For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒருதலை காதலில் இருந்து உங்களுக்கு கிடைக்கும் நல்ல அனுபவங்கள் என்ன தெரியுமா?

நீங்கள் ஒருதலை பட்சமாக ஒருவரை காதலிப்பது உங்களுக்கு வலியை ஏற்படுத்தலாம், ஆனால் அதனை சரியான நேரத்தில் புரிந்து கொண்டால் அது உங்கள் வாழ்க்கைக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக அமையும்.

|

இந்த உலகத்தில் இருக்கும் மிகவும் அழகான உணர்வுகளில் ஒன்று ஒருவரால் காதலிக்கப்படுவது. அதேபோல மிகவும் வலி நிறைந்த உணர்வு நாம் விரும்புபவர்கள் நம்மை வெறுப்பது. நம்மை வருபவர்களை காதலிப்பதை விட சித்திரவதையை அனுபவிக்க சிறந்த வழி வேறு எதுவுமில்லை.

Things you learn from loving someone who does not love you back

நீங்கள் ஒருதலை பட்சமாக ஒருவரை காதலிப்பது உங்களுக்கு வலியை ஏற்படுத்தலாம், ஆனால் அதனை சரியான நேரத்தில் புரிந்து கொண்டால் அது உங்கள் வாழ்க்கைக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக அமையும். ஒருதலை காதல் உங்களுக்கு வாழ்க்கை மீதான பல புரிதலை ஏற்படுத்தும். இந்த பதிவில் உங்களை விரும்பாதவர்களை நீங்கள் விரும்பும்போது கிடைக்கும் பாடங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உங்கள் குறைபாடுகள் உங்களுக்கு தெரியும்

உங்கள் குறைபாடுகள் உங்களுக்கு தெரியும்

அனைவருக்கும் அவர்களை பொறுத்த வரையில் அவர்களும் சரியானவர்கள்தான். ஆனால் எப்பொழுதும் தன்னை மெருகேற்றி கொள்ள வாய்ப்புள்ளது. தன்னை ஒருவர் நிராகரிக்கும் போது உங்களின் குறைகள் என்னென்ன என்று உங்களுக்கு தெரிய வரும். அதனை சரிசெய்து கொள்ள முயற்சியுங்கள்.

சிறந்தவராக மாறுவீர்கள்

சிறந்தவராக மாறுவீர்கள்

காதல் தோல்வி என்பது எப்பொழுதும் வலியை உண்டாக்கலாம், ஆனால் இது உங்களுக்குள் இருக்கும் சிறந்தவர்களை வெளியே கொண்டுவரும். காதல் தோல்விக்கு பிறகு நீங்கள் ஒருபோதும் முன்னர் போல இருக்கமாட்டிர்கள்.

காதலை கட்டாயப்படுத்தி வரவைக்க முடியாது என்று உணர்வீர்கள்

காதலை கட்டாயப்படுத்தி வரவைக்க முடியாது என்று உணர்வீர்கள்

நீங்கள் ஒருவரை எவ்வளவு ஆழமாக காதலித்தாலும் சரி அவர் உங்களை காதலிக்கவில்லை எனில் உங்கள் காதல் கதை அதோடு முடிந்துவிடும். காதலை யாராலும் கட்டாயப்படுத்தி வரவைக்க முடியாது விரைவில் இதனை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். அதுதான் உங்களுக்கும் நல்லது.

MOST READ: கர்ப்பிணி பெண்கள் இந்த காயை சாப்பிடுவது அவர்களுக்கு பல பிரச்சினைகளை உண்டாக்கும் தெரியுமா?

காதல் உங்களை வலிமையாக்கும்

காதல் உங்களை வலிமையாக்கும்

நிராகரிப்பு எப்போதுமே வலி நிறைந்ததுதான். ஆனால் வலி உங்களை வலிமையானவராக மாற்றும். நீங்கள் முன்னர் எப்போதும் உணர்ந்திராத ஒரு வலிமையை காதல் தோல்விக்கு பிறகு உணர்வீர்கள்.

வழிகளை தெளிவாக்கும்

வழிகளை தெளிவாக்கும்

நீங்கள் விரும்பும் ஒருவர் உங்களை நிராகரிக்கும் போது அது உங்கள் பாதையை தெளிவாக்கும். நீங்கள் விரும்பும் அளவிற்கு உங்களை விரும்பவோ அல்லது அதைவிட அதிகமாக விரும்பவோ ஒருவரை நீங்கள் தெளிவாக தேட தொடங்குவீர்கள்.

வலி தற்காலிகமானது என்று நீங்கள் உணர்வீர்கள்

வலி தற்காலிகமானது என்று நீங்கள் உணர்வீர்கள்

காதல் மறுக்கப்படுவதால் ஏற்படும் வலி கொடியதாக இருந்தாலும் சில காலமே இருக்கும். நம்மை விரும்பாத ஒருவருக்காக நாம் ஏன் வலியை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் விரைவில் உங்களுக்குள் எழும். எது நடந்தாலும் வாழ்க்கை நகரும் என்ற புரிதலை உங்களுக்கு இது ஏற்படுத்தும்.

வாழ்க்கை திரும்ப கிடைக்கும்

வாழ்க்கை திரும்ப கிடைக்கும்

தொலைபேசி அழைப்பிற்காக காத்திருப்பது, திட்டமிட்டு அவர்களை பார்க்க செல்வது, அவர்களை கவர்வதற்காக சிறப்பு உடை, அலங்காரம் என பணத்தையும், நேரத்தையும் செலவழிப்பது போன்ற எந்த முட்டாள்தனமான காரியத்தையும் செய்ய வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு பிடித்தாற்போல நீங்கள் இருக்கலாம்.

MOST READ: இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு உலகம் முழுவதையும் சுற்றி பார்க்க வாய்ப்புள்ளதாம்...!

உங்களை நீங்களே சிறப்பாக கையாளுவீர்கள்

உங்களை நீங்களே சிறப்பாக கையாளுவீர்கள்

நிராகரிப்பு ஆரம்பத்தில் உங்கள் இதயத்தை சுக்கு நூறாக உடைக்கலாம். ஆனால் அந்த கடினமான சூழ்நிலையிலி இருந்து நீங்கள் எதிர்நீச்சல் அடித்து வந்துவிட்டால் உங்களை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். உங்களை அனைத்து இன்னல்களில் இருந்தும் உங்களால் மட்டுமே காப்பாற்ற இயலும் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things you learn from loving someone who does not love you back

These things you can learn from when you are loving someone who does not love you back.
Desktop Bottom Promotion