அழுதால் தண்ணீ கொடுக்கணும்னு எந்த ‘பிக் பாஸ்’ சொல்லியிருக்காரு?

Posted By:
Subscribe to Boldsky

உறவில் மிக முக்கியமான அம்சம் என்றால் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருப்பது. சோர்ந்திருக்கும் போது தட்டிக் கொடுக்கும் போதும் நானிருக்கிறேன் என்று நீங்கள் உறுதியளிக்கும் தருணங்களில் தான் உங்கள் மீதான காதல் இன்னும் அதிகரிக்கும்.

Tips to stop Crying

ஒருவர் எதோ ஒரு காரணத்தால் மிகவும் வருந்தி அழும் போது என்ன சொல்வதென்று தெரியாமல் அவர்களை சமாதானப்படுத்தவும் முடியாமல் தவிப்பவர்களா நீங்கள்.... உங்களுக்காகத்தான் இது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நலமா ?

நலமா ?

ஒருவர் சோகமாக இருக்கிறார். எதோ தவறு நடந்திருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து விட்டீர்கள், அழுபவரின் கவனத்தை திசை திருப்புகிறேன் என்று நலமா? போன்ற பாசிட்டிவ் விஷயத்தை பேசாதீர்கள். எப்படியும் எடுத்தவுடனேயே நான் அழுவதற்கு இது தான் காரணம் என்று சொல்ல மாட்டார்கள். முதலில் ஏதுமில்லை என்று சொல்லித் தவிர்ப்பார்கள்.

இதனைத் தவிர்க்க, நான் உதவி செய்யலாமா? என்று கேளுங்கள். அழத்தேவையில்லை.உனக்கு உதவி செய்ய நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு வருமாறு அவரக்ளின் கையைப் பிடித்து கேளுங்கள்.

 வாய்ப்பில்லை :

வாய்ப்பில்லை :

ஒருவர் சோகமாக இருக்கிறார் என்று தெரிந்தவுடன் உடனே இது தான் வாய்ப்பு என்று கருதி. அவர்கள் செய்த தவறை மேலும் மேலும் நினைவுப்படுத்தும் விதமாகவோ அல்லது தானும் இப்படித்தான் கஷ்டப்பட்டேன் என்று உங்களது சுயவரலாறு சொல்லக்கூடிய வாய்ப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

என்னாச்சு ? :

என்னாச்சு ? :

ஒருவர் அழுகிறார் என்றால் உடனடியாக அதற்கான காரணம் தெரிந்திட வேண்டும். நீங்கள் முதலில் கேட்டவுடனேயே எல்லாத்தையும் சொல்லிட வேண்டும் என்று எதிர்ப்பார்க்காதீர்கள். காரணம் தெரிந்தால் தான் ஆறுதல் சொல்ல முடியுமா என்ன? ஏதோ ஓர் காரணம் கஷ்டத்தில் இருக்கிறார். நாம் கை கொடுக்கலாமே... இதெல்லாம் ஒன்றுமில்லை மீண்டு வரலாம்.. வா என்று சொல்லுங்கள்.

அழாதே :

அழாதே :

அனைவரும் செய்கின்ற செயல் இது. ஒருவர் அழுதால் உடனேயே அழாதே என்று சொல்வார்கள். கஷ்டமோ, ஏமாற்றமோ எதோ ஒரு தவிப்பு அதனை சமாளிக்க முடியாமல் உணர்ச்சிப் பெருக்கால் அழுகிறார். அந்த நேரத்தில் திடிரென நீங்கள் அழாதே என்று சொன்னவுடன் கண்ணீர் நின்றுவிடாது. அழுவதற்கான நோக்கம், விரைவில் நிறுத்த வேண்டும் என்பதல்ல மனதில் இருக்கும் கஷ்டம் கரைய வேண்டும் என்பதே.

இதெல்லாம் ஓர் காரணமா? :

இதெல்லாம் ஓர் காரணமா? :

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முக்கியத்துவங்கள் இருக்கும். நமக்கு மிகவும் அத்தியாவசியமாக இருக்கும் விஷயம் இன்னொருவருக்கு அனாவசியமாக இருக்கும். அழுபவரை சாமதானப்படுத்துகிறேன் என்று இதெல்லாம் ஒரு காரணமா? இதுக்கெல்லாம் யாராவது அழுவார்களா? என்று அவரை மேலும் தான் தவறு செய்கிறோமா என்று எண்ண வைக்காதீர்கள்.

சில்லறைத்தனமான காரணமாக உங்களுக்கு தெரிந்தாலும் அழுபவரிடம் அதனைச் சொல்லாதீர்கள்.

கோபம் :

கோபம் :

அழுபவர்கள் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார், தேவையில்லாமல் எதையோ கற்பனை செய்து கொண்டு அழுகிறார் என்று நீங்கள் நினைப்பதை எல்லாம் அவரிடம் சொல்லி கோபப்பட வேண்டாம். அதே போல ஏன் அழுகிறாய் என்று காரணத்தைக் கேட்டு நச்சரிக்காதீர்கள்.

உங்கள் கோபம் அழுகையை அதிகரிக்குமே தவிர அவர்களை சமாதானப்படுத்தாது.

எல்லாம் தீரும் :

எல்லாம் தீரும் :

கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத ஓர் சூழ்நிலையில் தான் அழுகை வருகிறது. மனதை சஞ்சலப்படுத்தும் ஏதோ ஓர் விஷயம் நடந்திருக்கிறது. அழுவது ஒன்றும் பெரிய குற்றமில்லை அழட்டும். மனதில் இருக்கும் கஷ்டம் இதனால் ஓரளாவது குறையும். நானிருக்கிறேன், எதோ ஓர் சங்கடம் நடந்திருக்கிறது எல்லாம் விரைவில் சரியாகும் என்று சொல்லுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tips to stop Crying

Tips to console the person who cries
Story first published: Thursday, August 10, 2017, 17:57 [IST]