மீசை வைத்த ஆண்கள் செக்ஸியானவர்கள்: பெண்கள் கூறும் நான்கு காரணங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

நமது தமிழக கலாச்சாரத்தில் மீசை என்பது ஆண்களின் வீரத்தையும், ஆண்மையையும் குறிக்கும் ஓர் இலட்சினையாக கருதப்பட்டு வரும் ஒன்று.

இடையே சற்று டீசன்ட் லுக், ஸ்மார்ட் லுக் என மீசை வைப்பதை தவிர்த்து வந்த நமது இளைஞர்கள் இப்போது மீண்டும் டிஸைன், டிஸைனாக மீசை, தாடி வைக்க துவங்கிவிட்டனர்.

Four Reasons Women Find Mustaches Sexy

இந்த தலைமுறை இளம் பெண்களுக்கு மீசை வைத்த ஆண்களை மிகவும் பிடிக்கிறதாம். மீசை வைத்துள்ள ஆண்கள் தான் மிகவும் செக்ஸியாக தோற்றமளிக்கின்றனர் என்றும் இன்றைய இளம் தலைமுறை பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், ஆண்களின் மீசை மீதான ஆசைக்கான நான்கு காரணங்களும் பகிர்ந்துள்ளனர்.

Four Reasons Women Find Mustaches Sexy

காரணம் #1

மீசை முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது. பதின் வயது ஆண்களாக இருப்பினும் கூட மீசை ஆண்மை அடைந்ததை வெளிகாட்டும் அறிகுறியாக தென்படுகிறது. இது, அவர்கள் மீது ஈர்ப்புக் கொள்ள ஓர் காரணியாக விளங்குகிறது என சில பெண்கள் கூறியுள்ளனர்.

காரணம் #2

பொதுவாகவே மீசை வைத்த ஆண்கள் தான் முழுமையான ஆண்களாக காணப்படுகின்றனர். குறைந்தபட்சம் ட்ரிம் செய்த மூன்று நாள் மீசையாவது இருந்தால் தான் அது ஆண்களுக்கு அழகு.

Four Reasons Women Find Mustaches Sexy

காரணம் #3

நமது ஊர்களில் மீசை ஆண்களின் வீரம், ஆண்மையை வெளிப்படுத்துகிறது என்று கூறுவார்கள். ஆனால், அதற்கும் மேல் அது அவர்களது துணிவை எடுத்துக் காட்டும் கருவியாக இருக்கிறது. மேலும், ஸ்டைலாக மீசை வைப்பது அவர்களை செக்ஸியாக உணர வைக்கிறது.

காரணம் #4

மீசை மட்டுமல்ல, ஆண்கள் என்றாலே முகத்தில் சற்று முடி இருக்க வேண்டும். மூன்று நாள் தாடி, மீசை தான் ஆண்களை ஆணாகவே எடுத்துக் காட்டுகிறது. இல்லையேல் குழந்தை போன்ற தோற்றம் தான் இருக்கும்.

அடடே!!! அப்பறம் என்ன மீசையை தீனி போட்டு வளர்க்க ஆரம்புச்சிடுங்க!

English summary

Four Reasons Women Find Mustaches Sexy

Four Reasons Women Find Mustaches Sexy
Subscribe Newsletter