நீங்கள் ஒருதலைக்காதலை கைவிட வேண்டிய நேரம் எது தெரியுமா?

Posted By: Lakshmi
Subscribe to Boldsky

காதல் வலியை கொடுக்க கூடியது என்பது நமக்கு தெரியும். ஆனால் அதை விட அதிக வலியை தரக்கூடியது என்ன தெரியுமா? ஒருதலை காதல் தான். ஒருதலை காதல் ஆரம்பத்தில் உங்களுக்கு அதிக உற்சாகத்தை தரும். ஆனால் அதுவே நாட்கள் செல்ல செல்ல அதிக வலியை தரும்.

நீங்கள் ஒருவரின் இருதயத்தை நெருங்க வேண்டுமென நினைக்க நினைக்க, அவர் உங்களை ஒதுக்கித்தள்ளி விடுவார். இதனால் உங்களுக்கு வலி தான் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி உங்களை யாரோ போல பார்ப்பார்.

சிறிது காலங்கள் கடந்த பின்னர் தான் தெரியும், நீங்களே உங்களுக்கு குழி பறித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று...! சரி அது இருக்கட்டும், நீங்கள் ஒருதலைக்காதலில் இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறி 1:

அறிகுறி 1:

நீங்கள் அவர் ஆன்லைனில் இருக்கிறாரோ இல்லையோ அவரை எதிர்பார்த்தே காத்திருப்பீர்கள். அவரது புரோபைல் பக்கத்தையும், அவர்களின் நட்பு வட்டாரத்தையும் பற்றி தெரிந்து கொள்ள நினைப்பீர்கள்.

அறிகுறி 2:

அறிகுறி 2:

நீங்கள் நடு இரவில் எழுந்து கூட அவர் ஆன் லைனில் இருக்கிறாரா இல்லையா என பார்ப்பீர்கள்...! ஒருவேளை அவர் ஆன்லைனில் இருந்தால், இந்த நேரத்தில் யாருடன் பேசுகிறார்? என யோசிப்பீர்கள். உங்களுக்கு அழ வேண்டும் என்று கூட தோன்றும்.

அறிகுறி 3:

அறிகுறி 3:

தினமும் இரவு அவரை மனதில் நினைத்துக்கொண்டு தலையணையை கட்டிப்பிடித்துக்கொண்டு படுக்கையில் உருண்டு கொண்டு இருப்பீர்கள். நாள் முழுவதும் அவரது நினைப்பாகவே இருப்பீர்கள்.

அறிகுறி 4:

அறிகுறி 4:

அவரது நண்பர்களை நீங்கள் எங்காவது கண்டால் அவரை பற்றி சில கேள்விகளை கேட்பீர்கள். ஆனால் உங்களுக்கு எந்த ஒரு சரியான பதிலும் கிடைக்காது.

அறிகுறி 5:

அறிகுறி 5:

நீங்கள் அவருக்கு மேசேஜ் செய்தால் அவர் உங்களுக்கு திருப்பி ரிப்ளே செய்யமாட்டார். ஆனால் மற்றவர்களுக்கு எல்லாம் அவர் ரிப்ளே செய்து கொண்டிருப்பார். அதை கண்டு நீங்கள் ஒதுக்கப்படுவது போல உணருவீர்கள்.

அறிகுறி 6:

அறிகுறி 6:

அவர் உங்களை என்ன தான் ஒதுக்கி தள்ளினாலும், உங்கள் மனம் அவர் கண்டிப்பாக உங்களை தேடி ஒரு நாள் வருவார் என நினைத்துக்கொண்டிருக்கும். அது ஏனென்றால், நீங்கள் அவரை உங்கள் சொத்து என நினைக்க தொடங்கியிருப்பீர்கள்.

அறிகுறி 7:

அறிகுறி 7:

அவர் உங்களை வெளியில் எங்கேயும் அழைத்து செல்லமாட்டார். அப்படியே வெளியில் அழைத்து சென்றாலும் பல நிபந்தனைகளை விதிப்பார். அது உங்களை ஏன் நமக்கு இருக்கும் காதலில் கடுகளவு கூட இவருக்கு இல்லாமல் போனது என உங்களை நினைக்க வைக்கும்.

இது உங்கள் மீது கொஞ்சம் கூட காதல் இல்லாத ஒருவரை காதலித்து நீங்கள் வாழ்க்கையை வீணாக்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கான அர்த்தம். எனவே நீங்கள் அவரை விட்டு விலகிவிடுவது சிறந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

what is one sided love

Here are the Signs You Are In One Sided Love
Subscribe Newsletter