ரீல் காதல் vs ரியல் காதல், உங்க சாய்ஸ் என்ன?

Posted By:
Subscribe to Boldsky

அனைவருக்குமே ரீல் காதல் போன்ற சம்பவங்கள் தங்கள் காதலிலும் நடக்க வேண்டும் என்ற எண்ணம், ஆசைகள் இருக்கும். காரணம் சினிமாவின் தாக்கம் தான். இதன் காரணத்தால் ஆண்கள் பல சமயங்களில் சினிமாத்தனம் கலந்து காதலியை கொஞ்சுவது உண்டு.

தெறிக்க தெறிக்க ஷாலினியை காதலித்த அஜித்தை பற்றி உங்களுக்கு தெரியுமா!!!

உண்மையில் நீங்கள் சினிமா போன்று காதலிக்க வேண்டும் எனில், சண்டை பயிற்சி, குதிரை ஏற்றம், ஆடலும், பாடலும் என பல கலைகள் கற்று வைத்திருக்க வேண்டும். சத்தியமாக இது முடியாத காரியம் தான். அப்படி என்னதான் ரியல் காதலில் இல்லாதது, ரீல் காதலில் இருக்கிறது.

ரீல் காதல் சிறந்ததா? ரியல் காதல் சிறந்ததா? வாங்க பாப்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆல் ரவுண்டர்

ஆல் ரவுண்டர்

ரீல் வாழ்க்கையில் காதல் ஒரு ஆல்-ரவுண்டர் போல வளம் வருவார், ஆடல், பாடல், என அனைத்துக் கலைகளும் அவருக்கு அத்துப்படியாக இருக்கும்.

எல்லாம் அறிந்தவர்

எல்லாம் அறிந்தவர்

மேலும், சென்னையில் ஓர் மூலையில் வசித்து வரும் காதலன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ரூட் மேப்பை கூட அறிந்து வைத்தது போல செயல்படுவார். குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல், தாவி, தாவி சண்டை போடுதல் என அனைத்தும் கற்றறிந்த முனியாக இருப்பார்.

வண்ணமயமானது அல்ல

வண்ணமயமானது அல்ல

ரியல் காதல் வாழ்க்கை வண்ணமயமாக இல்லாமல் இருந்தாலும், இன்பமயமாக இருக்கும். கலர் போட்டோவைவிட கருப்பு வெள்ளை புகைப்படம் தான் மிகவும் ஈர்ப்பாக இருக்கும். அப்படி தான் ரீல் காதலும், ரியல் காதலும். ரியல் காதல் மனதை ஈர்க்கும் கருப்பு வெள்ளை புகைப்படம்.

உங்களுடன் தான் இருப்பார்

உங்களுடன் தான் இருப்பார்

சினிமாவில் காண்பிப்பது போல ஹீரோ நொடிக்கு, நொடிக்கு காதலி நினைக்கும் இடங்களில் எல்லாம் இருக்க மாட்டார். ரியல் காதலில் உங்கள் காதலன் உங்களோடு தான் எப்போதும் இருப்பார் (மனதில்), நினைக்கும் நொடியில் முன்னே தோன்ற ரியல் காதலன் சக்திமான் அல்ல.

சுவாரஸ்யங்கள்

சுவாரஸ்யங்கள்

ரீல் காதலைவிட, ரியல் காதலில் சுவாரஸ்யங்கள் அதிகம். அதிகபட்சம் ரீல் காதலில் ஆடலும், பாடலும் தான் சுவாரஸ்யம். ஆனால், ரியல் காதலில் உங்கள் காதலி வாங்கி தரும் சின்ன, சின்ன பரிசில் இருந்து என்றேனும் ஒருநாள் சமைத்து தரும் உணவு வரை அனைத்துமே சுவாரஸ்யம் தான்.

எதிர்பாராத திருப்பங்கள்

எதிர்பாராத திருப்பங்கள்

ரீல் காதலிலும், ரியல் காதலிலும் மாற்றம் இல்லாமல் இருப்பது எதிர்பாராத திருப்பங்கள் தான். மற்றபடி ரீல் காதல் மனம் வீசாதா காகிதப் பூ. ரியல் காதல் வாடிப் போனாலும் மனதில் இருந்து நீங்கா வாசத்தை தந்துப் போகும் ஒரு உயிர் பூ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Real Vs Reel Love: Which Do You Prefer?

Real Vs Reel Love: Which Do You Prefer? read here in tamil.
Story first published: Tuesday, February 23, 2016, 16:42 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter