ஒவ்வொரு பெண்ணும் தன் துணையிடம் இருந்து கேட்க ஏங்கும் 10 விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

நீதான் என் உசுரு, மத்தவிங்க எல்லாம் எனக்கு முக்கியமே இல்ல தெரியுமா? என்பது போன்ற சில வாக்கியங்களை கேட்கும் போது, மிகையாக இருந்தாலும், பொய்யாக இருந்தாலும் கூட பெண்கள் அதிக சந்தோஷம் அடைவார்கள். மற்றும் இது போன்ற வாக்கியங்கள் தங்கள் துணையின் திருவாயில் இருந்து வராதா என ஏங்குவார்கள்.

திருமணமான பிறகு பெண்களிடம் திடீரென கவர்ச்சி அதிகரிப்பதற்கான காரணங்கள்!

பெரும்பாலான ஆண்கள் திருமணத்திற்கு முன்னர் கவிஞனாக வாழ்ந்தாலும், திருமணத்திற்கு பிறகு அந்த வேலையை ராஜினாமா செய்துவிடுகிறார்கள். சும்மா இருந்த புள்ளைய கிள்ளிவிட்டுட்டு, இப்போ ஒண்ணும் பேசாம இருந்தா எப்படி பாஸ். சில விஷயங்கள அறுபது வயசானாலும் செய்யனும்.

உறவில் பெண்கள் உச்சமடைவதை குறித்த 3 மூடநம்பிக்கைகள்!

இல்லறம் எப்பவும் நல்லறமா இருக்க, உங்க துணையின் முகத்தில் பூரிப்பு பூரி போல பெருசா எப்பவும் இருக்க இதெல்லாம் அப்பப்போ சொல்லுங்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 மொக்கையா இருந்தாலும்...

மொக்கையா இருந்தாலும்...

பெரிதாக எந்தவொரு மாற்றங்கள் இல்லையெனிலும், சாதாரணமாக இருந்தாலும் கூட, தினமும், நீ அழகா இருக்க, இது தான் உன்கிட்ட எனக்கு புடிச்ச விஷயம். இதனால தான் நான் உன்ன லவ் பண்ணேன் போல... என சில விஷயங்களை மொக்கையாக இருந்தாலும் அவர்களிடம் கூறி வெட்க பட வைக்கும் போது பெண்கள் அதிகம் மகிழ்வார்கள்.

 குறிப்பிட்டு கூறுவது

குறிப்பிட்டு கூறுவது

காதோரமா இருக்க அந்த முடி, நீ போன வாரம் வெச்சுருந்த அந்த நட்சத்திர போட்டு, அந்த டிரஸ் உனக்காகவே டிஸைன் பண்ண மாதிரி இருந்துச்சு தெரியுமா என ஒவ்வொரு விஷயத்தையும் நீங்கள் குறிப்பிட்டு கூறும் போது உங்கள் காதலி உற்சாகத்தின் உச்சத்திற்கே சென்றுவிடுவார்.

 நெருக்கம் காண்பித்தால்

நெருக்கம் காண்பித்தால்

உங்கள் துணையிடம் கூறாமல், அவர் வீட்டு உறவினர்களை சென்று பார்த்து வந்து ஆச்சரியப்படுத்துவது, அவர் வீட்டாருடனும் நெருக்கமாக பழகுதல்.

 கேட்டு, கேட்டு வேலை செய்வது

கேட்டு, கேட்டு வேலை செய்வது

சின்ன விஷயமாக இருப்பினும், இது செஞ்சா நல்ல இருக்குமா, இப்படி பண்ணலாமா, நீ என்ன சொல்ற? என உங்கள் துணையிடம் ஒருமுறை கேட்டு வேலை செய்வது.

 பில்டப்

பில்டப்

நீ தான் என் உயரு, மத்ததெல்லாம் எனக்கு முக்கியமே இல்ல என்பது போல அவ்வப்போது பில்டப் கொடுப்பது. தினமும் இந்த பில்டப் கொடுத்தால் கடுப்பாகிவிடுவார்கள்.

 உன்ன மாறி யாரு

உன்ன மாறி யாரு

எத்தனை பெண்களை சைட் அடித்தாலும், ரசித்தாலும், கடைசியில், உன்ன மாறி யாராலையும் வர முடியாது, நீ வேற ரேஞ்சு என்று புகழ்வது.

 கல்யாணம் பண்ணிக்கலாம்

கல்யாணம் பண்ணிக்கலாம்

உண்மையாகவே இருவரும் காதலித்தால், இந்த வார்த்தையை கேட்கும் போது, விளையாட்டாக கூறும் போது கூட மனதில் உற்சாகம் பொங்கிவழியும்.

 செல்ல பெயர்

செல்ல பெயர்

அவ்வப்போது, உங்கள் துணை விரும்பும் வகையிலான செல்ல பெயர்கள் வைப்பது. இது, அவர்களை மிகவும் மகிழ்ச்சியடைய வைக்கும். இதன் காரணத்தால் உங்கள் இல்லறமும் சிறக்கும்.

 எதிர்கால திட்டங்கள்

எதிர்கால திட்டங்கள்

அடுத்து நாம என்ன செய்ய போறோம், வீடு, நிலம், வாகனம் வாங்கும் திட்டங்கள் கூறுவது, அதற்காக நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பது பற்றி கூறுதல் போன்றவை உங்கள் துணையை மட்டற்ற மகிழ்ச்சியடைய வைக்கும்.

 ஆச்சரியப்படுத்தும் வகையிலான பரிசு

ஆச்சரியப்படுத்தும் வகையிலான பரிசு

அடடே, இத நீங்கள் பரிசா கொடுப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்ல.. என்று உச்சுக்கொட்டும் வகையில் பரிசு கொடுத்து அசத்தும் பொது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ten Things Every Girl Wants To Hear From Him

Ten Things Every Girl Wants To Hear From Him, read here in Tamil,
Please Wait while comments are loading...
Subscribe Newsletter