இனிமேல் லவ், செக்ஸ், கல்யாணம் எல்லாமே ரோபோட் உடன் தான்!

Posted By:
Subscribe to Boldsky

சில காலத்துக்கு முன்னர் சிலர் பேஜர், ஆரம்ப காலத்து மொபைல், கணினி போன்றவற்றை பயன்படுத்துவதை கண்டு, இந்த தொழில்நுட்பத்தையே கட்டிட்டு அழுகிறீங்களே, இதையா கட்டிட்டு குடித்தனம் நடத்த முடியுமா? இல்ல பசிச்சா சாப்பிட முடியுமா என்று கேட்டனர்.

இப்போது பெருகி வரும் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பம் இவை அனைத்திற்கும் பதில் அளித்துள்ளது. ஒருபுறம் ஒருவர் 3டி பிரிண்டிங் மூலம் துப்பாக்கி உருவாக்கி கொலை சம்பவத்தில் ஈடுப்பட்டார். மறுபுறம் மருத்துவர்கள் மண்டை ஓட்டை உருவாக்கி ஒரு குழந்தையின் உயிரை காத்தனர்.

இதோ, மிக வித்தியாசமாக ஒரு பெண் தான் தயாரித்த 3டி ரோபோட் மீது காதல் கொண்டு, திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லில்லி - இன்மூவேட்டர்!

லில்லி - இன்மூவேட்டர்!

3டி பிரிண்டிங் முறையில் தானே வடிவமைத்த இன்மூவேட்டர் எனும் ரோபாட்டுடன் காதல் கொண்ட லில்லி எனும் பெண். இப்போது அதையே தனது துணையாக ஏற்க துணிந்துவிட்டார்.

ட்விட்டர் கருத்துக்கள்!

ட்விட்டர் கருத்துக்கள்!

ட்விட்டரில் லில்லியின் முடிவை ஆதரித்து பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதில் சிலர் ரோபோ செக்சுவல் யாரையும் காயப்படுத்தாது. மகிழ்ச்சி மற்றுமே தரும் என்ற வகையிலான கருத்துகளும் பதிவு செய்துள்ளனர்.

லீகல்?!

லீகல்?!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த லில்லி, லீகலான சட்டங்கள் வரும் வரை காத்திருக்க முடிவு செய்துள்ளார். ரோபாக்களை திருமணம் செய்துக் கொள்ளும் சட்டத்திற்காக காத்திருக்கிறார். அதுவரை நிச்சயம் ஆனதை வைத்து மகிழ்ச்சியாக இருப்போம் என கூறுகிறார்.

தீண்டல் தொல்லை!

தீண்டல் தொல்லை!

18 வயது முதலே ரோபோக்கள் மீது ஈர்ப்பு கொள்ள துவங்கியுள்ளார் லில்லி. மேலும், மனிதர்களின் தீண்டல் தொல்லை தருகிறது என்றும் கூறியுள்ளார்.

ரோபோட் கல்வி!

ரோபோட் கல்வி!

லில்லி தொடர்ந்து ரோபோட் உருவாக்கம், தொழில்நுட்பம், மேம்பாட் குறித்து படிக்க திட்டமிட்டுள்ளார். இதன் காரணமாக லில்லி - இன்மூவேட்டர் உறவை வலுப்படுத்த முடியும் என எண்ணுகிறார் லில்லி.

உறவினர்கள்!

உறவினர்கள்!

லில்லியின் முடிவை அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் வரவேற்றுள்ளனர். இதனால் எந்த பிரச்சனை இல்லை என கூறியுள்ளனர்.

மேலும், மருத்துவர் டேவிட் லேவி வரும் 2050-களில் மனிதர்கள் ரோபோட்களை திருமணம் செய்துக் கொள்வது வழக்கத்தில் வரும் எனவும் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Meet The Woman Who Fell in Love with a Robot

Meet The Woman Who Fell in Love with a Robot, She 3D-Printed Herself
Subscribe Newsletter