For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

20களின் இறுதியில், நண்பர்கள் அனைவருக்கும் திருமணமான பின், சிங்கிளாக இருப்பது எவ்வளவு பெரிய கொடுமை!

20களின் இறுதியில், நண்பர்கள் அனைவருக்கும் திருமணமான பின், சிங்கிளாக இருப்பது எவ்வளவு பெரிய கொடுமை!

|

சிங்கிள் தான் மச்சான் கெத்து... கடைசி வரைக்கும் நாம இப்படியே இருந்திடலாம்டா... நெனைக்கும் போதெல்லாம், நெனைக்கிற நேரத்தில எல்லாம், பக்காவா பிளான் போட்டு.. நெனச்சது எல்லாம் ஒண்ணா சேர்ந்து கலக்குறோம்... இப்படி ஒரு சத்தியம் எல்லா கேங்லயும் போட்டிருப்பாங்க. 25 வயசு வரைக்குமே நண்பனுக்கு செஞ்சு கொடுத்த இந்த சத்தியத்த சிலரால காப்பாத்த முடியாது.

It is Not Easy to be Single in Late 20s When All of My Friends Are Married on Other End!

ஃபர்ஸ்ட் விக்கெட் கான், செகண்ட் விக்கெட் கான்'னு... முதல்ல ஒன்னுரெண்டு பேரு கல்யாணம் பண்ணிக்கிட்டு நம்ம கேங்ல இருந்து காணாம போகும் போது... அவ்வளோ பெரிசா... எதுவும் வருத்தம் இருக்காது... 20களின் கடைசியில... நாம மட்டுமே தனியா இருப்போம்... கடைசியா நம்ம கூட டீ குடிக்க, தம்மடிக்க... ஒண்ணா வர்க் ஃப்ரம் ஹோம்கிற பேருல கூத்தடிக்க இருந்தவனும், கல்யாண பத்திரிக்கைய நீட்டும் போதுதான் மனசுக்குள்ள சுளீர்ன்னு இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மீம்ஸ் போட்டு கலாய்பாங்க....

மீம்ஸ் போட்டு கலாய்பாங்க....

இனி, நாம தனி தான்ல.... நெனைக்கும் போதெல்லாம் பார்த்துக்க முடியாது. அடுத்த ரெண்டு மாசம் தள்ளி வர தீபாவளிக்கு இப்பவே இந்தியன் ரயில்வேஸ்ல டிக்கெட் புக் பண்ற மாதிரி... ஒரு மீட்டிங், கெட் டு கெதர் பிளான் பண்ண நாட்கள புக் பண்ணி வைக்கணும்.

பொங்கல், தீபாவளி நாள்ல ரிலீஸ் ஆகுற நமக்கு பிடிச்ச ஹீரோவோட படத்த முதல் நாள், முதல் ஷோ எல்லாம் சான்ஸே இல்ல. இனிமேலும் 90s கிட்ஸ்னு போஸ்ட் போட்டா... 2k கிட்ஸ் மீம்ஸ் போட்டு கலாய்பாங்க....

கொடுமை நம்பர் 1

கொடுமை நம்பர் 1

இருபதுகளின் கடைசியில சிங்கிளா வாழ்றது ஈஸியான விஷயம் இல்ல. அதுலயும், நம்ம கூடவே எங்க போனாலும் ட்வின்ஸ் போல ஒட்டிக்கிட்டு ஒருந்த ஒரு பெரிய கேங் கல்யாணம் ஆகி செட்டிலான பின்ன... நெனச்சு பார்க்கவே முடியாது. காதல், ப்ரேக்-அப் ஆனாதாங்க வலி.... ஆனா.. ஃபிரெண்ட்ஷிப்ல நெனச்சப்ப பார்த்துக்க முடியாத தருணம் ஒவ்வொன்னும் வலி தான். நம்மக்கிட்ட சொல்லாம நம்ம ஃபிரெண்ட்ஸ்ல ரெண்டு பேர் தனியா படத்துக்கு போனாலே நமக்கு தலைக்கு மேல கோபம் வரும் இல்லையா? அதாங்க ஃபிரெண்ட்ஷிப்.

என்ன பிளான்?

என்ன பிளான்?

வீட்டுல ஒரு டஜன் முட்டை இருக்கும் போது, போக வரன்னு ஆம்லேட், கலக்கி, ஆப்பாயில்ன்னு போட்டு சாப்பிட்டுட்டே இருக்க தோணும். இதுவே கடைசியா ஒரே ஒரு முட்டை மட்டும் ஃபிரிட்ஜ்ல மீதமிருக்கும் போது.. அத சீண்டவே தோணாது, கண்டுக்கவே மாட்டோம்.

ஃபிரெண்ட்ஸ் எல்லாருக்கும் கல்யாணம் ஆன பின்ன.. ஒருத்தன் மட்டும் 20s கடைசியில சிங்கிளா இருக்குறதும் இதே மாதிரியான நிலைமை தான். அப்படி இப்படின்னு எதாச்சும் ஒரு பிளான் போட்டாலும்.. மச்சான் பொண்டாட்டி ஒத்துக்கல... ஒடம்பு சரியில்ல.. வேலை இருக்கு... கோவிலுக்கு போறோம்... மச்சான் வீட்டு விசேஷம் போயி ஆகணும்ன்னு கடைசி நிமிஷத்துல கேன்சல் பண்ணிடுவாங்க.

புது ஃபிரெண்ட்ஸ்?

புது ஃபிரெண்ட்ஸ்?

சரி! புது ஃபிரெண்ட்ஸ் கேங் உருவாக்கிக்கலாமேன்னு யோசிக்க.... யோசிக்க கூட தோணாது. அது எப்படி தெரியுமா இருக்கும்? எதாச்சும் வகுப்புல நாம மட்டும் தனியா ஃபெயிலாயிட்டா... நம்மளவிட சின்ன பசங்க கூட கூட்டு வெச்சிக்கிட்டா எப்படி இருக்கும்...? அப்படியான ஒரு சூழலா இருக்கும். பத்து, பதினைஞ்சு வருஷமா ஒன்னுமண்ணா பழகிட்டு.. நினைக்கும் போது அவங்கள பார்க்க முடியாத வலியும் சொல்லில் அடங்காதது தான். ஏனோ... இதப்பத்தி எல்லாம் யாரும் பெருசா பேசுறதே இல்ல.

கல்யாணம்...

கல்யாணம்...

எல்லாரும் நம்மள பார்த்து., பேசாம நீயும் கல்யாணம் பண்ணிக்கடான்னு பிரெஷர் பண்ணுவாங்க.. வீட்டுல இருக்கவங்க... ஃபிரெண்ட்ஸ்... பிரெண்ட்ஸ் கட்டிட்டு வந்தவங்களும் கூட சேர்ந்துக்குவாங்க.... ஒவ்வொரு நாள் காலையில எழுந்திருக்கும் போது.. எப்படா இந்த நாள் முடியும்... ராத்திரி நிம்மதியா தூங்கலாம்னு தான் தோணும். இதுல, ஒவ்வொருத்தனையும் உதாரணம் காட்டி அவன் எல்லாம் பாரு கல்யாணம் பண்ணிக்கிட்டு எப்படி சந்தோஷமா இருக்கான்னு ஒப்பிடுறது தான் கொடுமையின் உச்சமே...

விழாக்கள்!

விழாக்கள்!

அலும்னி மீட்ல இருந்து, எதாச்சும் ஒரு ஃபிரெண்ட் வீட்டு வீசேஷம்னு எல்லாத்துக்கும் ஒண்ணா கூடி முடிவெடுத்து ஒரே மாதிரி ட்ரெஸ் பண்ணிக்கிட்டு தான் அட்டண்ட் பண்ணி இருப்போம். கிப்ட் கொடுக்குறமோ இல்லையோ... நாம கெத்தா அந்த ஈவன்ட்ல கலக்கனும் மச்சான்ங்கிறது தான் பிளான்.

ஆனா, இப்ப அப்படியா... எதுக்கு கால் பண்ணாலும் வீட்டுல கேட்டுட்டு சொல்றேன் மச்சான்னு சொல்வாங்க. நாம் கிப்ட் வாங்கிட்டேன் டா... நேத்து வைப்போட வெளிய போனேன்... அப்பவே வாங்கிட்டேன்னு சொல்லுவானுங்க. சரி! எப்படியும் எல்லாரும் விழாவுக்கு ஒண்ணா தான வருவானுங்க... அங்க பார்த்துக்கலாம். அந்த சந்தோஷம் போதும்னா... ஒவ்வொருத்தன் ஒவ்வொரு நேரத்துல வருவான்.

எப்படி இருக்க மச்சான்... என்ன பண்றன்னு கேட்டு முடிக்கிறதுக்குள்ள கிளம்பிடுவாங்க. ஆயிரம் பேர் சுத்தி இருந்தாலும், நண்பன் கூட இல்லாத தனிமை வேற மாதிரியான வலி. காலேஜ் கல்சுரல்ஸ்ல நாம மட்டும் ஃபிரெண்ட்ஸ் இல்லாம தனியா இருந்தா எப்படி இருக்கும்... கொடுமைல!

விடிய, விடிய!

விடிய, விடிய!

பல வீக்கென்ட்... லாங் டிரைவ்... விடியறது கூட தெரியாம பேசினதயே பேசி, பேசி நேரத்த கடக்குறது... அதெல்லாம் இனி இருக்காது. 9 மணிக்கு மேல வீக்கென்ட் கடுப்படிக்கும். தனியா படத்துக்கு போகணும்... அதும் நம்ம காசுல டிக்கெட் புக் பண்ணி நாமளே தனியே போறது எல்லாம் கொடுமையிலும் கொடுமை. படம்னா அது அவதாரா இருந்தாலும் சரி... தரமணியா இருந்தாலும் சரி.. ஃபிரெண்ட்ஸ் கூட பார்த்தா தான் என்ஜாய்மெண்ட்.

கடுப்பு மொமன்ட்!

கடுப்பு மொமன்ட்!

இருக்குறதுலேயே பெரிய கடுப்பு என்னன்னா... அதுவரைக்கும் ஸ்கூல், காலேஜ்ல ஜஸ்ட் பிரெண்டா இருந்து.. இப்ப கல்யாணம் ஆகமா சிங்கிளா இருக்க பயலுகள எல்லாம் தான் தேடிப்பிடிச்சு.. என்ன மச்சான் எப்படி இருக்க... மீட் பண்ணலாமான்னு எல்லாம் பிளான் பண்ணி, தானா தேடித் போய் பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும். இவன் இப்படி எல்லாம் நம்மக்கிட்ட பேச மாட்டானேனு அவங்களுக்கு டவுட்டு கிலோ கணக்குல வரும். அதெல்லாம் தாண்டி... ஒரு பிளான போட்டு.. ஒவ்வொரு வீக்கென்ட்டையும் கடக்கணும்.

அட்ஜஸ்ட்மெண்ட்!

அட்ஜஸ்ட்மெண்ட்!

கல்யாணத்துக்கு அப்பறம், அப்படி இப்படி தான் இருக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போகணும்ன்னு கல்யாணம் ஆன பயலுகளுக்கு அட்வைஸ் கொடுப்போம். ஆனா, ஃபிரெண்ட்ஸ் லிஸ்ட்ல எல்லாருக்கும் கல்யாணம் ஆகிட்டா... அங்கயும் இதே அட்வைஸ் நமக்கும் அப்ளிகபில் ஆகும்ங்கிறது... 20s கடைசியில தனி மரமா நிக்கும் போது தான் தெரியவரும். சரி! வாழ்க்கைங்கிறதே பாஸிங் கிளவுட் தானே...

இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கே... எங்கள் கேங்ல எல்லாம் இப்படி இல்லையேன்னு சிலர் யோசிக்கலாம்... உங்க கேங்ல கடைசியா ஒரு தனி மரம் இருந்திருக்குமே... அந்த மரத்துக்கிட்ட கேளுங்க... இன்னும் நிறைய விஷயங்கள் சொல்லும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

It is Not Easy to be Single in Late 20s When All of My Friends Are Married on Other End!

It is Not Easy to be Single in Late 20s When All of My Friends Are Married on Other End!
Story first published: Friday, July 27, 2018, 16:05 [IST]
Desktop Bottom Promotion