கேண்டி க்ரஷ் பெண்களும், க்ளேஷ் ஆப் கிளான்ஸ் ஆண்களும்!!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய நிலையில் மொபைல் பயன்பாடு என்பது மிகவும் அத்தியாவசியமாக மாறிவிட்டது. ஆனால், நமது தேவையை தாண்டி வேண்டாத விஷயங்களுக்கு தான் மொபைலை நாம் அதிகமாக பயன்படுத்துகிறோம். இன்னமும் கூட இதை மொபைல் என்று கூறுவதை விட, கையடக்க உலகம் என்று தான் கூற வேண்டும்.

நேரம் பார்ப்பதில் இருந்து, இடங்களை தேடுவது, கேளிக்கை, விளையாட்டு, உறவு, படிப்பு என 'அ' முதல் 'ஃ'-ன்னா வரை அனைத்தையும் இதன் மூலம் எட்டிப்பிடிப்பது என்பது மிகவும் எளிதான காரியமாகிவிட்டது. இந்த மொபைல் புரட்சி என்பது அபரிமிதமாக வளர்ந்துவிட்டது. இதனால் நாம் அடையும் நன்மைகளுக்கு இணையாக தீமைகளும் வளர்ந்துக் கொண்டே செல்கின்றன.

உறவுகள் என்பது உணர்வுகளின் பாலம். அதன் ஆணிவேரையே அசைத்து பார்க்கிறது இந்த மொபைல் புரட்சி என்பது தான் கொடுமையான உண்மை....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எமொஜி - emoji

எமொஜி - emoji

எமொஜி எனப்படுவது நமது உணர்வுகளை எதிரொலிக்கும் பொம்மைகள். எந்த சாட்டிங் செயலிகளை எடுத்தாலும் அதில் வகை வகையான எமொஜிகள் இருக்கின்றன. இது மனித உணர்வுகளை சீர்குலைய வைக்கிறது என்பது தான் உண்மை. நண்பர்களுடன் சிரித்து பேசிக் கொண்டு, காதலியிடம் மிஸ் யூ எமொஜி அனுப்புவது, சோகமாக இருப்பது போல காண்பித்துக் கொள்வது. சமீபத்திய ஆய்வில் எமொஜியினால் உறவுகளில் உணர்வு ரீதியான நெருக்கம் குறைந்து வருகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. பொய்கள் அதிகரிக்கும் போது தானாக உறவுகளில் விரிசல்கள் அதிகரிக்க தொடங்குகிறது.

வாட்ஸ்-அப் ப்ளூ டிக்

வாட்ஸ்-அப் ப்ளூ டிக்

காதலிக்கும் ஒவ்வொருவரும் குமுறும் விஷயம் இது. வேண்டாத வேலையாக செய்தியை பார்த்துவிட்டால் "ப்ளூ டிக்" காண்பித்து விடும்படி வாட்ஸ்-அப் வடிவமைப்பு செய்துள்ளது. சில சமயங்களில் உங்களது நெட் ஆனில் இருந்தால் அல்லது வாட்ஸ்-அப் ஆக்டிவாக இருந்தால் கூட இது ப்ளூ டிக்கை காண்பித்துவிடுகிறது. இதனால் குடுமி பிடி சண்டை எல்லாம் நேர்கிறது என்பது தான் உண்மை.

படுக்கையறையில் மொபைல் பயன்பாடு

படுக்கையறையில் மொபைல் பயன்பாடு

கணவனும், மனைவியும் மனம் திறந்து பேசும் ஒரே இடம் படுக்கையறை தான். அங்கும் நுழைந்துவிட்டது மொபைல். இருவரும் அவரவர் நண்பர்களுடன் வாட்ஸ்-அப், ஃபேஸ் புக் என்று அரட்டை அடிப்பது. கேம்ஸ் விளையாடுவது தான் மிகவும் கொடுமை, இன்றளவில் கேண்டி க்ரஷ், க்ளேஷ் ஆப் கிளான்ஸ் விளையாடாத இளைய சமூதாயமே இல்லை என்று தான் கூற வேண்டும் போல. அந்த அளவு அடிமையாக்கி வைத்திருக்கிறது அந்த மாய உலகம்.

இரண்டு மொபைல்

இரண்டு மொபைல்

ஒரே மொபைலில் இரண்டு சிம் கார்டு காலம் போய், இரண்டு மொபைல் பயன்படுத்தும் காலம் வந்துவிட்டது. முக்கியமாக காதலர்கள், காதலி காதலனுடன் பேசும் அந்த நேரத்தில் கூட, மறுபுறம் ஃபேஸ்புக், வாட்ஸ்-அப்பை பிரிய மனம் வருவதில்லை. இதனால், இவர்களுக்குள் நடைபெறும் உரையாடலே வலுவிழந்துப் போகிறது. பிறகு எங்கிருந்த காதல் வலிமையடையும், பிரேக்-அப் தான் ஆகும்.

வேண்டாத செயல்கள்

வேண்டாத செயல்கள்

காதலிக்கும் போதே, அந்தரங்க புகைப்படங்கள் பகிர்வது, உரையாடல்களை ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் பதிவு செய்துக் கொள்வது பிறகு என்றேனும் சண்டை ஏற்பட்டால் அதை மற்றவருடன் பகிர்ந்து வெறுப்பை காண்பிப்பது எல்லாம் எதற்கு? இது தான் நீங்கள் செய்யும் உண்மையான காதலா? பெண்ணின் உடலை மட்டுமே காண விரும்புவதற்கு பெயர் வேறல்லவா...

அரசு சட்டம்

அரசு சட்டம்

புரளிகளை பரப்புவது, தனிநபர் பற்றிய தனிப்பட்ட விவரங்களை பரப்புவது, அவதூறு செயல்களில் ஈடுபடுவது போன்றவை இப்போது வாட்ஸ்-ஆப்பில் கண்காணிக்கும் அளவு நாம் தவறாக நடந்து வருகிறோம். விஜயகாந்த் பாணியில் கூற வேண்டும் எனில், "எவ்வளோ பெரிய கேவலம் தெரியுமா இது" நமது தனிப்பட உரையாடல்களை வேறொருவர் வேவு பார்க்கிறார் என்றால் எப்படி நீங்கள் சுதந்திரமாக இயங்க முடியும். இது நமக்கு நாமே வைத்துக் கொண்ட ஆப்பு!!

தனிப்பட்ட வாழ்வியல் பாதிப்பு

தனிப்பட்ட வாழ்வியல் பாதிப்பு

இதனால் உங்களது தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கிறது அல்லவா. அரசு சட்டம் என்று மட்டுமின்றி. உங்களை நம்பி தனது அந்தரங்கத்தை கூறும் நபரை பற்றியும் நீங்கள் பரப்பி, உலகிற்கு வெட்டவெளிச்சமாக காண்பிப்பது மிகப்பெரிய துரோகம் தானே. இப்போதெல்லாம் பிரிந்தவர்கள் சேர்வதே இல்லை. பிரேக்-அப் என்பது தான் முடிவா? உங்களுக்குள் இருந்த காதலால் உங்களை மீண்டும் இணைக்க முடியவில்லை எனில், நீங்கள் இவ்வளவு நாள் செய்தது காதல் இல்லை.

உறவுகளில் தேய்மானம்

உறவுகளில் தேய்மானம்

இதனால் தான் இன்றைய தலைமுறையின் காதல் உறவுகளில் அதிகளவில் தேய்மானம் காணப்படுகிறது. இதை எல்லாம் நாம் மிக சிறிய விஷயமாக கருதி வருகிறோம் ஆனால், நம் வாழ்வில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பெரிய மாற்றங்களுக்கு இது தான் காரணம் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Candy Crush Girls And Clash Of Clans Boys

Here we have discussed about how mobile technologies destroys modern love stories, in tamil.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more