For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓவியாவாக வாழ ஆசப்படறீங்களா? அப்ப நீங்க இப்படி எல்லாம் தான் இருக்கணும்!

ஓவியாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள்

By Lakshmi
|

வாழ்க்கையை நமக்கு பிடித்த மாதிரி வாழ வேண்டும் என்பதே அனைவரது ஆசையும். நாம் வாழும் வாழ்க்கை நமக்கு மகிழ்ச்சியாக இருந்தால் மட்டும் போதாது. மற்றவர்களை கஷ்டப்படுத்தாத விதமாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

நமது வாழ்க்கையை பிறருக்காக நடிக்காமல் நாமாக வாழ்வது சற்று கடினம் தான். நாம் நாமாக வாழ்வதினால் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைத்துவிடாது. வாழ்க்கையில் எதை எல்லாம் செய்யலாம் செய்யக்கூடாது என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. பின்னால் பேசுவது

1. பின்னால் பேசுவது

ஒருவரை நேரில் பார்க்கும் போது நல்ல மாதிரியாகவும், அவருக்கு பின்னால் வேறு மாதிரியாகவும் பேச கூடாது. நல்லதோ கெட்டதோ அவரிடமே பேசிவிடுவது நல்லது. இல்லை என்றால் பேசாமல் இருப்பது நல்லது.

முதுகிற்கு பின்னால் பேசுவது அவரது இமேஜை குறைக்கிறதோ இல்லையோ உங்களது இமேஜை கெடுத்துவிடும்.

2. வெளிப்படையாக பேசுவது

2. வெளிப்படையாக பேசுவது

மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் வெளிப்படையாக இருப்பதினால் உண்டாகும் சந்தோஷமே தனி தான். எனவே பல விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக்கொண்டிருக்காமல் வெளிப்படையாக இருந்து விடுங்கள்.

வெளிப்படையாக இருக்கிறேன் என்ற பெயரில், மற்றவர்களது மனதை புண்படுத்தும் விதமாக பேசுவதும் தவறு. எனவே சிந்தித்து பேச வேண்டியது அவசியம்.

3. காதலியுங்கள்!

3. காதலியுங்கள்!

காதலிப்பது என்றால் மற்றவர்களை காதலிப்பதில்லை.. உங்களை நீங்களே காதலியுங்கள். அப்படி காதலிக்கும் விதமாக நீங்கள் இல்லை என்றால் உங்களுக்கு பிடித்த மாதிரி உங்களை மாற்றிக்கொண்டு காதலித்து பாருங்கள்..! உலகமே அழகாக தெரியும்!

4. சுய மரியாதை!

4. சுய மரியாதை!

யாருக்காகவும் எதற்காகவும் உங்களது சுய மரியாதையை இழந்து வாழாதீர்கள்... சுய மரியாதை இல்லாமல் வாழ்வது கொடுமையான ஒன்றாகும்.

5. இரசித்து வாழுங்கள்!

5. இரசித்து வாழுங்கள்!

வாழ்க்கையில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை கூட இரசித்து வாழுங்கள். உங்களுக்கு கிடைத்த விஷயங்களை நினைத்து பெருமிதம் கொள்ளுங்கள். கிடைக்காதவற்றை நினைத்து வருத்தமடையாதீர்கள்.

6. மரியாதை இல்லாத இடம்

6. மரியாதை இல்லாத இடம்

மனிதனுக்கு மரியாதை என்பது மிகவும் அவசியம். உங்களுக்கு மரியாதை மற்றும் முக்கியத்துவம் இல்லாத இடத்தில் ஒரு வினாடி நேரம் கூட இருக்காதீர்கள்.

7. நம்பிக்கை

7. நம்பிக்கை

உங்களை மற்றவர்கள் நம்புகிறார்களா இல்லையா என்பது பெரிய விஷயம் அல்ல. உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை இருக்க வேண்டும் அது தான் பெரிய விஷயம். எனவே எப்போதும் உங்கள் மீது நம்பிக்கையுடன் இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.

8. உரிமையை விட்டு தர வேண்டாம்

8. உரிமையை விட்டு தர வேண்டாம்

உங்களது உரிமைகளை ஏதேனும் ஒரு காரணத்திற்காக விட்டுக்கொடுத்தால், நீங்கள் முட்டாளாகிவிடுவீர்கள். உங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளை யாராவது பரித்தால் அதை எதிர்ப்பதில் தவறு எதுவும் இல்லை.

9. எதிரிகளுக்கும் உதவுங்கள்

9. எதிரிகளுக்கும் உதவுங்கள்

ஒருவர் கஷ்டத்தில் இருக்கும் போது அவர் உங்களது எதிரி என்றால் கூட பார்த்து சிரிக்காதீர்கள். அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். இதனால் உங்களது மதிப்பு கூடுமே தவிர எந்தவிதத்திலும் நீங்கள் தாழ்ந்து போகமாட்டீர்கள்.

10. நேர்மை அவசியம்

10. நேர்மை அவசியம்

அனைவரிடத்திலும் நேர்மையாக இருக்க வேண்டியது அவசியம். இந்த நேர்மை தான் சமூகத்தில் உங்களது நிலையை உயர்த்தும். நேர்மை இல்லாமல் நீங்கள் உயர்ந்த நிலைக்கு சென்றால் கூட அதில் எந்த வித மகிழ்ச்சியும் இருக்க போவதில்லை.

11. மன்னிப்பு கேளுங்கள்

11. மன்னிப்பு கேளுங்கள்

உங்கள் மீது தவறு இருந்தால் மன்னிப்பு கேளுங்கள். மன்னிப்பு கேட்க தயக்கம் காட்டாதீர்கள். ஒரு மன்னிப்பு கேட்பதால் நீங்கள் ஒன்றும் தாழ்ந்து போய்விட போவதில்லை. எனவே தவறு செய்தால் மன்னிப்பு கேளுங்கள்.

12. மரியாதை

12. மரியாதை

அனைவரிடமும் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள். எந்த சூழ்நிலைகளிலும் மற்றவர்களை காயப்படுத்தும் சொற்களையோ அல்லது தீய சொற்களையோ உபயோகப்படுத்தாதீர்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Twelve Best Things You Should Learn From Oviya

Twelve Best Things You Should Learn From Oviya
Desktop Bottom Promotion