Latest Updates
-
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
தேங்காய் எண்ணெய்யை லியூப்ரிகன்டாய் பயன்படுத்துவது சரியா? தவறா?
ஏன் லியூப்ரிகன்ட் அவசியம்? - உடலுறவில் ஈடுபடும் போது பல சமயங்களில் உராய்வு காரணமாக, பிறப்புறுப்பு வறட்சி காரணமாக வலி உண்டாகும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதை தவிர்க்க தான் லியூப்ரிகன்ட் பயன்படுத்த வேண்டும் என கூறப்படுகிறது.

லியூப்ரிகன்ட் என்றால் என்ன? - லியூப்ரிகன்ட் என்பது உராய்வு ஏற்படுவதை தடுக்கும் எண்ணெய் தான். ஒருசில ஆணுறைகளில் உராய்வை தடுக்க செயற்கை லியூப்ரிகன்ட்கள் சேர்த்து தயாரிக்கின்றனர். இதனால் உறவில் ஈடுபடும் போது உராய்வு தடுக்கப்படும்.

இயற்கை எண்ணெய் ஏன்?
எண்ணெய்கள் இயற்க்கை லியூப்ரிகன்டாய் சிலர் பயன்படுத்துவார்கள். ஆனால், எல்லா எண்ணெய்களும் இவ்வாறு பயன்படுத்த முடியாது / கூடாது. பிறப்புறுப்பு மென்மையான சென்ஸிட்டிவான பகுதி என்பதால் எண்ணெய் தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும்.

தேங்காய் எண்ணெய்!
தேங்காய் எண்ணெய் இயற்கையானது மற்றும் மருத்துவ குணம் கொண்டுள்ளது. மேலும், இது சருமத்திற்கு உகந்த எண்ணெய். இதனால் எந்த பக்கவிளைவுகளும் உண்டாக வாய்ப்புகள் இல்லை.

செயற்கை லியூப்ரிகன்ட் தாக்கங்கள்!
சந்தையில் செயற்கை லியூப்ரிகன்ட்களும் விற்கப்படுகின்றன. ஆனால், இவற்றில் கிளிசரின், பாராபென், ப்ரோபைல்பாராபென், மெத்தில்பாராபென் மற்றும் பல பயன்படுத்தப்படுகின்றன. செயற்கை பொருட்களான இவை கண்டிப்பாக எதிர்மறை பக்கவிளைவுகள் உண்டாக்கும் வாய்ப்புகள் உள்ளன.

பக்கவிளைவுகள்!
செயற்கை லியூப்ரிகன்ட் பயன்பாட்டால், எரிச்சல், அரிப்பு, ஈஸ்ட் தொற்று போன்றவை உண்டாக வாய்ப்புகள் இருக்கின்றன.

மருத்துவர் ஆலோசனை!
ஒருசிலருக்கு பிறப்புறுப்பு பகுதியில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறது எனில், தேங்காய் எண்ணெயே ஆயினும், மருத்துவரிடம் ஆலோசித்துவிட்டு பயன்படுத்துவது சிறந்தது.



Click it and Unblock the Notifications
