அந்த பொண்ணு உங்கள வெறும் 'ஊறுகாவா' தான் யூஸ் பண்றாங்கன்னு எப்படி தெரிஞ்சுக்கலாம்?

Written By:
Subscribe to Boldsky

உங்களது அலுவலகம் அல்லது கல்லூரியில் ஒரு பெண் உங்களுடன் நன்றாக பேசுகிறார் என்பதற்காக நீங்கள் அவர் உங்களை காதலிக்கிறார் என்று நினைத்து விட முடியாது! தினமும் ஒன்றாக காபி சாப்பிடுவோம், வெளியில் போகும் போது என்னை தான் முதலில் கூப்பிடுவாள் அதனால் அவள் என்னை காதலிக்கிறார் என்று எல்லாம் நீங்கள் சொல்லிவிட முடியாது!

ஒரு பெண் உங்களை உண்மையாகவே காதலிப்பதற்கும், உங்களை அவசர உதவிக்கு கூப்பிடும் ஒரு நபராக மட்டுமே பயன்படுத்துவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. காதல் என்று தவறாக புரிந்து கொண்டால், நீங்கள் தான் இறுதியில் கஷ்டப்படுவீர்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அழைப்பை ஏற்காமல் இருப்பது!

அழைப்பை ஏற்காமல் இருப்பது!

உங்களுக்கு அவர் அடிக்கடி கால் செய்ய மாட்டார். நீங்களாகவே போன் செய்து பேச வேண்டும் என்று நினைத்து போன் செய்தாலும் அதை அவ்வளவு சீக்கிரமாக எடுத்து பேசமாட்டார்...!

வீட்டிற்கு அழைக்கமாட்டார்!

வீட்டிற்கு அழைக்கமாட்டார்!

உங்களை அவரது வீட்டிற்கு அழைப்பது, பெற்றோரிடன் அறிமுகம் செய்து வைப்பது போன்ற வேலைகளில் அவர் ஈடுபாடு காட்டமாட்டார்.

விருப்பமின்மை!

விருப்பமின்மை!

உங்கள் உடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொள்ள விரும்பமாட்டார். எப்போதாவது எதிர்பாராத விதமாக அவரது நண்பர்கள் உங்கள் இருவரையும் சேர்த்து வைத்து வெளியிடங்களில் பார்த்துவிட்டால், அதை தர்ம சங்கடமாக நினைப்பார்.

நண்பராக ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது!

நண்பராக ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது!

நீங்களாகவே முன்வந்து அவருக்கு ஃபிரண்ட் ரெக்குவஸ்ட் கொடுத்தாலும் கூட, எத்தனை நாட்கள் ஆனாலும் அவர் அதனை ஏற்கமாட்டார். பேஸ் புக்கில் கூட உங்களை நண்பராக வைத்துக்கொள்ளமாட்டார்.

பார்ட்டிகளுக்கு அழைக்கமாட்டார்

பார்ட்டிகளுக்கு அழைக்கமாட்டார்

அவரது பல நண்பர்களை தனது வீட்டிற்கோ அல்லது பிறந்தநாள் விழாவிற்கோ அழைத்தாலும் கூட உங்களை அவர் அழைக்கமாட்டார். இதனை வைத்து நீங்கள் அவருக்கு வெறும் உதவியாளர் மட்டும் தான் என்பதை உணரலாம்.

உதவிக்கு அழைப்பார்

உதவிக்கு அழைப்பார்

அவருக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மட்டும் உங்களுக்கு தான் முதலில் போன் வரும். ஆனால் உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவரிடம் இருந்து எந்தவிதமான உதவியும் உங்களுக்கு கிடைக்காது!

வெளிப்படையாக பேசாமல் இருப்பது!

வெளிப்படையாக பேசாமல் இருப்பது!

அவர் உங்களுடன் மேலோட்டமாக பேசுவாரே தவிர, உறவை வழுப்படுத்தும் விதமாக எதையும் ஆழமாக பேச முன்வர மாட்டார். பேச வேண்டுமே என்பதற்காக மட்டுமே உங்களிடம் பேசுவார். எதையும் வெளிப்படையாக பேசமாட்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

signs she does not like you back

signs she does not like you back