இந்த 9 விஷயங்களில் உங்களால் பெண்களிடம் விவாதித்து ஜெயிக்கவே முடியாது!

Posted By:
Subscribe to Boldsky

காதலி, மனைவியிடம் விவாதம் செய்வது சற்றே சுவாரஸ்யமான நிகழ்வு, சரியான சூழ்நிலையில் நடந்தால். இல்லையேல், இது சண்டையில் சென்று தான் முடியும். பெரும்பாலும், பெண்கள் விவாதம் செய்ய ஆரம்பிக்கும் போதே, அதற்கான பதில் இது தான், தீர்வு இது தான், இதை தான் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது போல தான் ஆரம்பிப்பார்கள்.

இந்த விஷயம் எல்லாம் ஆண்கள் வெளிப்படையாக பேசினால் பெண்களுக்கு பிடிக்காதாம்!

சில விஷயங்கள் சார்ந்து நீங்கள் விவாதம் செய்யும் போது, ஊர்ஜிதமாக சொல்ல முடியும், நீங்கள் கண்டிப்பாக அந்த விவாதத்தில் உங்கள் மனைவியிடம் ஜெயிக்கவே முடியாது என. முக்கியமாக அவர்கள் வீட்டு ஆட்கள் பற்றி. அப்படியே நீங்கள் வெல்லும் தருவாய் வந்தாலும், முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு ஆண்களை சமாதானம் பேச வைத்துவிடுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விவாதம் # 1

விவாதம் # 1

நீங்கள் செய்த பழைய தவறுகளை சுட்டிக்காட்டி விவாதிக்கும் போது. நீங்கள் உங்கள் காதலி / துணையிடம் அவர்கள் செய்த தவறை பற்றி கூறும் பொது, நீங்கள் என்றோ கற்காலத்தில் செய்த தவறை தோண்டி எடுத்து விவாதிப்பார்கள். இந்த விவாதத்தில் உங்களால் ஜெயிக்கவே முடியாது.

விவாதம் # 2

விவாதம் # 2

உணர்ச்சிகரமான உங்கள் காதலி பேசும் விவாதங்களை உங்களால் ஜெயிக்க முடியாது. காதல், அக்கறை, அன்பு, குடும்பம், அண்ணன், தங்கை, அப்பா, அம்மா குறித்து பேசும் போது உங்களால் பெண்களை வெல்ல முடியாது. முக்கியமாக அவர்கள் வீட்டு ஆட்களை பற்றி பேசும் போது.

விவாதம் # 3

விவாதம் # 3

வம்படியாக சண்டையிட உங்கள் மீது பழிசுமத்தி குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யும் போது. சில சமயங்களில் நீங்கள் செய்தது தான் தவறு என முன்பே தீர்ப்பு எழுதிவிட்டு பெண்கள் சண்டையிட வருவார்கள். அதை எல்லாம் நீங்கள் என்ன முக்கி, முனங்கினாலும் ஒன்றும் செய்ய முடியாது.

விவாதம் # 4

விவாதம் # 4

உங்கள் நண்பர்களை பற்றி அவதூறு சொல்லி விவாதிக்கும் போது. பெண்களை பொறுத்தவரை, தனது கணவன் / காதலன் கெட்டு சீரழிவதற்கு முக்கிய காரணம் அவர்களது நண்பர்கள் தான். இது பண்டையக் காலத்தில் இருந்து பெண்களால் வரையறுக்கப்பட்ட ஒரு விஷயம். நண்பர்கள் பற்றிய விவாதத்தில் நீங்கள் உங்கள் துணையை வென்றுவிட்டால் நீங்கள் பலே கில்லாடி தான்.

விவாதம் # 5

விவாதம் # 5

ஒருவேளை நீங்கள் இரு விவாதத்தில் வெல்வது போன்று இருந்தால், பெண்கள் தங்கள் கடைசி ஆயுதத்தை பயன்படுத்துவார்கள், அதை தாண்டி எந்த ஆணாலும் பெண்களை வெல்ல முடியாது. ஆம், கண்ணை கசக்கி கொண்டு பெண்கள் விவாதிக்கும் எந்த விஷயத்திலும் உங்களால் ஜெயிக்க முடியாது.

விவாதம் # 6

விவாதம் # 6

பழைய காதல் எல்லாம் ஏதோ ஓ.எல்.எக்ஸில் விற்பது போல ஆகிவிட்டது. "புடிக்கல, வேணாம், அவ்வளோ தான்!" இதற்கு மீறி பெரிய பின்னணி, காரணங்கள் கூறி யாரும் இங்கு பிரிவது இல்லை. பழைய காதல் பற்றி ஏதோ ஓர் சூழலில் பேசி விவாதம் எழுந்துவிட்டால், கண்டிப்பாக தோல்வி அடைய போவது ஆண்கள் தான்.

விவாதம் # 7

விவாதம் # 7

பெண்கள் ஷாப்பிங் செய்வது பற்றி ஆண்களுக்கு மாத இறுதியில் பட்ஜெட்டில் துண்டு விழுகும் போது தான் கோபம் வரும். இதை எடுத்துக் கொண்டு அவர்களிடம் விவாதிக்க போனால், கண்டிப்பாக நீங்கள் பைக்கிற்கு பெட்ரோல் அடிப்பதில் இருந்து, சிகரட், நண்பர்களுடன் வெளியே செல்வது என ஓர் பட்டியலை முன்வைத்து ஜாமீன் வாங்கிவிடுவார்கள்.

விவாதம் # 8

விவாதம் # 8

மளிகைக்கடையில் இருந்து சினிமாவில் டிக்கட் வாங்கும் வரை பெண்கள் போய் நின்றால் அவர்களுக்கு தான் முதலில் தருகிறார்கள். ஏன் ஆன்லைன் பஸ் டிக்கட் புக் செய்வதற்கு கூட ஆண்கள் அருகில் பெண்கள் புக் செய்யலாம், ஆனால், பெண்கள் அருகில் ஆண்களால் புக் செய்ய முடியாது. இதையெல்லாம் கூறினால், ஆண்களை திட்டுவார்கள், உரிமையே இல்லை என்பார்கள்.

விவாதம் # 9

விவாதம் # 9

நான் புடிச்ச முயலுக்கு மூணு கால்! பெண்கள் ஓர் விஷயத்தை கூறிவிட்டால், அதை தவறென ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நீங்கள் உரிய ஆவணம் சமர்பித்து கூறினால், எப்போ இப்படி மாத்துனாங்க...? என்று கூறிவிட்டு, அமுக்கமாக சென்றுவிடுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Nine Situations Where You Can Never Win An Argument Against Your Girlfriend

Five Situations Where You Can Never Win An Argument Against Your Girlfriend, read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter