண்களையே பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

துடுக்காக இருப்பது

துடுக்காக இருப்பது

உங்களுடன் வெளியே செயல்வது, பேசுவது, நேரம் செலவழிப்பது என அனைத்திற்கும் துடுக்காக செயல்படுவார்கள்.

தொட்டு பேசுவது

தொட்டு பேசுவது

பெண்கள் அவ்வளவு சீக்கிரமாக தொட்டு பேச மாட்டர்கள்., நெருங்கிய நண்பர்களாக இருப்பினும் கூட. ஆனால், தாங்கள் விரும்பும் ஆண்களை செல்லமாக தொட்டு பேசுவார்கள்.

சூசகமான புன்னகை

சூசகமான புன்னகை

இதழ்கள் இன்றே பூத்த ரோஜா மீது கோர்த்து நிற்கும் பனித்துளி போல அழகாக, சூசகமாக ஒரு புன்னகையை உங்கள் மீது தினமும் தூவி செல்வார்கள்.

அன்பு பரிசு

அன்பு பரிசு

காரணமின்றி அவ்வப்போது உங்களுக்கு பரிசு தருவார்கள். இதை வைத்தே நீங்கள் அந்த பெண் உங்களை காதலிக்கிறார் என முடிவு செய்துவிடலாம்.

முக பாவங்கள்

முக பாவங்கள்

உங்களிடம் பேசும் போது மட்டும் நவரசத்தையும் தாண்டி பல ரசங்கள் வெளிப்படும். கியூட் என்ற பெயரில் பலவகையிலான முக பாவங்களை வெளிப்படுத்துவார்கள்.

முடியுடன் விளையாடுவது

முடியுடன் விளையாடுவது

நீங்கள் பேசும் போது முடியை கோதிவிட்டுக் கொண்டே ஓர் பார்வையை உங்கள் மீது படரவிடுவார்கள்.

முன்னிரிமை

முன்னிரிமை

குறுஞ்செய்தி அனுப்புவதில் இருந்து, தன் வாழ்வில் அந்நாளில் நடந்த அனைத்து செய்தி மற்றும் விடயங்களை உங்களுடன் தான் முதலில் பகிர்ந்துக் கொள்வார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: love, காதல்
English summary

Twelve Subtle Ways To Hit On A Guy

Twelve Subtle Ways To Hit On A Guy, read here in tamil,
Story first published: Tuesday, March 1, 2016, 14:01 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter