உடலுறவில் வலியின்றி ஈடுபடக் கற்றுக்கொள்ளுங்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

உடலுறவில் ஈடுபடுவது என்பது இயல்பு. ஆனால், ஆண் பெண் இருவரும் விரும்பி ஈடுபட வேண்டும் என்பது முக்கியமானது. கணவன், மனைவியாகவே இருப்பினும் விருப்பமின்றி உடலுறவில் ஈடுபடுவது கற்பழிப்புக்கு சமம். அதிலும் உங்கள் துணைக்கு வலி ஏற்படும் வண்ணம் உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டியது அவசியம்.

மாதவிடாய் காலத்தில், அவர்கள் பிறப்புறுப்பை சுத்தம் செய்த நாட்களில், உடல்நிலை சரியில்லாத போது, உடல் சோர்வாக இருக்கும் போது, நன்கு உறங்கும் போது என சில சூழல்களில் அவர்களை கட்டாயப்படுத்தி உடலுறவில் ஈடுபட வைப்பது உடலளவிலும், மனதளவிலும் பாதிப்படைய வைக்கும் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாதவிடாயின் போது வேண்டாம்

மாதவிடாயின் போது வேண்டாம்

மாதவிடாய் காலத்திலும் சிலர் உடலுறவில் ஈடுபட விரும்புவார்கள். ஆனால், அது வேண்டாம். உங்கள் துணையின் உணர்வை புரிந்துக் கொண்டு, அவரது மனநிலைக்கு ஏற்ப நடந்துக் கொள்ளுங்கள்.

உணர்வின்றி ஈடுபடாதீர்கள்

உணர்வின்றி ஈடுபடாதீர்கள்

ஆண், பெண் இருவருக்கும் உடலுறவில் ஈடுபட நாட்டம் இன்றி ஈடுபடும் போது வலி ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இது போன்ற சூழல்களில் கட்டாயப்படுத்தி ஈடுபடுவதை தவிர்த்து, விட்டுவிடுவது நல்லது.

கருத்தடை இன்றி

கருத்தடை இன்றி

ஆண்கள் கருத்தடை மாத்திரை பயன்படுத்தாத போது உறவில் ஈடுபட தயங்குவது உண்டு. அந்த சமயங்களில் பெண்கள், நீங்கள் கருத்தடை மாத்திரை உட்கொள்ள முடியாத சூழலில் இருப்பதை உங்கள் துணையிடம் கூறிவிடுங்கள்.

தூக்கம் வரும் போது

தூக்கம் வரும் போது

நல்ல உறக்கம் வரும் போது உங்கள் துணையை கட்டாயப்படுத்தி உறவில் ஈடுபட வேண்டாம். வேண்டுமானாலும் கொஞ்சி விளையாடுங்கள். அந்த நேரத்தில் உடலுறவில் ஈடுபட துடிப்பது சண்டையில் கூட முடியலாம்.

வேக்ஸிங்

வேக்ஸிங்

பெண்கள் அந்த இடத்தில் வேக்ஸிங் செய்திருக்கும் போது குறைந்தது ஓர் நாளாவது எரிச்சல் இருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, அந்த நேரத்தில் உடலுறவில் ஈடுபட அடம்பிடிக்க வேண்டாம்.

வயிறு கோளாறு

வயிறு கோளாறு

வயிறு சார்ந்த கோளாறு இருக்கும் போது உடலுறவில் ஈடுபட விரும்பாதீர்கள். இது அவர்களை உடலளவிலும், மனதளவிலும் மிகவும் பாதிப்படைய வைக்கும்.

மன அழுத்தம் இருக்கும் போது

மன அழுத்தம் இருக்கும் போது

உடலுறவில் ஈடுபடுவது மன அழுத்தத்தை குறைக்கும் என்று கூறுவது உண்டு. ஆனால், மன அழுத்தம் இருக்கும் போது சிறு தூக்கம் அல்லது வெளிய சிறிது நேரம் நடந்துவந்த பிறகு உடலுறவில் ஈடுபடுவது தான் சரியான பயனளிக்கும். ஒருவேளை அப்போதும் உங்கள் துணை மன அழுத்தத்தோடு காணப்பட்டால் உடலுறவில் ஈடுபடுவதை தவிர்த்துவிடுவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Learn The Ways To Say No To Lovemaking Without Hurting The Partner

You dont have to push yourself into it, if you dont want to get naughty with your partner. Here are some ways to say no to lovemaking if your not in mood
Story first published: Thursday, October 29, 2015, 15:54 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter