என் கணவனும், தந்தையும், நான் எதிர்பார்த்த காதலும் - My Story #043

Posted By:
Subscribe to Boldsky

எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. நான் என் அப்பா மீது அவ்வளவு அன்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன். ஆனால், அதில் சிறிதளவு கூட அவர் என்மீது காண்பித்ததாய் நான் உணர்ந்ததே இல்லை.

என் பெற்றோருக்கு குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லை. ஒரு மருத்துவரிடம் உத்திரவாதம் பெற்று அவர்கள் உறவில் இணைந்து வந்துள்ளனர். ஆனால், திருமணமான ஐந்து வருடத்தில் நான் பிறந்தேன். அதன் பிறகு எனது தம்பி.

நாங்கள் பொருளாதார அளவில் பெரிய குடும்பம் கிடையாது. பல ஆண்டுகளாக இந்திய வளரும் நிலையிலேயே இருப்பது போல தான் எங்கள் குடும்ப பொருளாதாரமும். ஒரு நாள் வளர்ந்துவிடுமா என்ற கனவு இருந்தது. ஆனால், எப்போது வளரும் என தெரியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொருளாதாரம்!

பொருளாதாரம்!

பெரும் பொருளாதாரம் ஈட்ட வேண்டும் என்ற கனவு கொண்டிருந்த எனது தந்தை வெளிநாடு சென்றுவிட்டார். வருடத்திற்கு ஒருமுறை எங்களை காண ஒரு மாதம் வந்து செல்வார் என் தந்தை.

நான் அவருடன் மிக நெருக்கமாக பழகியதே இல்லை. அப்படி ஒரு நிகழ்வு நடந்ததாக எனக்கு நினைவும் இல்லை. அவர் எப்படி சிரிப்பார், எப்படி அணைத்துக் கொள்வார் என்றும் நான் அறிந்ததில்லை. ஏன், எனது பெயரை எப்படி அவர் அன்புடன் அழைப்பார் என்றும் நான் அறிந்ததில்லை.

இதனால் அவர் என் மீது அக்கறை அற்றவர் என நான் கூறவில்லை. என் பெற்றோர் எங்களது எதிர் காலத்திற்காக, அவர்களது இளமை காலத்தை தியாகம் செய்தவர்கள். எங்களுக்கு சிறந்த எதிர்காலம் அமைத்து தரவேண்டும் என்பதே அவர்களது கனவாக இருந்தது.

எங்கள் எதிர்காலம்...

எங்கள் எதிர்காலம்...

நானும், எனது தம்பியும் ஆங்கில மீடியத்தில் தான் கல்வி கற்றோம். எங்கள் பெற்றோர் அணிபவிக்காத வாழ்க்கையை நாங்கள் அனுபவித்து வந்தோம். நான் எப்போதுமே படிப்பில் சுட்டி. படிப்பில் சாத்தித்து தான் எனது பெற்றோக்கு நன்றி கடன் செலுத்த முடியும் என்பது நான் நன்கு அறிந்திருந்தேன்.

எனது வாழ்நாள் முழுக்க நான் அடம் பிடித்தது இல்லை. பொம்மை வேண்டும், உடைகள் வேண்டும் என கேட்டதில்லை. என் பள்ளியில் அது நடந்தது, இது இப்படி இருந்தது என நான் பெருமிதமாக தந்தையிடம் பேசியதே இல்லை.

அம்மா தான்...

அம்மா தான்...

என் தந்தையிடமான எனது பேச்சு வார்த்தை தாய் மூலமாக தான் இருந்தது. பெரியவர்களிடம் வாய் துடுக்காக பேசக் கூடாது என்பது எங்கள் வீட்டில் இருந்த சட்டம். ஆகையால், அப்பாவிடம் நான் பேச விரும்புவதை, எனது தாயின் குரல் வழியாக தான் நான் கூற முடியும்.

என் அப்பாவுடன் எனது நினைவுகள் மிகவும் அரிதானவை. நான் சோம்பேறித்தனமாக இருக்கிறேன் என ஒருமுறை அவன் என் மீது கோபித்து கொண்டு கத்தினார். ஒருமுறை என் தம்பியுடன் சண்டையிட்டேன் என்றும், மறுமுறை முழுமையாக உணவருந்தவில்லை என்றும் என் மீது கோபித்துக் கொண்டு திட்டினார்.

இதெல்லாம் தான் என் தந்தைக்கும், எனக்கும் மத்தியில் என் நினைவில் நான் சேமித்து வைத்திருக்கும் சம்பவங்கள்.

கடுமையான வார்த்தைகள்...

கடுமையான வார்த்தைகள்...

என்னை திட்டும் போது அல்லது எனக்கு அறிவுரை கூறும் போது அவர் பயன்படுத்தும் முதல் வரி மனதில் மிக ஆழமாக பதியும். ஏனெனில், அவை மிகவும் கடுமையாக வார்த்தைகளாக இருக்கும்.

நான் இதை எண்ணி வருந்தினால், அம்மா குறிக்கிட்டு அப்பாவிற்கு உங்கள் எதிர்காலம் மீது அதிக கவலை இருக்கிறது. உங்கள் வாழ்க்கை குறித்து அச்சம் கொண்டுள்ளார் என ஏதேனும் கூறுவார். இதுவே, அப்பாவிற்கும் எனக்கும் இடையில் ஒரு பாலம் உருவாக காரணமாகிவிட்டது.

எனக்கு இப்போது வயது 23. இன்னும் எனது அப்பாவிற்கு நான் ஒரு அந்நியராக தான் இருக்கிறேன். நான் யார் ஒருவர் மீது எனது வாழ்நாள் முழுவதும் அதிக அக்கறை எடுத்துக் கொண்டுள்ளேனோ, அவர் என்னுடன் பேசியது கூட இல்லை.

அவராக பேசினார்...

அவராக பேசினார்...

ஒருமுறை அவராக வந்து என்னிடம் பேசினார். அது, என் திருமணம் குறித்து. நீ திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்றார். அதுவும் அவரது விருப்பத்திற்கு ஏற்ற ஒருவர். என் கனவுகள், வேலை என பலவன தடைப்படும் என தெரிந்தும், நான் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. உடனே சம்மதம் தெரிவித்தேன்.

என் மனதில் ஒரு மூலையில் என் தந்தை எப்போதும் எனக்கு உறுதுணையாக இருப்பார் என்ற எண்ணம் இருந்தது. முக்கியமாக எனது எதிர்காலத்தில் அவர் என்னுடன் இருப்பார் என்று.

படிக்கும் போதே...

படிக்கும் போதே...

நான் பட்டம் பெறும் முன்னரே திருமணம் செய்துக் கொண்டேன். குறைந்தபட்சம் நான் படித்து முடித்த பிறகாவது வைத்துக் கொள்ளலாம் என இருந்தேன். என் தந்தை ஒப்புக்கொள்ளவில்லை. எனக்கு 19 வயதிலேயே திருமணம் செய்து வைத்தார்.

நான் எனது கணவரையும் காதலிக்கிறேன், அளவுகடந்து. 19 வயதில் நான் என்ன செய்ய வேண்டும், எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என பெரிதாக தெரியாது. இந்த சூழலில் என் தந்தை ஏன் இந்த வாழ்வில் தள்ளினார் என்றும் எனக்கு புரிதல் இல்லை.

பழிவாங்குதல்

பழிவாங்குதல்

19 வயதில் நான் எதற்கும் தயாராக இல்லை. என்னை எதற்கோ பழிவாங்கிவிட்டனர் என்ற எண்ணம் மட்டுமே மனதுக்குள் ஓடியது. என்னை அவர்கள் சுமையாக கருதுவிட்டார்களா? என்ற எண்ணம் பரவியது.

எனது திருமணம், இதுநாள் வரை இவளை பாதுகாப்பாக வைத்திருந்துவிட்டோம். இனிமேல், வேறொருவன் இவளை பாதுகாக்கட்டும் என்ற நிர்பந்தம் பேரில் நடந்ததா? என கேள்விகள் எனக்குள் ஓடிக் கொண்டே இருந்தது.

கணவர்

கணவர்

என்னவோ, எப்படியோ... இப்படி ஒரு கணவர் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மற்ற பெண்களுக்கு என் கணவர் போல ஒரு துணை கிடைப்பாரா என என்னால் ஊர்ஜிதமாக கூற முடியாது.

இப்போது இந்த 23 வயதில் நான் எனது முதுகலை பட்டம் பெற்றுவிட்டேன். எனது கணவர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார். எனது தடைகளை தகர்த்து என்னை முன்னேறி செல்ல செய்கிறார். ஒருவேளை என்பது கணவர் ஆணாதிக்கவாதியாக இருந்து எனது கனவுகளை தொடரவிடாமல் இருந்திருந்தால்... என் வாழ்க்கையை நிச்சயம் கேள்விக்குறி ஆகியிருக்கும்.

சிறந்த குடும்ப தலைவி

சிறந்த குடும்ப தலைவி

ஒரு தென்னிந்தியா குடும்பத்தில் பிறந்து, மிக கட்டுக்கோப்பான முறையில் வளர்ந்த நான், என்னை நானே தயார்ப்படுத்திக் கொண்டேன். என்னால் ஒரு சிறந்த குடும்ப தலைவியாக இருக்க முடியும். எனது கனவுகளை வென்றுவிட்டேன். அடுத்து எனது இலட்சியங்களை பின்தொடர்ந்து செல்லவிருக்கிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Real Story: Can love and respect ever be the same?

Real Story: Can love and respect ever be the same?