அந்த முதல் நிமிடம்.., வாழ்நாள் முழுக்க இந்நினைவே போதும் - My Story #060

Posted By:
Subscribe to Boldsky

உயிரில் இணைந்தவள், உறவில் இணைய வேண்டும் என்ற அவசியம் இருக்கிறதா என்ன? என் உயிரோடு கலந்த அவளது நினைவுகள் போதும். உறுதுணையாக இல்லாமல் போனாலும், என்றும் அவளே எனது உயிர் துணை.

நான் ஒரு சுமாரான இந்திய ஆண்மகன். ஒல்லியான உடல்வாகு கொண்டவன். எனக்கு நிறைய ஆண் தோழர்களும், ஒருசில தோழிகள் மட்டுமே உள்ளனர். தோழமை அதிகமானவர்கள் இருந்தும், உயிர் துணை தேடுதல் என்பது நான் எண்ணாத ஒன்று.

காதல், கீதலில் பெரிதாக ஆர்வமும் இருந்திருக்கவில்லை.... அவளை காணும் வரையிலும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அந்நாள் உதித்தது...

அந்நாள் உதித்தது...

எல்லாரும் கூறுவது போலதான் நானும் கூற போகிறேன். அது ஒரு அழகிய காலை. ஆனால், என் வாழ்வில் அவ்வளவு அழகிய நாளாக அது அமையும் என நான் ஒரு போதும் கருதவில்லை. கல்லூரியின் முதல் நாள் அது. எனவே, ஃபார்மல் உடையில் வகிடெடுத்து தலை சீவி கல்லூரிக்கு சென்றேன்.

புதிய சூழல், புதிய இடம், புதிய நபர்கள் என ஒருவிதமான பதட்டம் பற்றிக் கொண்டது எனது உடல் முழுக்க. நான் பயிலும் கல்லூரியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் படிக்க வந்திருந்தனர். ஏதோ வட இந்திய சுற்றுலா சென்றது போலிருந்தது அன்றைய தினம்.

வகுப்பறை

வகுப்பறை

எனது வகுப்பறை எங்கே இருக்கிறது என்பதை தேடவே எனக்கு ஒரு மணிநேரம் ஆகிவிட்டது. சரியாக எனது ஹாஸ்டல் ரூம்மேட்களும் என்னுடன் இணைய ஒருவழியாக எனது வகுப்பறையை கண்டுபிடித்தேன்.

கல்லூரி வளாகம் முழுவதும் ஏதோ ஞாயிற்றுக்கிழமை மீன் மார்கெட்டுக்குள் நுழைந்தது போல அடித்துப்பிடிக்கும் கூட்டம். ஹாஸ்டல் மாணவர்களின் பெற்றோர்கள் கூட்டம் கொஞ்சம் அதிகமாவே இருந்தது. ஏறத்தாழ விண்வெளியில் நட்சத்திரங்களை பார்ப்பது போன்ற ஒரு பிம்பமும் இருந்தது அன்று.

யாரும் கண்டுகொள்ளவில்லை...

யாரும் கண்டுகொள்ளவில்லை...

ஒரு மணிநேரம் அலைந்து தேடிபிடித்து வகுப்பறைக்குள் சென்றால், யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை. ஆளுக்கொரு மூலையில் தனித்தனியாக அமர்ந்துக் கொண்டிருந்தனர். மெல்ல, மெல்ல ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் ஆனோம்.

நண்பர்களை அமைத்துக் கொள்வதில் அனைவரும் ஆர்வமாக இருந்தனர்.

அனைவரும் இப்படி அறிமுகம் செய்துக் கொண்டிருக்க, திடீரென எனது கண் எப்படி அந்தபுறம் சென்றது என எனக்கு இன்று வரையிலும் தெரியவில்லை. மூன்றாவது பெஞ்சில் நடுவில் அவள் அமர்ந்திருந்தாள்.

தேவதை!

தேவதை!

யாரிடம் கேட்டாலும் அவளை தேவதை என்று கூறமாட்டார்கள். ஆனால், என் கண்களுக்கு அவளை தவிர வேறு யாரும் தேவதையாக தெரியவில்லை. ஒருவேளை இது தான் கண்டதும் வரும் முதல் காதலா? என்ற கேள்வி மட்டும் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

அவள் ஒரு சாதாரண பெண். ஆனால் அவளிடம் இருந்து வெளிப்படும் அலைகள் என்னை எங்கோ தூக்கி சென்றது.

ஒல்லி!

ஒல்லி!

என்னை போலவே அவளும் ஒல்லி. போதாகுறைக்கு ஒரு சோடாப்புட்டி கண்ணாடி வேறு. கண்டிப்பாக இவளை காமெடி லிஸ்டில் சேர்த்துவிடுவார்கள். இப்போது புரிகிறதா? நான் ஏன் இவளை யாரும் தேவதை என அழைக்க மாட்டார்கள் என கூறினேன் என. (ஆனா, எனக்கு அவ தேவதை தான்.)

அவளது காதல் அலைகளை கடந்து ஓரிடத்தில் நான் அமரவே கொஞ்ச நேரம் ஆனது. இது போன்ற அனுபவம் என் வாழ்நாளில் எனக்கு நடந்ததில்லை. எப்படியோ அவளுக்கு பின்னால் அமர ஒரு இடத்தை எனக்கென ஏற்பாடு செய்துக் கொண்டேன்.

சிறப்பாக முடிந்தது!

சிறப்பாக முடிந்தது!

இப்படியாக, கல்லூரியின் முதல் நாளில்... முற்பாதி வகுப்பறை தேடியும், பிற்பாதி அவள் பின்னே கழித்தும் என சிறப்பாக முடிந்தது.

நாட்கள் மெல்ல நகர்ந்தது, கேலி, கிண்டல் என நட்பு கூடாரம் செட் ஆனது. நாங்கள் எல்லாம் ஒன்றாக பிரேக் நேரத்தில் செல்ஃபி எடுப்பதையே வேலையாக வைத்துக் கொண்டோம். அவளது செல்ஃபீ பார்ட்னர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.

கரைந்த மணி நேரங்கள்...

கரைந்த மணி நேரங்கள்...

ஒரு நாள் கல்லூரி முடிந்த பிறகு நானும் அவளும் ஓரிரு மணிநேரம் ஒன்றாக பேசி கழித்தோம். நண்பர்கள், தோழிகள் மத்தியில் அவளுடன் பேசுவதற்கும், இப்படி தனியாக பேசுவதற்கும் இடையே பெரும் மாற்றத்தை உணர்ந்தேன். முக்கியமாக உணர்வு ரீதியாக.

உடல் நெளிய துவங்கியது. கால்கள் நடுங்க துவங்கின. ஆனால், பேச துவங்கிய கொஞ்ச நேரத்திலேயே பல வருடங்கள் பேசி உறவாடியது போன்ற சூழல் உருவானது.

கடவுள் பெண்களுக்கு கொடுத்த இரண்டு வரம், கண்கள், இதழ்கள். ஆனால், இந்த இரண்டும் புன்னகை எனும் கருவியை கொண்டு ஆண்கள் நெஞ்சுள் காதல் புண்களை ஏற்படுத்துவதையே வேலையாக கொண்டுள்ளன.

ஓரிரு உரையாடல்கள்...

ஓரிரு உரையாடல்கள்...

பிறகு அவளும், நானும் என எங்கள் தனிமை உரையாடல்கள் சிலவற்றை கடந்து வந்த போது, நாங்கள் இருவரும், எங்களுக்கு பிடித்தது என்னென்ன, எங்களுக்கு பிடிக்காதது என்னென்ன என்ற ஒரு புரிதலுக்கு வந்தோம்.

நாங்கள் இருவரும் ஒன்றாக மழையை ரசித்துள்ளோம், கல்லூரி வளாகத்தில் எங்கள் கால் சுவடு படாத இடமே இல்லை என்ற அளவிற்கு சலிக்காமல் நடந்துள்ளோம். நட்சத்திரங்களுக்கே சவால் விடும் அளவிற்கு நாங்கள் படங்கள் க்ளிக்கி தள்ளியுள்ளோம்.

மூன்று வருடங்கள்!

மூன்று வருடங்கள்!

மணி நேரத்தை சில நொடிகளாக மாற்றும் மாயக்காரியுடன் நான் அதிக நேரம் செலவழித்த காரணத்தாலோ என்னவோ, எனது மூன்று வருட கல்லூரி வாழ்க்கை எப்படி கழித்தது என்றே தெரியவில்லை.

கல்லூரியின் கடைசி ஆண்டு, ஹாஸ்டலை விட்டு வெளியேறி நண்பர்களுடன் ஒரு வீடு எடுத்து தங்க முடிவு செய்தேன். அதே நேரத்தில், அவளும் தனது தோழிகளுடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனி வீடு எடுத்து தங்கியிருந்தாள்.

பிரச்சனைகள்!

பிரச்சனைகள்!

வீட்டு உரிமையாளர் மற்றும் சில தோழிகளின் குடைச்சல் என சில காரணங்களால் அவள் அந்த வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தாள். ஆகையால், எங்கள் வீட்டருகில், வேறு தோழிகளுடன் வந்து குடியேறினாள்.

என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாட்களாக அக்காலம் அமைந்தது.

மொட்டைமாடி அரட்டைகள்!

மொட்டைமாடி அரட்டைகள்!

எங்கள் இரு வீடுகளின் உரிமையாளர் ஒருவர் தான். அவர் மாதம் ஒருமுறை வாடகை வாங்கி செல்ல மட்டும் தான் வருவார். அதுவும் எங்களை அழைத்து நாங்கள் இருக்கிறோமா, இல்லையா? என கேட்ட பிறகே வருவார்.

ஆகையால் நினைக்கும் போதெல்லாம் அவளுடன் பேசவும், பழகவும் அதிக வாய்ப்புகள் கிடைத்து. எங்கள் இருவருக்கும் அந்த வேவ்லென்த் சரியாக இருந்தது. நாங்கள் ஒருவருக்கொருவர் எங்களை பற்றி எந்த ஒரு விஷயத்தை பகிர்ந்துக் கொள்ளவும் அசௌகரியமாக உணர்ந்தது இல்லை. எங்களுக்குள் இரகசியங்களே இல்லை என்றும் கூறலாம்.

கொண்டாட்டங்கள்!

கொண்டாட்டங்கள்!

எங்கள் இருவர் வீட்டில் தங்கியிருந்ததும் எங்களது பொதுவான நண்பர்கள் என்பதால், அடிக்கடி கொண்டாட்டங்கள், விளையாட்டுகள் நடக்கும். மகிழ்ச்சியின் உச்சம் எது என கேட்டால், அந்த நாட்களை தவிர வேறு ஏதும் எனது மனதில் எழாது.

கடைசி வருட பிராஜக்ட் எல்லாம் அந்த வீட்டில் இருந்தே தான் செய்தோம். உதவிகள் கேட்காமலேயே கிடைக்கும். உறவினர் போல நாங்கள் அனைவரும் வாழ்ந்து வந்தோம்.

அதிகாலை!

அதிகாலை!

கல்லூரியின் கடைசி நாட்களில் எங்கள் நட்பின் நெருக்கும் மேலும் அதிகரித்தது. அவள் தான் என்னை காலையில் எழுப்பிவிடுவாள். இது வாழ்நாள் முழுக்க கிடைக்காதா என்ற ஏக்கம் என்னுள்.

அவளுக்கு குல்பி மற்றும் பானிபூரி என்றால் கொள்ளை பிரியம். எனக்கு பானிபூரி கொஞ்சம் அலர்ஜி என்றே கூறலாம், சுத்தமாக பிடிக்காது. ஆனால், அவள் விரும்பு வாங்கி உண்ணும், அவளுடன் இருக்க நான் தவறியதே இல்லை. அவள் எனக்கு ஊட்டிவிட்ட ஓரிரு பானிபூரிகள் சுகமான நினைவுகள்.

வேறென்ன வேண்டும்...

வேறென்ன வேண்டும்...

ஓர் ஆணும், பெண்ணும் கடைசி வரை நண்பர்களாகவே இருக்கவே முடியாது என்பார்கள். அது உண்மை தான். ஒருசிலர் காதலை கூறி உறவில் இணைவார்கள். ஒருசிலர் காதலை கூறி இருந்த நட்பை இழந்துவிடுவார்கள்.

வெகுசிலர் மட்டுமே, அச்சத்தால், தைரியம் இல்லாத காரணத்தால்... கிடைத்த இந்த நட்பு போதுமே... வாழ்நாள் முழுக்க எப்போது கால் செய்தாலும் அவள் மணி பார்க்காமல் பேசும் அந்த சுகமான தருணம் போதுமே... என நினைவுகளுடன் வாழ்ந்து வருவார்கள்.

இதே பயணம் தொடரும்...

இதே பயணம் தொடரும்...

அந்த வெகுசிலர் எனும் கூட்டத்தில் நானும் ஒருவன். இன்றும் அவள் எனது தோழி. எங்கள் இருவருக்கும் இதுநாள் வரை திருமணம் ஆகவில்லை. அவளுக்கும் என் மீது அந்த காதல் உணர்வு இருக்கிறதா? இருக்குமா? என நான் எண்ணியதும் இல்லை, கேள்வி கேட்டதும் இல்லை.

ஒருவேளை வரும் நாட்களில் அந்த தைரியம் வரலாம்... அல்லது அதற்குள் அவளுக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டால்.... இதே பயணம் தொடரும் வாழ்நாள் முழுக்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

My Story: When I I Saw Her For The First Time, I Knew That She Was My Forever!

My Story: When I I Saw Her For The First Time, I Knew That She Was My Forever!