சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-ன் சுவாரஸ்யமான காதல் கதை!

Posted By:
Subscribe to Boldsky

சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருந்த ஓர் பெரிய நடிகர் தன்னை பேட்டி எடுக்க வந்த பெண்ணை திருமணம் செய்துக் கொண்டதே சுவாரஸ்யமான ஒன்று தான். அதையும் கடந்து ரஜினி லதா இருவரது காதல் கதையில் நிறைய சுவாரஸ்யங்கள் இருக்கின்றன.

தெறிக்க தெறிக்க ஷாலினியை காதலித்த அஜித்தை பற்றி உங்களுக்கு தெரியுமா!!!

ரஜினி - லதா அவர்களுடையது பொதுவான காதல் கதை போன்றது அல்ல. கிட்டத்தட்ட இவர்களது காதல் கதையை திரைப்படமாக எடுத்தாலே நன்கு ஓடும். ஓர் நடிகன் ஓர் சாதாரண பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள ஆசைப்பட்டால் எப்படி இருக்கும்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேட்டியில் முளைத்த காதல்

பேட்டியில் முளைத்த காதல்

எத்திராஜ் கல்லூரியில் ஆங்கிலம் இலக்கியம் படித்து வந்த லதா ரங்காச்சாரி எனும் மாணவிக்கு, கல்லூரி பத்திரிக்கைக்காக அன்றைய முன்னணி நடிகரான சூப்பர்ஸ்டார் ரஜினியை பேட்டி எடுத்து வர வேண்டும் என்ற வேலை கொடுக்கப்பட்டது.

பேட்டியில் முளைத்த காதல்

பேட்டியில் முளைத்த காதல்

அந்த பேட்டி எடுக்க சென்ற தருணம் தான் லதா ரங்காச்சாரி லதா ரஜினிகாந்தாக மாற தொடக்கப்பள்ளியாக அமைந்தது.

தில்லுமுல்லு

தில்லுமுல்லு

தில்லுமுல்லு திரைப்பட ஷூட்டிங்-ன் போது தான் இருவரும் ரஜினியும் லதாவும் முதன் முறையாக ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக் கொண்டனர்.

திணற வைத்த ரஜினி

திணற வைத்த ரஜினி

பேட்டியின் போதே லதாவை திருமணம் செய்துக் கொள்கிறாயா? என கேள்விக் கேட்டு திணற வைத்தாராம் ரஜினி. இதற்கு லதா பெற்றோரிடம் கேட்டு சொல்வதாய் கூறி சென்றார், என ரஜினியின் சகோதரர் சத்யநாராயணன் கூறியுள்ளார்.

காதல் சொல்லவே இல்லை

காதல் சொல்லவே இல்லை

கடந்த 2012-ம் ஆண்டு ஒரு பேட்டியில்,

ரஜினி தன்னிடம் ஒருமுறை கூட காதலிப்பதாக சொல்லவில்லை. நேரில் பார்த்த போது திருமணம் செய்துக் கொள்வோமா என்று கூறிவிட்டு நகர்ந்து சென்றுவிட்டார் என குறிப்பிட்டு கூறியிருந்தார்

ரஜினியை அறிய ஆரம்பித்த லதா

ரஜினியை அறிய ஆரம்பித்த லதா

பிறகு கொஞ்சம், கொஞ்சமாக ரஜினியை அறிந்துக் கொள்ள ஆரம்பித்தார் லதா. அவரது குழந்தை கால வாழ்க்கை, இளம் வயதில் அம்மாவை இழந்தது. பல தடைகளை தாண்டி நடிகனாக வென்றது என ரஜினியை மொத்தமாக அறிந்துக் கொள்ள துவங்கினர் லதா.

தாய்மை

தாய்மை

ரஜினியை சந்தித்த தருணத்தில் ரஜினி நரம்பியல் பிரச்சனையில் இருந்து வெளிவந்துக் கொண்டிருந்தார். அவருக்கு தாய்மை அன்பு தேவை என்பதை உணர்ந்தார் லதா.

திருமணதிற்கு முன்பே அன்பும், அக்கறையும்

திருமணதிற்கு முன்பே அன்பும், அக்கறையும்

ரஜினி நரம்பியல் பிரச்சனையில் இருந்து வெளிவந்தால் மொட்டை அடித்துக் கொள்கிறேன் என்று வேண்டிக் கொண்டாராம் லதா. அதே போல ரஜினிக்கு சரி ஆனதும், மொட்டையும் அடித்துக் கொண்டார்.

திருமண சம்மதம்

திருமண சம்மதம்

ரஜினியின் அண்ணன் சத்யநாராயணன் மற்றும் முரளி பிரசாத் லதாவின் பெற்றோர்களை சந்தித்து திருமணத்திற்கு சம்மதம் வாங்கினர்.

2 வருடத்தில் 36 படம்

2 வருடத்தில் 36 படம்

1978-79 என இரண்டு ஆண்டுகளில் தினமும் ஷூட்டிங் சென்று நடித்து வந்தார் ரஜினி. தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் என பகலில் ஷூட்டிங், இரவில் பயணம் என ஓய்வு இன்றி நடித்தது தான் ரஜினிக்கு நரம்பியல் பிரச்சனை ஏற்பட காரணமாக இருந்தது என கூறப்படுகிறது.

திருமணம்

திருமணம்

அனைத்தும் சரியாகிய பிறகு 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி இருவரும் திருப்பதி கோவிலில் திருமணம் செய்துக் கொண்டனர்.

ஆன்மீகம்

ஆன்மீகம்

ரஜினியின் ஆன்மீகம் மற்றும் திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட நிறைய மாற்றங்களுக்கு லதா ரஜினியின் காதலும், அன்பும் தான் காரணம். அன்பான மனைவி இருந்தால் எந்த பிரச்சனையையும் எளிதாக கடந்து வரலாம் என்பதற்கு இந்த ஜோடி ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Interesting Love Story Of Legendary Actor Rajinikanth

Interesting Love Story Of Legendary Actor Rajinikanth, read here in tamil.
Story first published: Friday, February 26, 2016, 14:45 [IST]