பாகுபலி 2-ல் இதெல்லாம் நீங்க கவனிச்சீங்களா?

Posted By:
Subscribe to Boldsky

குடும்பம், குடும்பமாக பார்த்து கொண்டாடப்படுவதால் தான் பாகுபலி 2, ஒரே வாரத்தில் 700 கோடிகள் வசூலித்து இந்தியளவில் பெரும் சாதனை படமாக வியந்து பார்க்கப் படுகிறது.

இந்த பாகுபலி 2, உங்கள் இல்லறம், வாழ்வியல் சிறக்க இந்த படத்தின் வாயிலாக பல பாடங்கள் கற்பித்து சென்றுள்ளது. அவை என்னென்ன என்று இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மணமகன் தேர்வு!

மணமகன் தேர்வு!

எல்லா பிரச்சனையும், சிவகாமி தேவசேனாவை தன் மகனுக்கு மணமுடிக்க சுயமாக முடிவு செய்ததது தான் காரணம். இதுவே, தேவசெனாவிடம் கேட்டு மணமுடிக்க முடிவு செய்திருந்தால் எந்த பிரச்னையும் எழுந்திருக்காது.

இது இந்த கால பெற்றோருக்கும் பொருந்தும். திருமணம் முடிவு செய்யும் போது பெண்களுக்கு அவருக்கு பிடித்தமான மணமகன் தேர்வு செய்ய சுதந்திரம் அளிக்க வேண்டும்.

அகந்தை உறவுகளை அழிக்கும்!

அகந்தை உறவுகளை அழிக்கும்!

சிவகாமி ஒரு சிறந்த ஆளுமை கொண்ட பெண் தான். ஆனால், தேவசேனாவுடன் ஏற்பட்ட அகந்த, அவரது கண்ணை மறைத்ததன் காரணமாக தான் பாகுபலி மத்தியில் இருந்த சிவகாமியின் அன்பு, தாய் பாசம் அழிய காரணமானது. எந்த ஒரு உறவாக இருப்பினும், அகந்தை குடிகொண்டுவிட்டால் அது அழிவை தான் சென்றடையும்.

தர்மம் தான் அனைத்தை காட்டிலும் பெரியது!

தர்மம் தான் அனைத்தை காட்டிலும் பெரியது!

தாயா? தாரமா? என வரும் போது, தர்மத்தை நிலைநாட்ட தாய் செய்தது தான் தவறு என அமரேந்திர பாகுபலி எடுத்த முடிவு தான் சிறந்தது. யார் உறவு பெரிது என்பதை காட்டிலும், தர்மம் யார் பக்கம் இருக்கிறது என்பதை தான் பெரிதாக பார்க்க வேண்டும்.

அதிகாரத்தை விட, காதல் சிறந்தது!

அதிகாரத்தை விட, காதல் சிறந்தது!

பல்லாலதேவா அதிகாரம் முக்கியம் என நினைத்தான், பாகுபலி அன்பும், பாசமுமே முக்கியம் என நினைத்தான். பல்லாலதேவா அரசனாக முடிசூடிய போதிலும், கூட தங்கள் மீது அதிக பாசம் கொண்டதனால் தான், பாகுபலி சேனாதிபதியாக பதிவி ஏற்கும் போது மக்கள் கரகோஷங்கள் எழுப்பி பாராட்டினர். அதிகாரத்தை காட்டிலும், அன்பும், பாசமே இதயங்களை வெல்ல உகந்தது.

நயவஞ்சகம்!

நயவஞ்சகம்!

நாம் எப்படிப்பட்டவராக இருப்பினும், நமது மனதில் விஷத்தை கலக்க, தீய வழியில் எடுத்து செல்ல சிலர் முயற்சி செய்வார்கள். அவர்களது நயவஞ்சக பேச்சில் மதிமயங்கி போய்விட்டால் அதற்கான தண்டனை நாம் பெற்றே தான் தீர வேண்டும். எனவே, நயவஞ்சக பேச்சை, மூளை சலவை செய்வோரை ஒருபோதும் நம்ப வேண்டாம்.

ஆளுமையில் சிறந்தவர் பெண்கள்!

ஆளுமையில் சிறந்தவர் பெண்கள்!

ஆண்களை காட்டிலும் ஆளுமையில் சிறந்தவர்கள் பெண்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சிவகாமி. பெண்களை போல ஒரு செயலில் நிதானமாகவும், பொறுமையாகவும், அதே சமயத்தில் விவேகமாகவும் ஆண்களால் செயல்பட முடியாது.

அதிகாரம் மனதை அழிக்கும்!

அதிகாரம் மனதை அழிக்கும்!

அதிகாரத்தை வைத்து தன் ஆதிக்கத்தை மக்கள் மத்தியில் செலுத்துவதால் யாரும் பெரிய ஆள் ஆகிட முடியாது. ஆதிக்கம் செலுத்துவது உங்களை கொடூரனாக தான் வெளிப்படுத்தும். அமைதியான வழியே என்றும் ஆகசிறந்தது!

அண்ணன் - தம்பி போட்டி!

அண்ணன் - தம்பி போட்டி!

அண்ணன் தம்பி மத்தியிலான ஆரோக்கியமான போட்டி நல்லது. ஆனால், பகைமை, பொறாமை கலந்த போட்டி பெரும் அழிவை தான் கொடுக்கும்.

நம்பிக்கை வேண்டாம்!

நம்பிக்கை வேண்டாம்!

யாரையும் குருட்டுத்தனமாக நம்புவதை தவிர்க்க வேண்டும். எவ்வளவு நல்லது செய்தாலும், ஏதேனும் காரணத்தால் அவர்கள் நம்மை எப்போது வேண்டுமானாலும் முதுகில் குத்தலாம்.

பாவங்கள் பழிவாங்கும்!

பாவங்கள் பழிவாங்கும்!

நாம் செய்யும் ஒவ்வொரு பாவமும், அதற்கு ஏற்ற, நிகரான எதிர்மறை தாக்கங்களை நம் மீது செலுத்தாமல், நம்மை பாதிப்படைய செய்யாமல் விடாது. பல்லாலதேவா அமரேந்திர பாகுபலிக்கு செய்த பாவங்கள், மகேந்திர பாகுபலி மூலம் தீர்க்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ten Relationship Lessons We Can Learn From Bahubali!

Why did people all over the country get connected to this story? Maybe, because it is all about human relationships! Here are some relationship lessons this story teaches us!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter