For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் நண்பர்கள் போலியான நண்பர்களா என்று எப்படி ஈஸியா தெரிஞ்சிக்கலாம் தெரியுமா?

நண்பர்கள் இல்லாத வாழ்க்கை அர்த்தமற்றதாகவே கருதப்படும். நம் பக்கத்தில் நண்பர்கள் இருந்தால் வாழ்க்கை ஒரு அற்புதமான பயணமாக இருக்கும்.

|

நண்பர்கள் இல்லாத வாழ்க்கை அர்த்தமற்றதாகவே கருதப்படும். நம் பக்கத்தில் நண்பர்கள் இருந்தால் வாழ்க்கை ஒரு அற்புதமான பயணமாக இருக்கும். நல்ல நண்பர்களை ஆசீர்வாதம் என்றே கூறலாம். சூழ்நிலை என்னவாக இருந்தாலும் அதனை சிறப்பாக்க நண்பர்களாலேயே முடியும். ஆனால் நம் வாழ்வில் சந்திக்கும் அனைவரையும் நல்ல நண்பர்கள் என்று கூறிவிட முடியாது.

Signs That You Have Fake Friends

சிலரை நாம் சிறந்த நண்பர்கள் என்று அழைக்கிறோம், சிலர் அறிவுரை நண்பர்கள் மற்றும் சிலர் பயண நண்பர்கள். இருப்பினும் நாம் விலகி இருக்க வேண்டிய ஒரு வகை நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்கள்தான் போலி நண்பர்கள். இந்த வகையான நண்பர்கள் சர்க்கரையைப் போல இனிமையாக இருப்பார்கள், ஆனால் அது அவர்களின் நன்மைக்காக மட்டுமே. அத்தகைய நபர்களிடமிருந்து எந்த விலையிலும் விலகி இருப்பது நல்லது. உங்களிடம் போலி நண்பர்கள் இருக்கிறார்களா என்பதை சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவைக்காக மட்டும் கால் செய்வது

தேவைக்காக மட்டும் கால் செய்வது

அவர்களின் நம்பரில் இருந்து போன் வரும்போதெல்லாம் அவர்கள் உங்களிடம் ஏதாவது உதவி மட்டுமே கேட்பார்கள். உதவி தேவைப்படும்போது மட்டுமே நீங்கள் அவர்கள் நினைவில் இருப்பீர்கள். அவர்கள் உங்கள் உதவியைப் பாராட்டக்கூடும், ஆனால் நீங்கள் மீண்டும் உங்களால் ஏதாவது காரியம் ஆக வேண்டுமென்றால் மட்டுமே உங்களை மீண்டும் தொடர்பு கொள்வார்கள்.

உங்களை மதிக்க மாட்டார்கள்

உங்களை மதிக்க மாட்டார்கள்

அவர்களின் நுட்பமான கிண்டல், விளையாட்டுத்தனமான துஷ்பிரயோகம், மற்றும் பாராட்டுக்களைக் கூட உங்களை சங்கடப்படுத்தும்படி கூறுவார்கள். சில நேரங்களில் கிண்டல் செய்வது வேடிக்கையாக இருக்கிறது, ஆனால் எப்போதும் அதையே செய்வது வேடிக்கை கிடையாது. இந்த நடத்தைக்கு பல உளவியல் காரணங்கள் இருக்கலாம், ஆனால் அதற்காக அவர்களுடன் எப்போது இருக்க வேண்டுமென்று அர்த்தமல்ல.

உங்கள் ஆலோசனையை எடுத்துக்கொள்ள மாட்டார்கள்

உங்கள் ஆலோசனையை எடுத்துக்கொள்ள மாட்டார்கள்

நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக வெளியே செல்லக் கூடிய நண்பர்களைத்தான் நாம் விரும்புகிறோம். இருப்பினும், சில நேரங்களில் அவர்களின் சோகமான முடிவுகளைப் பற்றி மட்டுமே சொல்ல அழைக்கும் சில நண்பர்களையும் நாம் சந்திக்க வேண்டியிருக்கும். அவர்கள் தொடர்ந்து உங்கள் ஆலோசனையைக் கேட்பார்கள், அதற்கு நேர்மாறாகச் செய்வார்கள், அவர்கள் குழப்பமடையும்போது இந்த சுழற்சி மீண்டும் தொடரும்.

அனைத்தையும் தெரிந்து கொள்ள விரும்புவார்கள்

அனைத்தையும் தெரிந்து கொள்ள விரும்புவார்கள்

உங்களைப் பற்றிய ரகசியங்களை தெரிந்து கொள்ள சிலர் உங்களுடன் நட்பு கொள்வார்கள். ஒருவரின் வாழ்க்கையைப் பற்றி அவர்கள் புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள், அது நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்தவராக இருக்கலாம். உங்கள் வாழ்க்கை பற்றிய அனைத்தையும் அவர்களிடம் சொல்ல அவர்கள் தொடர்ந்து உங்களுக்கு அழுத்தம் கொடுப்பார்கள்.

ஒருபோதும் வருத்தம் தெரிவிக்க மாட்டார்கள்

ஒருபோதும் வருத்தம் தெரிவிக்க மாட்டார்கள்

அவர்களின் புண்படுத்தும் நடத்தைக்கு ஒருபோதும் அவர்கள் வருத்தம் தெரிவிக்க மாட்டார்கள் மாறாக அதனை சமாளிக்க நாடகத்தை அரங்கேற்றுவார்கள். உண்மையான நண்பர்கள் உங்களையும் உங்கள் மென்மையான குணத்தையும் அறிவார்கள், இருப்பினும், போலி நண்பர்கள் வேண்டுமென்றே அதைக் குறிவைத்து உங்களை காயப்படுத்துவார்கள். அவர்கள் செய்த தவறு குறித்து உங்களுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்த அவர்கள் உங்களுடன் பேசுவதை நிறுத்தலாம்.

உங்களுக்கு உதவி தேவைப்படும்போது மறைந்து விடுவார்கள்

உங்களுக்கு உதவி தேவைப்படும்போது மறைந்து விடுவார்கள்

உங்களுக்கு தேவைப்படும்போது அவர்கள் அங்கு இருக்க மாட்டார்கள். உங்களுக்கு அவர்களின் உதவி தேவைப்படும் போது அவர்களின் போன் ஆப் செய்து வைக்கப்படும். உங்களுக்கு அவர்களின் உதவி மிகவும் தேவைப்படும்போது நீங்கள் அவர்களை ஒருபோதும் தொடர்பு கொள்ள முடியாது.

உங்களுக்கு பலமாக ஒருபோதும் இருக்க மாட்டார்கள்

உங்களுக்கு பலமாக ஒருபோதும் இருக்க மாட்டார்கள்

போலி நண்பர்கள் தங்கள்இமேஜிற்கு எந்தத் தீங்கும் ஏற்படாத வரை அல்லது எல்லோரும் அவர்களை நேசிக்கும் வரை மட்டுமே இருப்பார்கள். அவர்கள் மிகவும் இராஜதந்திரமானவர்கள், இக்கட்டான தருணத்தில் உங்களைத் தனியாக நடக்க அனுமதிப்பார்கள். அவர்களின் சுயநல குணம் எப்பொழுதும் மாறாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs That You Have Fake Friends

Here are some signs to identify if you have fake friends.
Story first published: Saturday, July 3, 2021, 16:54 [IST]
Desktop Bottom Promotion