தம்பதிகள் செய்ய வேண்டிய 10 விஷயங்கள் என உடலுறவு சிகிச்சையாளர்கள் கூறுபவை!

Posted By:
Subscribe to Boldsky

பெரும்பாலும் நம் மக்கள் வெளியே பேச கூச்சப்படும் விஷயம் தாம்பத்தியம் பற்றியவை. எங்கே இதற்கு போய் சந்தேகம் கேட்டால் தவறாக எடுத்துக் கொள்வார்களோ, அல்லது இதுக்கூட தெரியாதா என கேலி செய்வார்களோ என தாம்பத்தியம் குறித்த சந்தேகங்களுக்கு சரியான தீர்வு என்ன என்பதை அறியாமலேயே விட்டுவிடுகின்றனர்.

உடலுறவில் நம்மை அறியாமல் நாம் செய்யும் சில தவறுகள் உறவில் விரிசல் ஏற்படவும், சிலவகையான நோய் தொற்றுகள் உண்டாகவும் கூட காரணியாக இருக்கின்றன. எனவே, இந்த விஷயத்தில் சந்தேகங்களை மருத்துவர்களிடமே நேரடியாக கேட்டு தெளிவு பெறுவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புதுமை!

புதுமை!

தாம்பத்திய வாழ்க்கையில் எப்போதும் ஒரே மாதிரி / முறையில் ஈடுபடுவதை விட, புதுமையான முறையில் ஈடுபடுவது, உங்கள் மனதை இலகுவாக உணர வைக்கும், முழுமையான திருப்தி அளிக்கும் என உடலுறவு சிகிச்சையாளர்கள் கூறுகிறார்.

துவக்குவது!

துவக்குவது!

தம்பதிகள் மத்தியில், முதலில் நாம் தாம்பத்தியத்தில் ஈடுபட ஆர்வம் காட்டுவது தவறாக இருக்குமோ என்ற எண்ணம் உண்டாகலாம்.

சிலரது மத்தியில் கணவன் / மனைவி தான் எப்போதுமே முதலில் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக இருந்தால், இதற்காக வெட்க பட வேண்டாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஒருசிலருக்கு கூச்ச சுபாவமாக இருக்கலாம்.

ஆதலால், நீங்கள் வெளிப்படுத்தும் ஆர்வம் தாம்பத்தியம் மேலோங்க உதவுமே தவிர, தவறாக வாய்ப்பில்லை.

உறக்கம்!

உறக்கம்!

தம்பதிகள் இருவரும் ஒரே நேரத்தில் உறங்க செல்ல வேண்டியது கட்டாயம் என உடலுறவு சிகிச்சையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நீங்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் நிறைய பேசிக்கொள்ள முடியும், அன்யோன்யம் பெருகும்.

ஆர்வம்!

ஆர்வம்!

ஆர்வம் ஏற்படும் போது மட்டும் உடலுறவில் ஈடுபடுங்கள். துணை விருப்பமாக இருக்கிறார் என ஆர்வம் இல்லாமல் உறவில் ஈடுபடுவது, தாம்பத்தியத்தின் மீதான ஆசையை குறைக்கும். மேலும், விரக்தியாக உணர வைக்கும்.

பார்ன்!

பார்ன்!

பார்ன் பார்ப்பது தவறல்ல. ஆனால், அதே போல ஈடுபட நினைப்பது, தம்மால் அப்படி ஈடுபட முடியவில்லை என வருந்துவது தான் தவறு.

ரகசியம்!

ரகசியம்!

உங்கள் இருவருக்குள்ளும் எந்த ரகசியத்தையும் மறைத்து வைக்க வேண்டாம். மனதளவில் குழப்பம், சந்தேகம், பிரிவு ஏற்பட்டால் அது கண்டிப்பாக உடலுறவை பாதிக்கும்.

நிர்வாணம்!

நிர்வாணம்!

நிர்வாணமாக உறங்குவது மன ரீதியான இறுக்கத்தை, இணக்கத்தை அதிகரிக்க உதவுகிறது உடலுறவு சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர்.

சந்தேகங்கள்!

சந்தேகங்கள்!

உடலுறவு சார்ந்த சந்தேகங்கள், அல்லது உடலுறவு பற்றி பேசுவதை தவறாக நினைக்க வேண்டாம். உடலுறவு என்பது தம்பதி இருவர் மத்தியிலான அந்தரங்க சமாச்சாரம். உங்கள் இருவர் மத்தியிலான ஒன்றை நீங்களாக பேசி தெளிவு பெறுவது நல்லது.

பிரியம்!

பிரியம்!

உடலுறவுக்காக மட்டும் பிரியத்தை வெளிப்படுத்த வேண்டாம். உடலுறவில் ஈடுபடும் போது மட்டும் அதிக அன்பை காண்பிக்க வேண்டாம்.

குறித்த நாள்!

குறித்த நாள்!

இந்நாளில் உறவில் ஈடுபடுவோம் என்பதை முன்கூட்டியே முடிவு செய்துக் கொள்வது, உறவில் சிறந்த உணர்வை ஏற்படுத்தும். முக்கியமாக நடுவயதில் தாம்பத்தியத்திய உறவில் ஈடுப்படும் தம்பதிகளுக்கு இது சிறந்த வகையில் பயனளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things Intercourse Therapists Think We Should All Be Doing More Often

Things Intercourse Therapists Think We Should All Be Doing More Often
Story first published: Thursday, September 8, 2016, 13:55 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter