For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அந்த வயதிலேயே அவனை நம்பி திருமணம் செய்ததற்கு எனக்கு இப்படி ஒரு தண்டனையா? My Story #87

அந்த வயதிலேயே அவனை நம்பி திருமணம் செய்ததற்கு எனக்கு இப்படி ஒரு தண்டணையா?

By Lakshmi
|

Recommended Video

அந்த வயதிலேயே அவனை நம்பி திருமணம் செய்ததற்கு எனக்கு இப்படி ஒரு தண்டனையா?- வீடியோ

எனக்கு அப்போது 16 வயது... அப்போது நான் வழக்கமாக பள்ளிக்கு பேருந்து விட்டு இறங்கி நடந்து தான் செல்வேன்! நான் நடந்து செல்லும் போது ரோட்டில் நின்று கொண்டு ஒருவன் தினமும் என்னை பார்த்துக் கொண்டிருப்பான்.. முதல் நாள் என்னை அவன் பார்க்கும் போது எதற்காக பார்க்கிறான் என்றே தெரியவில்லை.. ஒருவேளை நம்ம அண்ணாவின் பிரண்டாக இருப்பானோ என்று நினைத்து அவனை பார்த்து சிரித்து விட்டு சென்றேன்...

ஆனால் தினமும் அவன் அதே இடத்தில் நின்று கொண்டு என்னை பார்த்துக் கொண்டிருந்தான்.. எனக்கு அவன் எதற்காக என்னை பார்க்கிறான் என்பது துளியும் புரியவில்லை.. வழக்கமாக பேருந்தில் வரும் நான்.. அன்று மட்டும் என் அண்ணாவுடன் வண்டியில் வந்தேன்.. அப்போதும் அவன் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தான். என் அண்ணாவிடம் சிவா அவன் உன் பிரண்ட் மாதிரி இருக்கான் பாரு என்று கூறினேன்... அவன் பார்த்து விட்டு இல்லை.. எனக்கு தெரியாது என்று கூறிவிட்டான்..

எனக்கு அப்போது தான் அவன் என்னை சைட் அடிக்கிறான் என்பதே புரிந்தது...! அந்த வயதில் ஒருவர் என்னை சைட் அடிப்பது என்பது எனக்கு ஒரு பெருமையான விஷயமாக இருந்தது.. அன்று முதல் நான் கொஞ்ச நேரம் அதிகமாக குளியல் அறையிலும், கண்ணாடி முன்னும் செலவிட ஆரம்பித்தேன்... நான் பார்க்க அவ்வளவு அழகானவள் எல்லாம் இல்லை.. ஆனால் அழகு என்ற கர்வம் எனக்குள்ளும் இருக்கிறது...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காதல் சேட்டைகள்

காதல் சேட்டைகள்

அவன் தினமும் ஒவ்வொரு சேட்டைகள் செய்வான்.. என் பெயரை எப்படியோ தெரிந்து கொண்டு என்னை அழைக்க ஆரம்பித்தான்.. அருகில் வந்து என்னுடன் பேசிவிட்டு, தெரியாத மாதிரி ஓடி விடுவான்... தினமும் பலப்பல செட்டைகள் செய்தான்.. என் அழகையும் வருணிக்க தவறவில்லை அவன்.. அவனது இந்த செயல்கள் எனக்கு பெருமையாக இருந்தது.. அவனது செயல்களை இரசிக்க ஆரம்பித்தேன்.. தினமும் என் தோழிகளிடம் வந்து, அவன் இப்படி செய்தான்.. அப்படி செய்தான் என்று கூறுவது எனது தினசரி வேலையாக இருந்தது..

பேசனும் வாரயா?

பேசனும் வாரயா?

நாட்கள் செல்ல செல்ல அவனுடன் பேச வேண்டும் என்று தோன்றியது... அந்த சமயத்தில் தான் அவனது காதலை என் கண்களை பார்த்து சொன்னான்... எந்த பெண்ணாக இருந்தாலும், ஒரு ஆண், தன் கண்ணை பார்த்து காதலை தைரியமாக சொன்னால், சற்று கிறங்கிப்போக தானே செய்வாள்..? அந்த உணர்வு தான் எனக்குள்ளும் இருந்தது... அவனை கோபமாக உன்னுடன் பேச வேண்டும் வா.. என்று அழைத்தேன்...!

தனியான சந்திப்பு

தனியான சந்திப்பு

அன்று மாலை நாங்கள் சந்திப்பதாக இருந்தோம்..! எனக்கு அன்று பள்ளியில் மிகவும் சந்தோஷமாகவும், மிகுந்த எதிர்பார்ப்புடனும் அந்த நாள் கழிந்தது...! அவனை என் தோழி ஒருத்தியுடன் சென்று சந்தித்தேன்.. அவளை தனியாக நிற்க சொல்லிவிட்டு, நான் மட்டும் அவனுடன் சென்று பேசினேன்...! அவனை மிரட்டுவது போல தோரணை செய்தேன்...! அவன் அப்போதும் கூட சிரித்துக் கொண்டே தான் இருந்தான்...!

கொல்லாமல் கொன்ற காதல்

கொல்லாமல் கொன்ற காதல்

என்னை கொல்லாமல் கொன்றது அவனது பார்வை.. படுக்கை அறையில் அவனது நினைவுகள் தான் என்னை கொல்லாமல் கொன்று கொண்டு இருந்தது...! அவனை திட்டுவது போலவும், முறைப்பது போலவும் நான் நடித்தாலும் கூட, அவனை எனக்கு மனதிற்குள் மிகவும் பிடித்திருந்தது..! அவன் அத்தனை அழகு....! ஆமாம்..! காதலிக்கும் பெண்ணுக்கு தன் காதலன் அழகாக தானே தெரிவான்...!

காதல் சொல்லவா..

காதல் சொல்லவா..

என் காதல் இதயம் இதயத்தை நிரப்பி விட்டது... இனி அதை வெளிப்படுத்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்...! அவனிடம் வெட்கத்துடன் கால்கள் கோலம் போட... என் காதலை சொன்னேன்... அவன் என்னை தூக்கி கொஞ்ச வந்தான்...! ஏய்... வேண்டாம்... இது ரோடு.. என்று அதிர்ச்சியில் கத்தினேன்...! அதற்கு அவன், ஆமாம் இது ரோடு... ஆனா உன்னை கொஞ்சனும் எனக்கு.. எத்தனை நாள் வெயிட் பண்ணுன தெரியுமா..? என்று கேட்டான்.. நான் யோசித்து விட்டு, சரி நாளைக்கு வெளிய போகலாம் என்று சொன்னேன்...! அவன் சந்தோஷப்பட்டான்...!

வெளியுலகம் சென்றோம்

வெளியுலகம் சென்றோம்

அடுத்த நாள் நான் ஸ்கூல் கட் அடித்தேன்... அவனுடன் வண்டியில் ஒரு மலைப்பகுதிக்கு சென்றேன்...! அன்று அந்த மலைப்பகுதியில் பொழிந்த பனித்துறலை விட, எங்களது காதல் தூறல்கள் தான் அதிகமாக இருந்தது...! சேர்த்து வைத்த அத்தனை ஆசைகளையும் கொட்டித் தீர்த்துக் கொண்டோம்...! அன்று அவனுக்காக நான் ஒரு பரிசு கொடுத்தேன்...! அதில் அவனை நான் படமாக வரைந்து வைத்திருந்தது...! அவனை பற்றி நான் ஒவ்வொரு இரவும் எழுதிய கவிதைகள் என அனைத்தும் இருந்தது.. அவன் அதை கண்டு மெய் சிலிர்த்து போனான்...! என்னை கட்டி அணைத்துக் கொண்டான்...!

அவனை பார்க்க முடியவில்லை

அவனை பார்க்க முடியவில்லை

இப்படியே தாங்க முடியாத காதலுடன் எங்களது வாழ்க்கை சென்று கொண்டிருக்க, அப்போது தான் அவன் உன்னை விட்டு என்னால் பிரிந்து வாழ முடியாது என்று தினசரி புலம்ப ஆரம்பித்தான்... ஒரு வாரமாக அவனது முகத்தை பார்க்கவே முடியவில்லை.. அத்தனை சோகம் அவனது முகத்தில் தெரிந்தது...! நான் எத்தனை சமாதானம் சொல்லியும் அவன் கேட்கவில்லை...!

எனது முடிவு இது தான்

எனது முடிவு இது தான்

எனக்கு அந்த சூழ்நிலையில் என்ன செய்வது என்றே தெரியவில்லை... அப்போது நான் 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்...! அவன் சந்தோஷம் தான் நமக்கு முக்கியம் என்று தோன்றியது.. எத்தனை முறை யோசித்தாலும், நான் எடுத்த முடிவு தான் சரி என்று தோன்றியது எனக்கு...! அவனிடம் சென்று என்னை கல்யாணம் பண்ணிக்கிறயா? அதுவும் இப்பவே....! என்று கேட்டேன்.. அவனது கண்களில் கண்ணீர் வந்தது... கண்டிப்பாக... ஆனால் இப்போ வேண்டாம்.. ஒரு நல்ல நாள் பார்த்து.. பிரண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிட்டு பண்ணிக்கலாம் என்று கூறினான்...

திருமண ஏற்பாடுகள்

திருமண ஏற்பாடுகள்

நானும் சரி என்று கூறினேன்.. எனக்கு கல்யாணம் ஆக போகிறதா என்று எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது...! இனி எங்களது காதலில் பிரிவே கிடையாது என்றும் தோன்றியது... எங்களது திருமணத்திற்கு புதிய ஆடைகள் எல்லாம் தயார் ஆனது.. நான் எனது தோழிகள் யாரையும் அழைக்கவில்லை.. அவன் மட்டும் அவனது நண்பர்களை அழைத்து வந்தான்..!

திருமணம் நடந்தது

திருமணம் நடந்தது

எங்களது திருமணம் கொடைக்காணலில் நடந்தது.. ரம்மியமான சூழல்.. நண்பர்கள் சூழ.. ஒரு தனியாக யாரும் இல்லாத ஒரு கோவிலில் நண்பர்கள் சூழ.. பறவைகளின் கான இசையில் நடந்தது...! இவன் தான் இனி நமக்கு எல்லாமே... இவனுடன் தான் என் மீதி வாழ்க்கை நடக்க போகிறது என்று, அத்தனை எதிர்பார்ப்புகளையும் மனதில் வைத்துக் கொண்டு அவனை காதலுடன் பார்த்தேன்! அவனும் என்னை பார்த்தான்...! இருவரும் சிரித்துக் கொண்டோம்..! பின் பல புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம்...!

தனித்தனி வீட்டில்..

தனித்தனி வீட்டில்..

இரவு நேரம் ஆனது... உடைகளை எல்லாம் மாற்றிக் கொண்டு, என் வீட்டிற்கு சென்று விட்டேன்...! இன்று எத்தனை விஷயம் நடந்து முடிந்துவிட்டது என்று எனது மனம் கூறியது... அன்று இரவு செல்போனில் நீண்ட நேர அரட்டைகள் தொடர்ந்தன... எங்களது திருமண வாழ்க்கையானது நல்ல படியாக சென்று கொண்டிருந்தது... என்னை அவன் அவ்வளவு ஆழமாக காதலித்தான்... நானும் அவனை என் உயிரை விட மேலாக காதலித்தேன்...!

கல்லூரி காலம்

கல்லூரி காலம்

எனது பள்ளிப்பருவம் முடிந்தது.. கல்லூரி பருவம் வந்தது...! நான் மிகமிக குறைவான மதிப்பெண்களை மட்டுமே எடுத்து இருந்தேன்.. ஆனால் எனது அப்பாவிற்கு என்னை பொறியியல் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்று ஆசை.. அதனால் பல லட்சங்களை செலவு செய்து என்னை எங்களது வீட்டிற்கு அருகில் உள்ள கல்லூரியிலேயே சேர்த்தார்...!

கல்லூரி தோழிகள்

கல்லூரி தோழிகள்

என் கல்லூரியில் கிடைத்த நண்பர்கள் எனக்கு இறைவன் வாழ்க்கையில் கொடுத்த வரம்.. எங்களுக்குள் நல்ல ஒற்றுமை இருந்தது.. பல குறும்புகளை நாங்கள் ஒன்றாக சேர்ந்து செய்தோம்...! வகுப்பை கட் அடித்து விட்டு வெளியில் செல்வது, ஊர் சுற்றுவது, சினிமாவிற்கு செல்வது என்பது போல பல விஷயங்கள் எங்களது கல்லூரி வாழ்க்கையில் நடந்தது.. எனது வீடு அருகில் தான் உள்ளது என்பதால் என் நண்பர்கள் அனைவரும் அடிக்கடி எனது வீட்டிற்கு வந்துவிடுவார்கள்... அது ஒரு மகிழ்ச்சியான காலம்....!

என்னை பற்றிய உண்மை

என்னை பற்றிய உண்மை

எனது திருமணம் பற்றியும் என் தோழிகளிடம் கூறினேன்... அவனை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தாலே நான் எல்லாம் பிச்சை எடுத்து உடல் அழுகி தான் சாவேன்.... அவன் அவ்வளவு ஆழமாக என்னை காதலிக்கிறான் என் உயிருக்கும் மேலானவன் அவன் என்று எல்லாம் நான் என் தோழிகளிடம் கூறுவேன்.. நான் பேசுவதில் இருந்தே எனது தோழிகளுக்கு மட்டும் இல்லை என்னுடன் படித்த அத்தனை பேருக்கும் அவன் எனக்கு எவ்வளவு முக்கியம் என்பது தெரிந்தது.. அது மட்டுமல்ல எனது ஆசிரியர்கள் சிலருக்கும் நான் அவனை ஆழமாக காதலிப்பது தெரிந்திருந்தது...

என் காதலன்

என் காதலன்

என் காதலனும் அனைவருடன் நன்றாக பேசுவான்... எங்களது வகுப்பில் யாருக்கு என்ன உதவி வேண்டுமானலும் தயங்காமல் செய்வான் அவன்... நான் என் நண்பர்களுடன் சேர்த்து வெளியே செல்லும் போது எல்லாம் அவன் என்னுடன் வருவான்... நானும் அவனும் வேறில்லை என்பது போல் தான் வாழ்ந்து கொண்டிருந்தோம்... கல்லூரியின் இறுதி ஆண்டு வந்தது...! அப்போது தான் என் காதலில் ஒரு விரிசல் விழுக ஆரம்பித்தது...!

காதலில் விழுந்த இடி

காதலில் விழுந்த இடி

எனது வகுப்பில் இருக்கும் ஒரு பெண் ரொம்பவே வெகுளித்தனம் மிக்கவள்... அவளுக்கு கல்லூரி முழுக்க நிறைய நண்பர்கள் இருந்தனர்.. அவளுக்கு அடுத்தவர்களை பற்றி தெரியாத விஷயமே இருக்காது...! அவள் ஒரு நாள் என்னிடம் வந்து, உன் லவ்வரும், நம்ம பக்கத்து கிளாஸ் பொண்ணும் லவ் பண்ணறாங்க... உனக்கு தெரியுமா என்று கேட்டாள்...! நான் அவளிடம் எந்த ஒரு பதிலும் சொல்லவில்லை... அவளை கன்னம் கன்னமாக அடித்து விட்டேன்...! எங்களது வகுப்பில் அன்று ஒரு பெரிய கலவரமே நடந்து விட்டது...!

நான் அவ்வளவு கொடுமைக்காரி அல்ல

நான் அவ்வளவு கொடுமைக்காரி அல்ல

ஒரு பெண்ணை இப்படி போட்டு அடிக்கு அளவிற்கு நான் ஒன்றும் கொடுரமானவள் அல்ல... ஆனால் எனது எதிர்கால வாழ்க்கை என்று நான் நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவன் என்னை இப்படி ஏமாற்றி விட்டான் என்ற ஒரு சொல்லை கூட என் காதில் கேட்க முடியவில்லை...! நான் இது பற்றி எல்லாம் என் காதலனிடம் கூறவில்லை... அவனை கஷ்டப்படுத்த கூடாது என்பதற்காக தான் கூறவில்லை...! ஆனால் இந்த விஷயம் இதோடு ஒயவில்லை.. என் காதல் என் காதலன் என்னை ஏமாற்றுவது போல பல செய்திகள் பலரிடம் இருந்தும் வந்து கொண்டே இருந்தன....!

வீட்டிலும் எதிர்ப்பு

வீட்டிலும் எதிர்ப்பு

அந்த சமயத்தில் இதை எல்லாம் மறைக்கும் படியாக, என் காதலனின் வீட்டில் இருந்து எங்களது காதலுக்கு எதிர்ப்பு வந்தது... எங்களது திருமணம் அவனது வீட்டில் தெரிந்து விட்டதால், அவனை அடித்து கொடுமைப்படுத்துவதாக அவனது நண்பன் என்னிடம் வந்து கூறினான்... போனை எல்லாம் பிடுங்கி வைத்துவிட்டார்கள் என்றும் கூறினான்... என்னுடன் பேசமாட்டேன் என்று கூறியதால் தான் அவனை வீட்டை விட்டு வெளியே அனுமதித்தார்கள் என்றும் அவனது நண்பன் கூறினான்...! நீ சில மாதங்கள் அவனோடு பேசாமல் இரு.. எல்லாம் சரியாகிவிடும் என்றும் அவனது நண்பன் என்னிடம் கூறினான்...!

நான் இறந்து கொண்டிருந்தேன்

நான் இறந்து கொண்டிருந்தேன்

நானும் பேசாமல் தான் இருந்தேன்... ஆனால் அவனோடு பேசாமல் என்னால் இருக்கவே முடியவில்லை.. போனை பார்த்தாலே அவனுக்கு போன் செய்து பேச வேண்டும் என்று தான் தோன்றியது... என் மேல் எனக்கே கோபமும் வந்தது.. போனை தூக்கி போட்டு உடைத்து எறிந்தேன்.. அனைத்தையும் வெறுக்க தொடங்கிவிட்டேன்.. சரியாக சாப்பிடவில்லை.. கல்லூரிக்கு செல்லவில்லை.. பரீட்சைகளுக்கும் செல்லவில்லை.. வாழ்க்கை அனலாக என்னை எரித்துக் கொண்டிருந்தது...!

வேறொரு பெண்ணுடன்?

வேறொரு பெண்ணுடன்?

இந்த பிரிவின் போதும் கூட, அவன் வேறு பெண்ணுடன் சேர்ந்து சுத்துவதாக எனக்கு தகவல் கிடைத்தது...! அதுவும் எனக்கு பெரிய தலைவலியாக இருந்தது...! செத்துவிடலாமா என்று கூட தோன்றியது.. எனது தோழிகள் மட்டும் தான் அந்த கஷ்டமான சூழலில் எனக்கு ஆறுதலாக இருந்தார்கள்... மேலும் என் காதலன் வேறு யாரையாவது உண்மையாகவே காதலிக்கிறானா என்பது பற்றி விசாரிக்க சொன்னார்கள்..

தோழிகளின் பிரிவு

தோழிகளின் பிரிவு

அவனுக்கு போன் செய்து அவனிடம் புத்திசாலித்தனமாக கேள்விகளை கேட்க தொடங்கிவிட்டார்கள் எனது தோழிகள்.. அதற்கு எல்லாம் விடை இல்லாத காரணத்தால், எனக்கு போன் செய்து உன் தோழிகள் யாருடனும் இனி மேல் நீ பேசாதே என்று என்னிடம் சொல்லிவிட்டான் என் காதலன்... அப்போது தான் நான் உன்னுடன் பேசுவேன்... அவர்கள் நம்மை பிரிக்க நினைக்கிறார்கள் என்றும் என் மனதை மாற்றினான்.... எனக்கும் நம்முடன் வாழ்க்கை முழுவதும் இருக்க போவது என் கணவன் தான் என்று எனது தோழிகளிடம் இருந்து விலகிக் கொண்டேன்....!

நன்றாக சென்ற காதல்

நன்றாக சென்ற காதல்

என்னுடன் அப்போது அவன் பேசிக் கொண்டிருந்தான்...! ஆனால் என் கல்லூரியில் இருக்கும் யாருடனும் நான் பேசவில்லை.. இத்தனை நாட்கள் பழகிவிட்டு இப்படி இருக்கிறாளே என்ற ஒரு கோபம் என் தோழிகளுக்கு இருந்தது... எனக்கு வெளியூரில் வேலை கிடைத்தது.. நான் வேலைக்கு சென்று விட்டேன்... இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தான் என் சொந்த ஊருக்கு வருவேன்...! அப்போது என் கணவனை சந்திப்பேன்...! வெளியில் செல்வோம்... நன்றாக தான் சென்று கொண்டிருந்தது வாழ்க்கை...!

திருமணம்?

திருமணம்?

ஒரு நாள் தீடிரென்று என் கணவனின் காதலனே ஒரு நாள் எனக்கு போன் செய்து, உனது காதலனுக்கும், இன்னொரு பெண்ணுக்கும் திருமணமாக போகிறது என்று கூறினான்...! நான் பதறிப் போய் என் கணவனிடன் இது பற்றி கேட்டேன்..! நான் சற்றும் எதிர்பாராத ஆமாம் என்ற பதில் தான் எனக்கு கிடைத்தது.. அதை கேட்டு நான் அதிர்ந்து போய்விட்டேன்.. என்னால் அங்கு இருக்கவே முடியவில்லை... அழுகையை அடக்க முடியவில்லை.. அவனிடம் ஏன் இப்படி செய்தாய் என்று எல்லாம் கேட்டேன்.. அவன் பதில் கூறவில்லை.. இரவோடு இரவாக அங்கு இருந்து கிளம்பி என் சொந்த ஊருக்கு வந்ததும் வராததுமாய் அவனை கண்டு பேசினேன்....!

அவனது காதல்

அவனது காதல்

அவன் எனக்கு அவனது புதிய காதலை பற்றி கூறினான்.. நானும் அந்த பெண்ணும் சின்ன வயதில் இருந்தே எதிரெதிர் வீட்டில் வசித்து வருகிறோம்... எங்களை அப்போது இருந்தே கணவன், மனைவி என்று தான் கூறுவார்கள்...! ஆனால் அப்போது எனக்கு ஒன்றும் தெரியவில்லை...! ஆனால் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு எங்களுக்கு திருமணம் செய்து வைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது... எனக்கும் அவளை பிடித்திருந்தது.. நீ என்னுடம் சண்டை போட்ட போது எல்லாம் அவளது பேச்சுக்கள் தான் எனக்கு ஆறுதலாக இருந்தது.. அப்போது தான் அவளிடம் காதலில் விழுந்து விட்டேன்.. இப்போது என்னால் அவளை விட்டு பிரியவே முடியாது என்று கூறினான் அவன்....!

காதலுக்கு கிடைத்த பரிசு

காதலுக்கு கிடைத்த பரிசு

எனக்கு தூக்கி வாறி போட்டது.....! நமக்குள் சண்டை வந்தா, நம்ம கொஞ்ச நேரத்துல சேர்ந்திருவோம்.. அந்த இடைப்பட்ட நேரத்துல ஆறுதல் சொல்ல வந்தவள் தான் உன் மனதை கவர்ந்தவளா? அப்போ நான் யாரு... உனக்க்காக நான் எத்தனை வருஷமா எத்தனை விஷயத்தை விட்டு கொடுத்திருப்பேன்.. உன்னையே உயிரா நினைச்சு வாழ்ந்த எனக்கு இது தான் நீ தரும் பரிசா.... என்று கேட்டேன்..! அதற்கு அவன் நான் அவளை நான்கு வருடமாக காதலிக்கிறேன் என்று கூறினான்... எனக்கு தூக்கு வாறிப்போட்டது...!

தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

இனிமேல் உயிர் வாழ்வே முடியாது என்று ஆனது... எனது தோழிகளுக்கு எல்லாம் மெசேஜ் அனுப்பி சாரி கேட்டு விட்டு, நாங்கள் வழக்கமாக சந்திக்கும் மலையில் இருந்து விழுந்து சாகப்போகிறேன் என்று கூறிவிட்டு அந்த இடத்திற்கு இருட்டில் நடந்தே.. 10 கிலோ மீட்டர் தூரம் சென்றேன்.. என் தோழி வண்டியில் வந்து என்னை இழுத்துக் கொண்டு வந்துவிட்டாள்... என்னை வீட்டில் விட்டுவிட்டு நடந்த விஷயத்தை எல்லாம் வீட்டில் சொல்லிவிட்டாள்....!

உறவினர்களின் முன்னிலை

உறவினர்களின் முன்னிலை

மறுநாள் எங்களது உறவினர்கள் அனைவரும் வீட்டிற்கு வந்தனர்.. மொத்தம் ஒரு 50 பேர் இருப்பார்கள்.. அவர்களது வீட்டில் இருந்தும் ஆட்கள் வந்தனர்.. எங்களது உறவினர்கள், இத்தனை நடந்து விட்டது எங்களது பெண்ணை, உங்களது பையன் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.. ஆனால் அவனது வீட்டில் பையனுக்கு சம்மதம் என்றால் எங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று கூறினார்கள்...!

என் கதறல் அவனுக்கு பெரிதில்லை

என் கதறல் அவனுக்கு பெரிதில்லை

எங்களது வீட்டில் இருப்பவர்கள் எத்தனை கூறியும், அவன் கேட்கவில்லை.. நான் அத்தனை பேர் கூடியிருக்க, அவனது காலில் விழுந்து, என்னை விட்டுட்டு போயிறாதா மாமா.. நம்ம எப்படி எல்லாம் லவ் பண்ணுனோம்... என்னை எப்படி எல்லாம் பாத்துக்கணும்னு நீ ஆசப்பட்ட அதை எல்லாம் போய் ஆக்கிறாத மாமா.... நீ என்ன தப்பு வேணும்னாலும் பண்ணு நான் உன்னை எதுவும் கேட்கமாட்ட.. நான் ஏதாவது தப்பு பண்ணிருந்தா என்னை அடிச்சுக்கோ மாமா.. என்னை விட்டுட்டு மட்டும் போகாத மாமா.. என்று கதறி அழுதேன்.. ஆனால் அவன் என்னை கண்டு கொள்ளவே இல்லை... அவன் காலில் விழுந்து கதறிய போது கூட என் மீது அவனுக்கு இரக்கம் வரவில்லை....! என் கையை உதறிவிட்டுவிட்டு அவன் என்னுடன் பேசாமல் நின்று கொண்டான்....!

இனி வேண்டாம்

இனி வேண்டாம்

என் தோழிகள் எல்லாம், இனி அவனிடம் கெஞ்சாதே... அவன் உன்னை மறந்துவிட்டான்.. நீ எத்தனை அழுதாலும் அவனது காதலில் விழாது என்று கூறி என்னை சாமாதானம் செய்தார்கள்...! அப்போது கூட, நான் என் புருஷன் டீ அவன்... அவனை எப்படி நான் இன்னொருத்திக்கு விட்டு கொடுக்க முடியும் என்று கதறி அழுதேன்.. வாழ்க்கையில் யாரும் இப்படி எல்லாம் காதலுக்காக அழுதிருக்க மாட்டார்கள்.. ஆனால் அவன் என்னை உதாசினப்படுத்திவிட்டு சென்று விட்டான்...

திருமணம்

திருமணம்

அதன் பின்னர் எனக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்... எனக்கு சம்மதம் இல்லை.. ஆனால் என் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் என்னை இப்படியே விட்டுவிட்டால் நான் எங்கே தற்கொலை செய்து கொள்வேனோ என்ற பயம்... அந்த பயத்தில் இப்பொழுது எனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.....!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

My story : I married him during my school days but he cheated me

My story : I married him during my school days but he cheated me
Desktop Bottom Promotion