For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய இசையை வெளிப்படையாக விமர்சித்ததால் பெண் சந்தித்த அனுபவம்!

இசையை காதலிக்கும் இருவருக்குள் நடுவில் இருக்கிற ரிலேஷின்ப் பற்றிய கதை. அதைவிட நம்முடைய முன் அபிப்ராயங்களை கலைக்கும் விதத்தில் அருமையான கதை.

|

லண்டனில் இருக்கும் காலேஜ் ஆஃப் மியூசிக்கில் எம்.ஏ.மியூசிக் டெக்னாலஜி முடித்து விட்டு சென்னையில் இசை ஆல்பங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை புதிதாக ஆரம்பிக்கும் நோக்கத்தோடு வந்திருந்தான் வினோத்.

வெளிநாட்டு வாழ்க்கை, இவன் வருமானத்தை நம்பாது... இவனுக்காக லட்சமென்ன கோடிகளையே முதலீடு செய்ய காத்திருக்கும் வக்கீல் அப்பா, மருத்துவ அம்மா உடன் பிறந்த மூத்த சகோதரன் ஒருவனோ தனியாக ஒரு ஐடி நிறுவனத்தை நடத்துகிறான்.

Real Life Story Between Two Music Lovers

இவனையும் எப்படியாவது பொறியியல் பக்கமோ அல்லது மருத்துவப்பக்கமோ தள்ளிவிட வேண்டும் என்று ஆரம்பித்தில் நினைத்தார்கள். ஆனால் சிறுவயதில் ஃபுட் பாலும் கல்லூரி படிக்கும் மியூசிக் என்றும் தன் பாதையை தனியாக வகுத்துக் கொண்டிருந்தான் வினோத்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஐ ஹேட் இந்தியன் மியூசிக் :

ஐ ஹேட் இந்தியன் மியூசிக் :

இந்தியன் மியூசிக் மேல எனக்கு மிகப்பெரிய அபிப்ராயம் எல்லாம் இல்ல.... அமெரிக்கன்ஸ்டோட டேஸ்ட்டே தனி அவங்களோட இசையும், இசை ரசனையும் எல்லாம் வேற லெவல்.மைக்கேல் ஜாக்சைனைத் தாண்டி, டூப்பாக் ஷூகரோட பாக்ஸ் லைஃப் கேட்டுப்பாருங்க அப்டியே உருகிடுவீங்க. அதே போல அஷரோட வாய்ஸ் ப்ப்பா... அவ்ளோ யுனிக்கான வாய்ஸ்.

உலகிலேயே மிகச்சிறந்த கலைஞர் :

உலகிலேயே மிகச்சிறந்த கலைஞர் :

ஐஸ் க்யூப்னு ஒருத்தர். அவரோட ஒரிஜினல் ஏதோ ஜாக்சன்னு வரும் வோர்ல்டுலயே தி பெஸ்ட் ராப் சிங்கர். என்னோடு ரூம்ல ஃபுல்லா ஏகப்பட்ட ஆல்பம்ஸ், அங்க நிறைய மியூசிக் எக்ஸிபிஷன் நடக்கும் நிறைய ஸ்கோப் இருக்கு... ஆனா இங்க என்னைய ஏன் மம்மி இங்க வந்து செட்டில் ஆக சொல்றீங்க இங்க சினிமா தான் எல்லாம்.

Image Courtesy

இந்தியா பயணம் :

இந்தியா பயணம் :

சினிமால இசையமச்சுட்டா ஒரு நாள்ல பாப்புலர் ஆகிடலாம். சினிமால மியூசிக் பண்ற இண்ட்ரஸ்ட் எல்லாம் இல்ல.... ஒரு பேண்ட் உருவாக்கணும். உலகம் பூரா போய் கன்சர்ட் நடத்துனும் என்று சில காலங்கள் வரை இந்தியப்பக்கமே வராமல் இருந்தான்.

ஆனால் குடும்பத்தினர் எல்லாம் வற்புறுத்தி.... இங்கே வந்தால் மட்டுமே தனியாக நிறுவனம் ஆரம்பிக்க முதலீடு வழங்கப்படும் என்று வீட்டினர் சொன்னதால் வேறு வழியின்றி கடுப்பாகி இந்தியா வந்திருக்கிறான்.

நல்ல நண்பன் :

நல்ல நண்பன் :

அப்பாவின் நண்பர் என்று ஒரு குடும்பம் அறிமுகமானது. அவர்களது மகன் சவுண்ட் இன் ஜினியரிங் படித்திருப்பதாக சொல்ல, தனக்குத் தேவைப்படும் என்று உடன் அழைத்துக் கொண்டான்.

ஆரம்பத்தில் இருவருக்கும் ஒட்டவேயில்லை. சில மாதங்களில் இருவரும் நல்ல நட்பாகி விட்டார்கள்.

விவகாரம் :

விவகாரம் :

வினோத் அமெரிக்க இசையைப் பற்றிப் புகழ அவனோ இந்திய இசைப் பற்றியும், இசையமைப்பாளர்கள் பற்றியும் புகழ்வான், இங்கே ரசனை எப்படியிருக்கிறது என்கிற விவாவதம் அவர்கள் இருவருக்குள்ளும் தினமும் நடைப்பெற்று வந்தது. விவாதங்கள் சில நேரங்கள் விவகாரம் ஆனதும் உண்டு, ஆனால் விரைவில் முடித்துக் கொண்டார்கள்.

ரகசியத் திட்டம் :

ரகசியத் திட்டம் :

இங்கே நிறுவனத்தை ஆரம்பித்து விட்டு தான் லண்டனில் போய் செட்டில் ஆக வேண்டும், இங்கிருக்கும் நிறுவனத்தை நண்பன் பராமரிக்க அங்கிருந்து நான் கவனித்துக் கொள்கிறேன், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வந்து செல்கிறேன் என்று திட்டமிட்டான்.

நண்பனிடம் பேசி எல்லாம் திட்டமிட்டபடி நடந்து கொண்டிருந்தது. அப்பா அம்மாவிடம் மட்டும் அனுமதி பெற்றுவிட்டாள் லண்டன் பறந்து விடலாம்.

வருமானம் :

வருமானம் :

பெற்றோரிடம் சொல்ல, முதலில் சம்மதிக்கவில்லை.... பின்னர் இங்கே உனக்கென்ற நிலையான வருமானத்தை உருவாக்கி வைத்துவிட்டு நீ எங்கே வேண்டுமானாலும் செல்லலாம். ஸ்டூடியோவிற்கு மட்டும் ஐம்பது லட்சம் செலவழித்திருக்கிறேன், இங்கே இண்டீரியர் என்று பத்து லட்சம்.

ரியல் லைஃப் ப்ராப்ளம் :

ரியல் லைஃப் ப்ராப்ளம் :

விலையுயர்ந்த கருவிகள், கணினி, ரெக்கார்டிங் என எல்லாமே இருக்கும் போது அதை வைத்து உன் வேலையை இங்கே ஆரம்பி .... அதுல என்னென்ன ப்ராப்ளம் வருது, இன்னும் நீ என்னெவெல்லாம் கத்துக்கணும்னு தெரிஞ்சுக்கோ.

உக்காந்து புக்ல படிக்கிறத விட ரியல் டைம்ல என்ன மாதிரியான ப்ராப்ளம் வருதுன்னு அத ஃபேஸ் பண்ணாதான் தெரியும்.

அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டான்.

வேலைக்கு ஆட்கள் வேண்டும் :

வேலைக்கு ஆட்கள் வேண்டும் :

டூயுட்.... முதல்ல ஒரு ரிசப்சனிஸ்ட் ஆள் எடுக்கணும். ஒரு லேடியா பாத்து எடுத்திடலாம் அப்பறம் சிங்கர்ஸ் அரேஜ் பண்ணிட்டு ஒரு ஆல்பம் சாங் ரெடி பண்லாம்.

யார ஹையர் பண்றது, லிரிக்ஸ்...லொக்கேஷன் எல்லாம் டிஸ்கஸ் பண்ணனும் சோ நைட் கொஞ்சம் லேட் ஆகும் என்றான்.

ம்ம்... ஸ்யூர் நோ ப்ராப்ளம்.

எந்த கான்சப்ட் :

எந்த கான்சப்ட் :

லவ் கான்சப்ட் எடுக்கலாம். அது தான் எப்பவும் எவர்க்ரீன்...

ஏய் சிட் இன்னும் என்ன லவ் லவ்ன்னு வேற நல்ல ஐடியா சொல்லு

சீரியஸ்லி லவ் கான்சப்ட் எப்பவுமே ஹைலைட் ஆகும். எல்லாருக்கும் ரீச் ஆகும். இன்னும் லவ் ஃபெய்லியர் எடுத்தா பயங்கரம்... என்று சொல்ல

அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தான் வினோத்.

நேர்காணலில்... :

நேர்காணலில்... :

ரிசப்சனிஸ்டுக்கு ஆட்கள் வேண்டுமென்ற விளம்பர கொடுக்க மெயிலில் பல சிவிக்கள் வந்திருந்தது . அதிலிருந்து வந்த சிலரை அழைத்திருந்தார்கள்.

உமையாள் என்ற பேர் மிகவும் வித்சாயமாக இருந்தால் அந்த பெயரை உடையவர் யார் என்பதை பார்க்க வேண்டியே அழைத்திருந்தான்.

உமையாள்.... எப்டி இப்டி எல்லாம் பேர் வைக்கிறாங்க என்று அந்த சிவியை பார்த்தப்படியே யோசித்தான். தன் அறையில் உட்கார்ந்த படி ஹாலில் உட்கார்ந்திருக்கும் ஆட்களை சிசிடிவி கேமரா மூலமாக பார்த்தான்.

உமையாள் :

உமையாள் :

இந்தப் பெயர் இருப்பவர் எப்படியிருப்பார். இப்படியான பெயர் என்றால் கொஞ்சம் கிராமத்து ஸ்டைலில் இருப்பார்கள்.எங்கே பாவடை தாவணி கட்டிக் கொண்டு வந்திடப்போகிறார் என்ற சிரிப்புடன் துளாவினான்.

அப்படியாருமே இல்லை. சரி எல்லாரும் இப்போது சுடிதாருக்கு மாறிவிட்டார்களே என்று நினைத்தபடி பார்க்க இரண்டு மூன்று இருந்தார்கள் யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை.

எண்ணெய் வழிய தலைவாரி இருக்கப் பின்னி பெரிய பேக் ஷோல்டரில் தொங்கவிட்டபடி வந்திருந்த ஒரு பெண்ணைப் பார்த்து.... இருப்பதிலேயே இவர் கொஞ்சம் வில்லேஜ் கெட்டப்ல இருக்கா சோ... இவ உமையாளா இருக்க வாய்ப்பிருக்கு.

அழைத்து வா :

அழைத்து வா :

வெளியில் இருந்த நண்பனை அழைத்தான். இண்டர்வியூக்கு வந்திருக்கிறவங்கள்ல உமையாள் கூட்டிட்டு வா.... முடிஞ்சதும் அப்பறம் வரிசையா அனுப்பிடு என்று சொன்னான்.

மீண்டும் சிசிடிவி. உமையாள் என்று அவன் பெயரைச் சொல்ல அங்கிருந்த யாருமே எழுந்தரிக்கவில்லை ஒருவரை ஒருவர் முகம் பார்த்த்து விழித்துக் கொண்டனர். இவன் தான் யூகித்து வைத்திருந்த பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவள் எழுந்தரிக்கவேயில்லை.

இல்லை :

இல்லை :

மீண்டும் உள்ளே வந்த நண்பன்.... உமையாள் இன்னும் வர்ல மத்தவங்கல அனுப்பவா? என்றான்.

ஏமாற்றத்துடன் ஒ.கே சொன்னான்.

ஒவ்வொராக வந்தார்கள் சம்பிரதாய பேச்சுக்கள் எல்லாம் நடந்தது. வந்திருந்தவர்க்ளில் இருவரை தேர்ந்தெடுத்து வைத்திருந்தான். இவர்களில் யாராவது ஒருவரை தேர்ந்தெடுக்கலாம் என்று திட்டம்.

பத்து மணிக்கு இண்டர்வியூ சொல்லியிருக்கோம். நானே 11.30 க்கு வந்தேன் அப்பறம் பத்து நிமிஷம் கழிச்சு இண்டர்வியூ ஸ்டார்ட் ஆச்சு அதுவரைக்கும் வர்லயே இப்ப 12.30 இன்னுமா வராம இருப்பா? என்று யோசித்தான்.

வேலை தொடர்ந்திடு :

வேலை தொடர்ந்திடு :

என்னடா யாராவது தேரினாங்களா?

இதோ இந்த ரெண்டு பேர செலக்ட் பண்ணிருக்கேன். இந்தப் பொண்ணு ஏற்கனவே ஒன் யியர் எக்ஸ்பீரியன்ஸ் இருக்குனு சொல்லியிருக்கா இத செலக்ட் பண்ணலாம்னு இருக்கேன் நீ என்ன நினைக்கிற என்று சொல்லி அவளின் ரெசியூமை அவன் முன்னால் போட்டான்.

அதை வாங்கி படித்துக் கொண்டே.... என்னடா யோசிக்கிற வந்தவங்க யாரும் செட் ஆகலன்னா சொல்லு இன்னொரு தடவ அட்வர்டைஸ்மெண்ட் கொடுக்கலாம்.

இல்லல்ல அதெல்லாம் வேணாம். ஏற்கவே இதுக்கு ஒன் வீக் டைம் கொடுத்திருக்கோம். மத்த ப்ராசஸ் எல்லாம் இதனால டிலே ஆக வேண்டாம் ப்ரோசீட் பண்ணீடு என்றான்.

சார் ப்ளீஸ் :

சார் ப்ளீஸ் :

இவர்கள் உள்ளே பேசிக்கொண்டேயிருக்க ... உள்ளே யாரோ நுழைவதை சிசிடிவி வழியாக பார்த்தான் வினோத்.

டேய் யாரோ வர்றாங்க பாரு என்று சொல்ல, அவன் எழுந்து வெளியே சென்றான்.

யெஸ்...

தான் இண்டர்வியூவிற்கு வந்திருப்பதாக சொல்ல.... இண்டர்வியூ எல்லாம் முடிந்து விட்டது காலை பத்து மணிக்கு அழைத்திருந்தோம். இப்போது மணி ஒன்று என்று கொஞ்சம் அதட்டலாகவே பேசினான்.

சார்... ப்ளீஸ் என்று ஒரு கெஞ்சள்

பிறகு அவனே... உள்ளே கேட்டு வருவதாகச் சொல்லி இவனிடம் வந்து விஷயத்தை சொல்ல ஒ.கே வரச்சொல்லு பாக்கலாம் என்று சொன்னான் வினோத்.

Image Courtesy

அல்ட்ரா மார்டன் :

அல்ட்ரா மார்டன் :

டீ சர்ட்... ஷார் ஹேர் வித் கலரிங், டேட்டூ , புருவத்தில் எல்லாம் வளையத்தை மாட்டியிருந்தால். மூக்கிலும் ஒரு வளையம். காதில் வரிசையாக நான்கைந்து தோடுகள்.

பார்க்கவே அல்ட்ரா மார்டன் பெண்ணாக தெரிந்தாள். இவள் ஏன் ரிசப்ஷனிஸ்ட் வேலைக்கு வர வேண்டும் என்று ஆச்சரியமாக இருந்தது.

Image Courtesy

 மியூசிக் இண்ட்ரஸ்ட் :

மியூசிக் இண்ட்ரஸ்ட் :

தனக்கு இசையில் அதீத ஆர்வமென்றும் அதனாலேயே இங்கே வேளைக்கு வருவதாகவும் சொன்னாள்.

யாரோட மியூசிக் பிடிக்கும்?

ஐஸ் ஸ்டோன்.

ஒரு கணம் அதிர்ந்தே விட்டான். என்ன சொன்னீங்க ஐஸ் ஸ்டோன் எப்டி தெரியும்? கேட்ருக்கீங்களா அவரோட ராப் மியூசிக்க

யா...அவர் நடிச்ச படங்கள கூட பாத்துருக்கேன். அவர் வாய்ஸ்ல ஒரு பெப் இருக்கும் அதுக்காகவே அவரோட சாங்க்ஸ் கேக்கலாம்.

இவனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இவன் சிலப் பெயர்களைச் சொல்ல அவரைப் பற்றியும் அவர்களின் இசையப் பற்றியும், அவர் நடத்திய கன்சர்ட் பற்றி எல்லாம் விவரித்தாள்.

நுணுக்கமான விஷயங்கள் :

நுணுக்கமான விஷயங்கள் :

இசையின் தொழில்நுட்பமும் அவளுக்கு கொஞ்சம் தெரிந்திருந்தது. நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருந்தாள். இசைக்கருவிகள் பற்றியும் அவளுக்கு நிறையவே தெரிந்திருந்தது.

புல்லாங்குழல் இசைக்க பிடிக்கும் என்று சொல்லியிருந்தால் ரஹ்மானின் இசையும் இளையராஜவின் இசையும் கால வரிசைக்கு ஏற்படி வேறுபடுத்தி நுணுக்கங்களை விவரித்தாள்.

குறிப்பட்ட பாடலில் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே தாளத்தில் வரும். என்று மிகவும் நுணுக்கமான விஷயங்களை எல்லாம் சொல்லி ஆச்சரியப்படுத்தினாள்.

மியூசிக் மேக்ஸ் :

மியூசிக் மேக்ஸ் :

ரிஷப்சனிஸ்ட்டுக்கு வேண்டாம். இங்கே புதிதாக ஆரம்பிக்கப் போகும் பேண்டில் இவளை சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டான்.

க்ரேட். ரொம்ப ஆச்சரியமா இருக்க என்ன படிச்சிருக்கீங்க. எம்.எஸ்சி மேக்ஸ்

வாட்? மேக்ஸா.... மியூசிக் தான் இண்ட்ரஸ்ட்னு சொன்னீங்க.... ஹோ எக்ஸ்டா கோர்ஸ் பண்ணிருக்கீங்களா?

அதெல்லாம் இல்ல மியூசிக்ல எதுவுமே நான் படிச்சதில்ல. மேக்ஸ் தான் படிச்சேன் ஒரு ஸ்கூல்ல டீச்சரா இருந்தேன்.

லாஸ்ட் த்ரீ மன்த் முன்னாடி தான் டிஸ்கண்டினியூ பண்ணேன். ஃபிரண்டோட சேர்ந்து ரெண்டு யூ டியூப் ஆல்பம் ரிலீஸ் பண்ணிருக்கேன்.

இது தான் இந்தியா:

இது தான் இந்தியா:

அப்றம் எப்டி இவ்ளோ விஷயம்.... ?

மியூசிக் எனக்கு பிடிக்கும்.... தேடித் தேடி படிப்பேன் கத்துப்பேன். நான் சாங்க்ஸ் கூட பாடுவேன் பட் அவ்ளோவா பெர்ஃபெக்ட்டா இருக்காது என்று சிரித்தாள்.

எப்டி ஒரு விஷயத்துல ஆசைய வச்சிட்டு இன்னொரு விஷயத்த படிக்கிறீங்க... எப்டி உங்களால படிக்க முடியுது. உங்களோட ட்ரீம் போன பரவாயில்லையா?

தட்ஸ் இந்தியா என்றாள்.

இவனும் சிரித்தான். க்யட் இண்ட்ரஸ்ட்டிங்...சிறிய இடைவேளிக்குப்பின் யூ டூ என்றான்.

பார்ட்னர் :

பார்ட்னர் :

இவள் சிரித்துக் கொண்டாள். அவள் மீதான அபிப்ராயம் உயர்ந்தது. அவளோட அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்தது. இன்னொரு நாள் வரச்சொல்வோமா? எத்தனை நாளைக்கு இங்கே வேலை செய்வாள் வேறு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்தால்....

அவளிடமே கேட்டான்....

நோ ஐடியா.

தான் புதிதாக பேண்ட் ஒன்று ஆரம்பிக்கப் போவதாகவும் லைஃப்டைம் பார்ட்னர் அக்ரீமெண்ட் போட்டுக் கொள்ளலாம் என்றான்.

இவள் முதலில் லைஃப்டைம்னா என்று புரியாமல் விழிக்க... ஜஸ்ட் கிட்டிங் என்று சமாளித்தான்.

ஐ லவ் திஸ் ப்ரிட்டி கேர்ள் என்று மனதில் சொல்லிக் கொண்டான்.

ஒ.கே நாளைக்கு வந்து ஜாயிண்ட் பண்ணிடுங்க என்று கை குலுக்கி அனுப்பி வைக்கும் போது....

ஹே... சாரி ஐ ஃபர்காட் யுவர் நேம்..

உமையாள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story Between Two Music Lovers

Real Life Story Between Two Music Lovers
Desktop Bottom Promotion