For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதல் வாழ்க்கைக்கு உலை வைக்கும் 8 செயல்கள்!

|

அமிர்தமாக இருந்தாலும் அளவாக உண்ண வேண்டும் என்பார்கள். ஆம், சர்க்கரை அதிகமாக சேர்த்துக் கொண்டால் நீரிழிவு ஏற்படுவது போல தான். உறவுகளிலும் சிலவற்றை நீங்கள் அளவுக்கு அதிகமாக செய்யும் போது அது தீய தாக்கத்தை ஏற்படுத்தும்.

பொதுவாக பெண்கள் பிடிவாதம் பிடிப்பது அழகாக தான் இருக்கும். ஆனால், எப்போதுமே பிடிவாதம் பிடித்தால் செம கடுப்பாகிவிடும். சிலர் சோகமாக பேசி ஆளை மடக்கும் வித்தை கற்று வைத்திருப்பார்கள். ஆனால், எப்போதுமே இப்படி இருந்தால் உறவு சிதைந்துவிடும்.

அழகான, ஆழமான செயல்கள் கூட அளவுக்கு அதிகமாக போகும் போது எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பகிர்ந்துக் கொள்ளுதல்

பகிர்ந்துக் கொள்ளுதல்

முதலில் அவரை முழுமையாக புரிந்துக் கொள்ளுங்கள், தெரிந்துக் கொள்ளுங்கள். பிறகு உங்களை பற்றிய விஷயங்களை சொல்ல ஆரம்பியுங்கள்.

பகிர்ந்துக் கொள்ளுதல்

பகிர்ந்துக் கொள்ளுதல்

ஒருவரை ஒருவர் முழுமையாக புரிந்துக் கொள்ளும் முன்னர் உங்களை பற்றிய அனைத்து விஷயங்களையும் பகிர்ந்துக் கொள்வது நிச்சயமாக சில கசப்பான நிகழ்வுகளை உண்டாக காரணமாக அமையும்.

பிடிவாதம் / வாக்குவாதம்

பிடிவாதம் / வாக்குவாதம்

பிடிவாதம், வாக்குவாதம், ஓர் நல்ல உறவில் விரிசலை ஏற்படுத்தும் கருவிகள். ஆரம்பக் காலக்கட்டத்தில் இது விளையாட்டாக இருந்தாலும், தொடர்ந்து இப்படி இருப்பது சண்டையில் கொண்டு போய் விட்டுவிடும்.

பழையதை மறந்துவிடுங்கள்

பழையதை மறந்துவிடுங்கள்

கண்டிப்பாக உங்களுக்கு பிடித்த அல்லது நீங்கள் விரும்பிய நபரே கூட உங்கள் வாழ்க்கையில் இருக்கலாம். அதற்காக அவர்களை பற்றி இன்றும் நினைத்துக் கொண்டே இருப்பது, அவர்களை பற்றிய புகழ் பாடுவது போன்றவற்றை நீங்கள் தவிர்க்க தான் வேண்டும்.

விரக்தி

விரக்தி

எப்போதுமே ஏதாவது ஒன்றை பறிக்கொடுத்தாற்போல் விரக்தியாகவே இருக்க வேண்டாம். இது காதல் வாழ்க்கை மட்டுமின்றி உங்களது இயல்பு வாழ்க்கையையும் பாதிக்கும் ஓர் பழக்கம்.

சமூக ஊடகங்கள்

சமூக ஊடகங்கள்

சமூக ஊடகங்கள் ஒன்றும் உங்களது தனிப்பட்ட டைரி அல்ல. அதில் அனைத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டாம். சில அந்தரங்க, தனிப்பட்ட செயல்களை எல்லாம் அதில் பதிவேற்றம் செய்வது, பிரச்சனையை பூதாகரமாக மாற்றிவிடும்.

அனுமானம்

அனுமானம்

உண்மை அறியாமல் யாரோ கூறும் வார்த்தையை வைத்து நீங்களாக ஓர் அனுமானத்திற்கு வர வேண்டாம். பின்னாளில் இவை மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும்.

அதிகமாக எதிர்பார்ப்பது

அதிகமாக எதிர்பார்ப்பது

அமிர்தமாகவே இருப்பினும் அளவாக தான் இருக்க வேண்டும். எனவே, காதலாகவே இருப்பினும் கூட அதில் அளவான எதிர்பார்ப்பு வையுங்கள். இல்லையேல் நிச்சயம் மனம் உடைந்து போக வேண்டிய சூழல் ஏற்படும்.

சண்டை / விட்டுக்கொடுப்பது

சண்டை / விட்டுக்கொடுப்பது

எதற்கும் பயப்பட வேண்டாம், சண்டைப் போட தோன்றினால் உடனே போட்டுவிடுங்கள். விட்டுக் கொடுக்க முடியாது, அது எனக்கு பிடித்தது என்றால் மனம் திறந்து பேசுங்கள். பயப்படுவது, அஞ்சி நடுங்குவது காதலில் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eight Ways to Ruin Romance

Eight Ways to Ruin Your Romance Life, read here in tamil.
Desktop Bottom Promotion