Just In
- 52 min ago
கட்டுக்கடங்காமல் ஓடும் குதிரையை கட்டுப்படுத்த இந்த இளைஞர் செய்யும் வேலையை நீங்களே பாருங்களேன்…!
- 1 hr ago
அகோரிகள் ஏன் மனித உடல்களை சாப்பிடுகிறார்கள் தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க...!
- 6 hrs ago
இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா?
- 18 hrs ago
2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
Don't Miss
- News
திருச்சி மாவட்டத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் இடங்கள் விவரம்
- Movies
ஆரியாவின் அடுத்த படம் ‘டெடி’… பர்ஸ்ட் லுக் போஸ்ட் வெளியானது
- Sports
ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரோகித் ஷர்மா.. பிரபல கால்பந்து தொடரின் விளம்பர தூதராக அறிவிப்பு!
- Technology
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Finance
ஹைதராபாத் நிறுவனத்தில் 141 கோடி முதலீடு செய்த முகேஷ் அம்பானி..!
- Automobiles
நீங்கள் எதிர்பார்க்கும் புதிய அம்சங்களுடன் வருகிறது ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350!
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நீங்கள் மோசமானது என்று நினைக்கும் பழக்கங்கள் உங்கள் உறவை பாதுகாக்கும் தெரியுமா?
ஆரோக்கியமான, நீண்டகால உறவுகளை உருவாக்குவதும் பராமரிப்பதும் எப்போதும் எளிதானது அல்ல என்பது அனைவரும் அறிந்த ஒன்று. மோசமான பழக்கவழக்கங்கள் உறவில் இருப்பது அந்த உறவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நம்மில் பெரும்பாலானோர் மோசமான வாழ்க்கை, நட்பு மற்றும் உறவுகளிலிருந்து வெளியேற விரும்புகிறோம். இருப்பினும், அது உறவுகளுக்குள் என்று வரும் போது, அந்த பழக்கம் உண்மையில் மோசமானதா என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவான பழக்கவழக்கங்களையும், நடவடிக்கைகளையும் வைத்து நாம் பல முறை முடிவெடுக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, எந்த உறவும் சரியானதல்ல. சில சமயங்களில் உறவுகளில் அவர்களுக்கு தேவையானதை பெற உள்நோக்குடன் சிலர் செயல்படுகின்றனர். நம்மில் பெரும்பாலானோர் எல்லா நேரங்களிலும் ரொமாண்டிக் ஆக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். உண்மையில் இது நடைமுறையில் சாத்தியமில்லை. பொதுவாக ஒரு உறவில் தவறு என நினைக்கும் சில ஆரோக்கியமான பழக்கங்களைப் பற்றி இங்கு காணலாம்.

உணர்ச்சிகளை புண்படுத்துவது
கணவன், மனைவி, காதலன், காதலி ஆகியோருக்குள் அடிக்கடி நடக்கும் ஒரு சம்பவம் உணர்ச்சிகளை புண்படுத்துவது. ஒருவரை பற்றிய புரிதல் இல்லாத போது, இங்கு அவர்களுடைய உணர்ச்சிகள் காயப்படுத்தப்படுகின்றன. சில நேரங்களில், நீங்களும் உங்கள் துணையும் ஒருவருக்கொருவர் உணர்வுகளை புண்படுத்தலாம்.
உங்கள் துணையிடம் நீங்கள் உண்மையைச் சொல்ல வேண்டிய நேரங்கள் இருக்கின்றன. அவர்கள் கேட்க விரும்பவில்லை என்றாலும் உண்மையை கூறித்தான் ஆக வேண்டும். ஒரு போலி மற்றும் பாசாங்குத்தனமான உறவைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, நேர்மையாக இருப்பது அவசியம். உங்கள் துணை தனது நேர்மையான கருத்தை உங்களுக்கு வழங்கினால், அது காயப்படுவது போன்று இருந்தால் பரவாயில்லை. அது உங்கள் துணையின் வெளிப்படைத்தன்மையை பராமரிக்கிறது.

மோதல்களைத் தவிர்ப்பது
உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் அல்லது காதலிக்கும் சண்டை என்றால்? அதை தவிர்க்க நீங்கள் விரும்ப வேண்டும். இருவருக்குள்ளான வாதங்களைத் தவிர்க்க நிறைய பேர் விரும்புவது ஆரோக்கியமானது. இருவரும் இணைந்து பேசி முடிவெடுங்கள் என்று சொல்லவதுண்டு. ஆனால், மோதல் நேரத்தில் பேசுவதன் மூலம் எல்லாவற்றையும் தீர்க்க முடியாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவருக்கொருவர் வாதிடுவதையும் காயப்படுத்துவதையும் விட, சில மோதல்களை புறக்கணிப்பது ஆரோக்கியமானது. அவர்கள் சொல்வது போல், சிலர் சண்டையிடத் தகுதியற்றவை அல்ல. ஆதலால், மோதல்களை தவிப்பது நல்லது.
MOST READ: நீங்க புத்திசாலியாக மாறணுமா? அப்ப இத பண்ணுங்க போதும்...!

குறைபாடுகளை ஏற்க மறுப்பது
"உன்னைய கல்யாணம் பண்ணுனதுக்கு பதிலா நான் வேற யாரையாவது கல்யாணம் பண்ணிருந்தா? நல்ல இருப்பனு" நிறைய பேர் சொல்லி நாம் கேட்டிருப்போம். இங்கு ஒவ்வொரு உறவின் உண்மை என்னவென்றால் யாருக்கும் யாரும் சரியானவர்கள் அல்ல என்பது தான்.
ஆண் அல்லது பெண் என ஒவ்வொருவருக்குள்ளும் குறைபாடுகள் நிறைய உள்ளது. அந்த குறைபாடுகளை அறிந்து கொண்டு அவற்றை ஏற்க பழகிக்கொள்வது சிறந்தது. உங்களின் துணை உங்களிடம் இருக்கும் குறைபாடுகளுடன் உங்களை ஏற்றுக்கொண்டால், நீங்கள் அவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டும். சில குறைபாடுகளை புறக்கணிப்பது உங்களை முன்பை விட உறவில் நெருக்கமாக இருக்க உதவும்.

கொஞ்ச நேரம் செலவிடுவது
மனித வாழ்வு என்பதே மிகவும் சிக்கல் நிறைந்தது தான். இந்த குழப்பமான வாழ்க்கையில், மனிதர்கள் தங்கள் துணையிடம் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பது முடியாத காரியம். ஒவ்வொருவரும் சிறிது நேரம் உறவுக்காக ஒதுக்க வேண்டும். உங்கள் துணையுடன் நேரம் செலவிடமால் இருப்பது உங்கள் உறவில் விரிசல் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துவிடும்.
எப்போதாவது, நேரத்தை ஒதுக்குவது என்பது இயல்பானது. இது எதிர்காலத்தில் உங்கள் உறவை ஆரோக்கியமாக மாற்றிவிடும். நீங்களோ அல்லது உங்கள் துணையோ சிறிது நேரம் செலவிட விரும்பினால், பரவாயில்லை. பொழுதுபோக்குகள் மற்றும் நண்பர்களுடனான பயணம் போன்றவற்றிற்கு சிறிது நேரம் ஒதுக்குவது உங்கள் உறவில் தீப்பொறியை மீண்டும் கொண்டு வந்துவிடும்.
MOST READ: ஆண்களே உங்கள் ஆடைகளை உங்களின் காதலி அணிந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

கோபமாக படுக்கைக்குச் செல்வது
உறவு ஆலோசனையின் பொதுவான ஒரு பகுதி என்னவென்றால், தம்பதிகள் ஒருவருக்கொருவர் கோபமாக இருக்கும் போது ஒருபோதும் படுக்கைக்குச் செல்லக்கூடாது. அவ்வாறு செய்வது உங்கள் உறவில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் இது எப்போதும் சிறந்த வழி அல்ல. குறிப்பாக மோதலை சரியாக தீர்க்க உங்களுக்கு நேரமோ சக்தியோ இல்லாத போது, படுக்கைக்குச் செல்ல வேண்டாம்.
படுக்கைக்கு முன் பதற்றம் ஏற்படுவது நல்லதல்ல. இரவு முழுவதும் உங்கள் துணை என்ன உணர்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டு செயலாக்குங்கள். பின்னர் காலையில் மீண்டும் அதைப் பற்றி உரையாற்றுங்கள். கோபம் தணிந்து, மறுநாள் காலையில் சமரசம் செய்ய சரியாக இருக்கும்.

ஈர்க்கப்படும் உணர்வு
மற்றவர்களுக்காக மட்டுமே நாம் ஈர்ப்பைக் கொண்டிருக்க முடியும் என்று நாம் விரும்புகிறோம். உயிரியல் வேறுவிதமாகக் கூறுகிறது. மற்றவர்களை கவர்ச்சிகரமானதாகக் கண்டறிவது பரவாயில்லை. இதில், பொதுவாக ஆண்களுக்கு பெண்கள் மீது ஒருவித ஈர்ப்பு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். ஏனெனில் இது ஒரு உயிரியல் தவிர்க்க முடியாதது.
ஆண், பெண் இருபாலினமும் எதிரெதிர் பாலினம். எதிர் பாலினம் இருவருக்கும் ஒருவிதமான ஈர்ப்பு இருக்கும். கணவன், மனைவிக்குள் தாம்பத்திய வாழ்க்கை தொடங்கியதும் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்படுவதை உணருவார்கள். இங்கு ஒருவரை விரும்புவது என்பது தவிர்க்க முடியாதது.