ஒரு நாள் ஆண் பெண்ணாக மாறினா? - வெச்சு செய்ய பெண்கள் கொடுக்கும் 15 டாஸ்க்!

Posted By:
Subscribe to Boldsky

பெண்ணாக பிறப்பது, இருப்பது, வளர்வது, வெல்வது, தோற்பது, இறப்பது என எல்லாமே கடினம் தான். இதற்கான ஒரே காரணம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் ஆணாதிக்க யுகமாக இருப்பது.

ஒருவேளை, ஒருநாள் முதல்வர் போல, ஒரு நாள் பெண் வாழ்க்கை என ஆண்களுக்கு ஒரு வரம் அல்லது ஃபேன்ட்ஸி வாழ்க்கை அமைந்தால்... பிக் பாஸ் போல என்னென்ன டாஸ்க் எல்லாம் கொடுத்து ஆண்களை, பெண்களின் வாழ்க்கை மற்றும் வலிகளை உணர்த்துவார்கள்....

சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டதுக்கு 15 அதிரிபுதிரி டாஸ்க் பட்டியலை நீட்டிஇருக்காங்க... பாருங்க....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மார்பிங்!

மார்பிங்!

நிர்வாண படங்களுடன் அவர்களது முகத்தை மார்பிங் செய்து, அதை சமூக தளங்களில் பகிர வேண்டும். அவர்கள் நியூஸ் ஃபீடில் நாள் முழுக்க அதுவே சுற்றிக் கொண்டிருக்க வேண்டும்.

வக்கிர கமென்ட்!

வக்கிர கமென்ட்!

எந்த உடை அணிந்து வந்தாலும், உடனே வக்கிரமாக கமென்ட் செய்வது, பெண்களின் மார்பு மற்றும் பின்னழகை வெறும் சதை பிண்டமாக நினைத்து வர்ணித்து மகிழும் கீழ்த்தரமான செயலை உணர செய்ய வேண்டும்.

பயணத்தின் போது அந்த 3 நாட்கள்!

பயணத்தின் போது அந்த 3 நாட்கள்!

எதிர்பாராத தருணத்தில், அந்த மூன்று நாட்கள் தொல்லை ஏற்படுவது. அதிலும், பயணித்து கொண்டிருக்கும் போது அல்லது அலுவலகத்தில் வேலை செய்திக் கொண்டிருக்கும் போது மாதவிடாய் ஏற்படுவது மிகவும் கொடுமையானது. அதை வெளியேவும் கூற முடியாது. அதையும் சிலர் கிண்டலடித்து பேசி நோகடிப்பார்கள். இந்த டாஸ்க் கொடுத்தே ஆகவேண்டும்.

மூட் ஸ்விங்ஸ்!

மூட் ஸ்விங்ஸ்!

மூட் ஸ்விங்ஸ் பெண்கள் மட்டுமே அறிய முடியும் விஷயம். அது என்ன? மூட் ஸ்விங்ஸ் ஏற்படும் போது மனநிலை எப்படி இருக்கும், எப்போது எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை ஆண்களை அனுபவிக்க செய்ய வேண்டும்.

ஃபேஸ்புக் க்ரூப்ஸ்!

ஃபேஸ்புக் க்ரூப்ஸ்!

முகநூலில் சில க்ரூப்கள் இருக்கும். நாள் முழுக்க பெண்களின் படங்களை பதிவு செய்து காலை வணக்கம், மாலை வணக்கம் கூறுவார்கள். நான் கருப்பா தான் இருக்கேன், என்ன உங்களுக்கு பிடிக்குமா? என படங்களை யார், எவர் என தெரியாத பெண்களின் படங்களை போலி கணக்குகளில் இருந்து பதிவு செய்வார்கள். இந்த நிகழ்வில் அவர்கள் படம் பதிவாவதை காண வைத்து, அதன் வலி உணர டாஸ்க் கொடுக்க வேண்டும்.

வாட்ஸ்அப் பகிர்வுகள்!

வாட்ஸ்அப் பகிர்வுகள்!

ஓரிரு வருடங்களுக்கு முன்னர் ஒரு கீழ்த்தரமான செயல் டிரென்ட் ஆனது. காதல் முறிவு ஏற்பட்டால், உடனே அந்த பெண்ணுடன் பேசி அதை ரெக்கார்ட் செய்து வாட்ஸ்அப் க்ரூப்க்ளில் பகிர்வார்கள்.

மேலும், அவர்கள் நெருக்கமாக எடுத்த படங்கள், அந்த பெண்ணின் நிர்வாண படங்களை பகிர்ந்து அந்த பெண்ணின் வாழ்க்கையை சீரழித்தனர். இந்த நிகழ்வில் அவர்களை நிற்க வைக்க வேண்டும்.

விலைமாது!

விலைமாது!

எந்த பெண்ணும் விலைமாது ஆகவேண்டும் என எள்ளளவும் நினைப்பது இல்லை. விலைமாதுவின் வாழ்க்கை எப்படி இருக்கும், அவர்கள் எதிர்க்கொள்ளும் வலிகள் என்ன, அடுத்த தலைமுறை இதில் சிக்கிவிடக் கூடாது என அவர்கள் போராடும் வாழ்க்கையை ஆண்களை அறிய வைக்க வேண்டும்.

மொக்கை போட்டு சாவடிப்பது!

மொக்கை போட்டு சாவடிப்பது!

ஃபேஸ்புக்கில் ஆன்லைனே வரமுடியாத அளவிற்கு ஹாய் சொல்லி சாகடிப்பார்கள். மொக்கை மேல் மொக்கை போட்டு பிளாக் செய்ய வைத்துவிடுவார்கள். பிறகு பிளாக் செய்ததை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து மீம் போடுவார்கள். இதை டாஸ்காக கொடுத்து, ஆண்களை உணர செய்ய வேண்டும்.

வேலை இடங்களில்...

வேலை இடங்களில்...

வேலை இடங்களில் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள், சிம்பிளா சொல்லணும்னா கிட்டத்தட்ட தரமணி ஆண்ட்ரியா வாழ்க்கை வாழ வைக்க வேண்டும்.

கற்பழிப்பு!

கற்பழிப்பு!

டெல்லி பேருந்தில், பெங்களூர் கேபில் (Cab) என இந்தியாவின் சாலைகள் பெண்களை கற்பழிக்கும் இடமாக மாறி இருக்கிறது. இது மட்டுமல்ல, திருமணமே ஆகியிருந்தாலும், மனைவியாகவே இருந்தாலும், அவளது அனுமதி இன்றி அவளுடன் உடலளவில் இணைவது எப்படிப்பட்ட ரணமாக வலி என்பதை உணர செய்ய வேண்டும்.

ஆசிட் வீச்சு!

ஆசிட் வீச்சு!

ஆண்களில் எத்தனை பேர் ஆசிட் பயன்படுத்தி கழுவி இருப்பார்கள் என்ற கேள்வி எழுப்பினாலே நூற்றுக்கு 1% இருக்க மாட்டார்கள். ஆசிட் வீச்சுக்கு பிறகு ஒரு பெண்ணின் வாழ்க்கை தலைகீழாக மாறுவதை உணர செய்ய வேண்டும்.

கழுகு கண்கள்!

கழுகு கண்கள்!

பஸ் ஸ்டேன்ட், ஹோட்டல், சாலைகளில், திரையரங்கில் என மக்கள் கூட்டத்திலும், தெரு முனைகளிலும் கழுகு போல பெண்களின் உடலை வட்டமிடும் ஆண்களின் கண்கள் ஏற்படும் வலியை டாஸ்காக கொடுக்க வேண்டும்.

பிரசவ வலி!

பிரசவ வலி!

உலகிலேயே மிகவும் வலி மிகுந்தது. ஒவ்வொரு பிரசவமும் ஒரு பெண்ணின் மறுபிறவி என கூறுவதை ஆண்களால், அந்த வலியை அனுபவிக்க வைக்காமல் உணர்த்த முடியாது. எனவே, பிரசவ வலியை உணர வைக்க வேண்டும்.

குடிச்சுட்டு வந்து டார்ச்சர்!

குடிச்சுட்டு வந்து டார்ச்சர்!

குடிச்சுட்டு வந்து வாந்தி எடுக்குறத கழுவ வைக்கிறதே அவர்களுக்கு ஒரு பெரிய டாஸ்க் தான். ஆனாலும், குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து டார்ச்சர் செய்யும் நிகழ்வை அனுபவிக்க செய்ய வேண்டும்.

சமூக தடைகள்!

சமூக தடைகள்!

வேலைக்கு சென்று விட்டு தோழியை சந்தித்து வந்தால் கூட ஏன் லேட்டு என்ற அதிகார கேள்வி, விடுமுறை நாட்களில் வெளியே செல்ல வேண்டும் என்றால் வீட்டில் உள்ள ஆண்களிடம் "நோ அப்ஜக்ஷன்" சர்டிபிகேட் வாங்க வேண்டிய கொடுமை என சமூக தடைகளை உணர செய்ய வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

One Day Women Life for Men: Suggestions and Wishes to Make Them Realize How hard is being a Women!

One Day Women Life for Men: Suggestions and Wishes to Make Them Realise How hard is being a Women!
Subscribe Newsletter