காதலில் பெண்கள் செய்யும் தவறுகளும்... அதனால் குமுறும் ஆண்களும்...

Posted By:
Subscribe to Boldsky

பெண்கள் மிகவும் புத்திசாலிகள் பத்தாம் வகுப்பு மற்றும் பல்கலைகழக அளவில் முதல் ரேங்க் வாங்குவதில் வல்லவர்கள். ஆனால், காதல் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் வாங்கிட கூட தடுமாறுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் உணர்வுகளுக்கு ஃபார்முலா போட்டு வழிநடத்த முயலும் அவர்களது முறை தான். அனைவரும் ஒரே மாதிரி இருந்துவிட முடியாது என்பதையும் ஆண்கள் அரசு அச்சிட்டு கொடுக்கும் சமச்சீர் கல்வி புத்தகங்கள் இல்லை என்பதையும் புரிந்துக் கொள்ள வேண்டும்.

காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வேறுபாடு!

சிறு சிறு விஷயங்களை பெரிதாகும் அவர்களது குணம் மற்றும் எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாத மனப்பாங்கு போன்றவை அவர்களது மனதையும் காதல் வாழ்க்கையையும் வெகுவாக பாதிக்கிறது. காதலனுக்கு அனைத்து விஷயங்களிலும் விட்டுக்கொடுத்து போவது, தனது விருப்பங்களை அவனுக்காக துறப்பது போன்றவை இந்த காலத்து காதலுக்கு தேவையற்றது. ஜீன்ஸ் போடா கற்றுக்கொண்ட பெண்களினால் ஆண்களின் ஜீன்களை கற்றுக்கொள்ள முடியவில்லை என்பது தான் அவர்களது வருத்தத்திற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. சரி, இனி இந்த காலத்து பெண்கள் செய்யும் தவறுகள் பற்றியும், அதனால் குமுறும் ஆண்கள் பற்றியும் தெரிந்துக் கொள்ளலாம்...

காதல் டூ திருமணம், காதலர்களுக்கு நோ சொல்லும் பெண்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அழுத்தம்

அழுத்தம்

காதல் மென்மையானது, அதை மிகவும் ரசித்து அனுபவிக்க வேண்டும். எங்கு சென்றாலும் எதற்காகவாவது பயப்படுவது, யாரவது பார்த்துவிடுவார்களோ என அஞ்சுவது. காதலன் எங்காவது போனால் அவனை தடுப்பது, தேவையற்ற விஷயங்களை எண்ணி தவிப்பது என மன அழுத்தத்தை அதிகரித்துக் கொள்கின்றனர்.

உடல்மொழி

உடல்மொழி

தனக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் காதலுக்காக செய்கிறேன், காதலனுக்காக செய்கிறேன் என்ற உடலோடும் பேச தொடங்குவது, இருவரும் பிணைய அனுமதிப்பது பெண்கள் செய்யும் தவறு.

மாற்ற நினைப்பது

மாற்ற நினைப்பது

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனப்பக்குவமும், குணாதிசயமும் இருக்கும். தனக்கு பிடித்தவாறு அல்லது இந்த சமூகத்துக்கு பிடித்த மாதிரி அவனை மாற்றுகிறேன் என முயற்சிப்பது.

நண்பர்களை பிரிவது

நண்பர்களை பிரிவது

தான் காதலிக்க தொடங்கியதும் தனது ஆண் நண்பர்களை பிரிவது அவர்கள் செய்யும் தவறு. அதேப்போல தனது காதலனும் அவனது தோழிகள் உடன் வைத்திருக்கும் நட்பை பிரிய வேண்டும் என கூறுவது

பிடிக்காவிட்டாலும் தொடர்ந்து அதையே செய்வது

பிடிக்காவிட்டாலும் தொடர்ந்து அதையே செய்வது

சில விஷயங்கள் அவர்களுக்கு பிடிக்காத போதிலும் அது தனது காதலனுக்கு பிடிக்கும், அல்ல இதன் மூலம் அவன் பயனடைவான் என்றும் ஆண்கள் விரும்பாததை தானாக முயன்று பார்ப்பது போன்றவை எல்லாம் பெண்கள் தேவையின்றி செய்யும் காதல் தவறுகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 Mistakes Every Girl Makes In Love

Do you know about 5 mistakes every girl makes in love? read here.
Story first published: Wednesday, March 11, 2015, 19:01 [IST]
Subscribe Newsletter