என் ப்ளே பாய் காதலனின் முகத்திரையை கிழிக்க என் தோழி செய்த தந்திரம் - - My Story #062

Written By:
Subscribe to Boldsky

படிப்பு, கல்லூரி நண்பர்கள், நண்பர்களுடனான அரட்டை, வெளியில் செல்வது என்று என் வாழ்க்கை நன்றாக தான் சென்று கொண்டிருந்தது... அப்போது என் அத்தை ஊரில் திருவிழா என்று நான் சென்றிருந்தேன்.. அப்போது தான் கிடைத்தது அவனின் அறிமுகம்... என்னுடன் என்னுடைய தோழியும் கீதாவும் வந்திருந்தாள்.. அவளுடன் சின்ன வயது முதலே படித்தவன் தான் இந்த பிரபா.. அதனுடனே அவன் என்னுடைய உறவுக்காரனும் கூட...

அவன் என்னை அவ்வளவாக கவரவில்லை.. பார்க்க ரொம்பவும் சாதாரணமாக தான் இருந்தான்... அவனது உயரம் ஆரடி இருக்கும்.. அளவான உடம்பு.. ஆனால் பார்த்தவுடனேயே பிடிக்கும் அளவுக்கு எல்லாம் இல்லை... நான் அன்று திருவிழா என்பதால் பாவாடை தாவணி அணிந்திருந்தேன்... என் அத்தை வீட்டுக்கு அருகில் இருக்கும் சின்னச்சின்ன குழந்தைகளுடன் சிரித்து பேசி விளையாடிக் கொண்டிருந்தேன்... எனக்கு அந்த நாள் மிகவும் பிடித்திருந்தது.. மகிழ்ச்சியாக இருந்தது...

நான் திருவிழாவிற்கு முந்தைய நாளே எனது அத்தை வீட்டிற்கு வந்துவிட்டேன்... என் அம்மா, அப்பா, தங்கை எல்லோரும் காலையில் தான் வந்தார்கள்.. நாங்கள் எனது அத்தை குடும்பம் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேசி, சாப்பிட்டு, விளையாடி பல வருடங்கள் ஆனது. அதற்கு அடுத்து இப்போது தான் நாங்கள் ஒன்றினைந்து இருக்கிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அம்மா பிள்ளை

அம்மா பிள்ளை

அன்று நான், என் தோழி கீதா, பிரபா மூவரும் தான் ஒன்றாக இருந்தோம். திருவிழா மிக கோலாகளமாக நடந்தது. பிரபா சின்ன குழந்தைகளிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டான்.. ஓடியாடி அங்கு இருந்த அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தான். அதற்கும் மேலாக அவனுடைய அம்மாக்கு செல்லப்பிள்ளையாக அனைத்து வேலைகளையும் செய்தான்...

நல்லவன்

நல்லவன்

அவன் நல்ல பையனாக தான் தெரிந்தான்.. என் தோழியும் அவனை பற்றி நல்ல விதமாக தான் பல கதைகளை கூறினாள்... அவன் ரொம்ப நல்லவன்.. ஆனா அந்த அளவுக்கு படிக்க மாட்டான். இருந்தாலும், விளையாட்டு, பாட்டு பாடுவது, நடனமாடுவது போன்றவற்றில் அவனை அடித்துக் கொள்ள வேறு ஆளே இல்லை என்று கூறினாள்... இன்னும் பலப்பல புகழை புகழ்ந்து தள்ளினாள்..

நகைச்சுவை உணர்வு

நகைச்சுவை உணர்வு

அவனும் கலகலப்பாக பேசி, அனைவரிடமும் நன்றாக தான் பேசி பழகினான்... புதிதாக பார்த்த என்னையே மிகவும் நன்றாக கவனித்துக் கொண்டான் என்றால் சொல்லவா வேண்டும். எனக்கு அந்த ஊர்... அங்கு நடந்த இசை நிகழ்ச்சிகள்... பிரபா, கீதா நான் மூவரும் நீண்ட நேரம் சிரித்து கலாய்த்து பேசிக் கொண்டது எல்லாமே மிகவும் பிடித்தது... அந்த நாளை மறக்கவே முடியாது...!

தொடர்பு...

தொடர்பு...

திருவிழா கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்து நான் எனது ஊருக்கு திரும்பினேன்.. வழக்கம் போல வாழ்க்கை, கல்லூரி, நண்பர்கள் என சென்று கொண்டிருந்தது.. அன்று வாட்ஸ் ஆப்பில் திடீரென ஒரு மெசேஜ் வந்தது.. அது யார் என்று பார்த்தால் பிரபா... அவனுக்கு எப்படி எனது நம்பர் தெரிந்தது என்று கேட்டேன்.. இது எல்லாம் என்ன பெரிய விஷயமா என்று கேட்டான்... அன்று முதல் எங்களது செட்டிங் ஆரம்பித்தது...!

பாவமான குடும்பம்

பாவமான குடும்பம்

அவன் எனக்கு நல்லவனாக தான் தெரிந்தான்.. நான் விசாரித்த அனைவரும் அவன் நல்லவன் என்று தான் கூறினார்கள். அதனால் அவனுடன் ஒரு நல்ல தோழியாக பழக ஆரம்பித்தேன்.. அவனது ஒரு நாள் என்னிடம் அவனுடைய குடும்பத்தை பற்றி என்னிடம் கூற ஆரம்பித்தான்... அவனது அப்பா, அவனது பத்து வயதிலேயே இறந்து விட்டார்.. அம்மாவும் ஒரு தங்கையும் மட்டும் தான்... அம்மாவும் வயதான காலத்தில் கட்டிட வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார். தம்பியும் தனது படிப்பை பாதியில் விட்டுவிட்டு வேலைக்கு சென்று கொண்டிருக்கிறான். இவன் பணம் ஈட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறான்...

நண்பர்கள்...

நண்பர்கள்...

இதை எல்லாம் கேட்ட போது எனக்கு அவனின் குடும்ப சூழ்நிலை புரிந்தது... அவனுக்கு அவன் குடும்பத்தின் மீது இருக்கும் அக்கறை புரிந்தது.. அவனது அம்மாவின் மீது மரியாதை வந்தது.. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தோம்.. வாட்சப்பில் நான் வைக்கும் எனது புகைப்படங்களை பார்த்து நன்றாக இருக்கிறது என்று சொல்லுவான்... இரண்டு வாரங்கள் கடந்தன...

சந்தேகம்...?

சந்தேகம்...?

அதன் பின்னர் எனது வாட்ஸ் ஆப் டிபி-யை பார்த்து வர்ணிக்க தொடங்கிவிட்டான். எனக்கு அவனது பேச்சுக்கள் பிடிக்கவில்லை... ஒரு ஆணின் பேச்சை வைத்தே ஒரு பெண்ணால் அவன் எதை மனதில் வைத்துக் கொண்டு பேசுகிறான் என்று கண்டு கொள்ள முடியும். அதே போல தான் நானும்... அவன் தவறான நோக்கத்தில் பேசுகிறான் என்று தோன்றியது.. எனவே நான் அவனை காயப்படுத்தாமல் எனக்கு இந்த லவ் எல்லாம் பிடிக்காது.. என் அப்பா, அம்மா யார சொல்லறாங்களோ அவங்கள தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று கூறினேன். அதற்கு அவன் சற்றும் தளறாமல் நானும் அப்படி தான் என்று கூறி, நீ என்ன மாதிரியே இருக்க என்று கூறி நட்பு பாராட்டிக் கொண்டான்...

பிரிவு ஏக்கம்

பிரிவு ஏக்கம்

சரி நல்லவன் தான் போல... நம்ம தான் தப்பா நினைச்சுட்டோம் என்று விட்டுவிட்டேன்... அதன் பின் சில நாட்களில் நீ திருமணமாகி சென்று விட்டால், நான் என்ன செய்ய போகிறேன்.. நீ உன் கணவன், குழந்தை என்று போய்விடுவாய் என்னை கண்டு கொள்ளவே மாட்டாய் என்று எல்லாம் புலம்ப ஆரம்பித்து விட்டான்.. இல்லை, கல்யாணம் ஆனால் என்ன நான் உனக்கு நல்ல பிரண்டா தான் இருப்பேன் என்று கூறினேன்... அவன் அதை ஏற்றுக் கொள்ளாத விதமாக சரி என்று கூறிவிட்டான்..

காதலித்தேன்..

காதலித்தேன்..

அதன் பின்னரும் அவனுடைய புலம்பல்கள் நிற்கவில்லை.. அடிக்கடி நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது... என்னையே கல்யாணம் பண்ணிக்கோ என்று எல்லாம் கூறினான்... என்னால் முடியவே முடியாது.. எனக்கு காதல் எல்லாம் சரியாக வராது என்று அவனிடம் பலமுறை தெளிவாக கூறினேன்... ஆனால் அவன் அதை ஏற்கவில்லையே... அதனால் நான் அவனுடன் சரியாக பேசமால் இருந்தேன்.. பின் அவன் என்னிடம் அதிகமாக கெஞ்சினான்... நானும் அவனை முழு மனதுடன் காதலிக்க ஆரம்பித்தேன்...

 உண்மை காதல்..

உண்மை காதல்..

எனக்கு என்ன தான் அம்மா, அப்பா பார்க்கும் மாப்பிள்ளையை தான் கல்யாணம் பண்ணிக்கனும் என்று ஆசை இருந்தாலும் கூட, எனக்கு அவனை மிகவும் பிடித்து தான் காதலித்தேன்.. அவன் இரவு நேர வேலைக்கு செல்பவன், அவனுடன் இரவு எல்லாம் பேச வேண்டும் என்று தூங்காமல் கண் விழித்து பேசினேன்... அவனும் என்னுடம் பாசமாக தான் பேசினான். என்னை அவன் அதிகமாக காதலித்தது தெரிந்தது..

உயிரினும் மேலானவன்

உயிரினும் மேலானவன்

என் உயிரினும் மேலாக அவனை காதலித்தேன்... அவனுக்காக விட்டுக் கொடுத்து சென்றேன்.. அவன் சொன்னதை எல்லாம் செய்தேன்.. எங்களுக்குள் அந்த ஒரு மாதத்தில் ஒருமுறை கூட கருத்து வேறுபாடு உண்டாகவில்லை.. ஆனால் அவன் ஒரு சில நேரம் தனது எல்லையே மீறி பேச ஆரம்பித்தான்.. ஆனால் நான் இந்த மாதிரியான பேச்சுக்கள் எல்லாம் இப்போது வேண்டாம்.. இரண்டு வீட்டிலும் திருமணத்திற்கு சம்மதம் சொல்லட்டும் அதற்கு பின் வைத்துக் கொள்ளலாம் என்றேன்..

பெண் தோழிகள் அதிகம்

பெண் தோழிகள் அதிகம்

ஆனால் அவன் என்னுடன் பேசும் போது ஒருமுறை கூட திருமணம் பற்றி எல்லாம் பேசவே இல்லை.. ஒருமுறை அவனது இல்ல விஷேசத்திற்காக என்னை அழைத்திருந்தான்.. நானும் சென்றேன்.. அவனை திருவிழாவிற்கு அடுத்து சந்திப்பது இதுவே முதல்முறை.. அவனுக்கு பல பெண் நண்பர்கள் இருந்தார்கள்... அவர்களும் அவனது வீட்டிற்கு வந்திருந்தார்கள்... அங்கு வந்த ஆண் நண்பர்களை விட வந்த பெண் நண்பர்களே அதிகம்.. உனக்கு இத்தனை பெண் நண்பர்களா பிரபா என்று அனைவரும் கிண்டல் அடித்தார்கள். அதை எல்லாம் நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை....

சந்தேகம் இல்லை

சந்தேகம் இல்லை

அவனது வீட்டிற்கு அவனது காதலியாக தான் நான் சென்றேன்.. ஆனால் என்னை அவன் அவ்வளவாக கண்டு கொள்ளவே இல்லை.. யாருக்கும் எங்களது காதல் தெரிந்து விட கூடாது என்று அப்படி இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டேன்... ஆனாலும் நான் வீட்டிற்கு எல்லாம் வந்தவுடன் என்னுடன் நன்றாக தான் பேசினான்... எனவே அவன் மீது எந்த சந்தேகமும் வரவில்லை... நாட்கள் கடந்தன... அவனது பேச்சுகளும், நடவடிக்கைகளும் மாறின...

எதிர்ப்பு

எதிர்ப்பு

எந்த ஒரு ஆணிடமும் ஏமாந்து விட கூடாது என்பது தான் எனது குறிக்கோளாக இருந்தது.. இதுவரை அவன் கண்களில் இருந்த காதல் பார்வை தற்போது காமப்பார்வையாக மாறியதை உணர்ந்தேன்.. அவன் என்னிடம் மெதுவாக நான் உன்னுடம் தாம்பத்தியம் வைத்துக் கொண்டு ஏமாற்றிவிட்டால், என்ன செய்வாய் என்று கேட்டான்... உங்க வீட்டுக்கே வந்து உன்னை செருப்பால அடிப்பேன்.. ஊரையே கூட்டி உன் மானத்தை வாங்குவேன்.. ஆனால் நீ தான் அப்படி எல்லாம் செய்யமாட்டேயே.. என்றேன்.. அவன் அசடு வழிந்தான்....

தவறான வழியா?

தவறான வழியா?

இப்படியே பலமுறை என்னுடன் உறவு கொள்வதை பற்றிய பல கேள்விகளை கேட்க தொடங்கினான்... என்னுடைய பதில்கள் எல்லாம் அவனுக்கு எதிராக இருந்ததால் என்னிடம் இருந்து விலகி இருந்தான்.. காதலிக்கும் போது இது போன்ற தவறான வழிகளில் எல்லாம் செல்லக் கூடாது என்பது எனது முடிவு.. நான் அதில் உறுதியாக தான் இருந்தேன்... என்னை எந்த ஒரு ஆணாலும் அவனது விருப்பத்திற்கு இணங்க வைக்க முடியாத படி தீயாக இருந்தேன்.... இதனால் எதிர்பாராத ஒரு மாறுதல் எங்களது காதல் உறவில் நடந்தது....

காதல் பிரிவு

காதல் பிரிவு

அவன் ஒருநாள் எனக்கு போன் செய்து, நான் தவறு செய்து விட்டேன்... என் அம்மா பார்க்கும் பெண்ணை தான் நான் திருமணம் செய்து கொள்வேன்.. நமது திருமணத்திற்கு யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று பல கதைகளை கூறினான்.. நாம் இருவரும் ஒரே சாதி, மதம் தானே... உறவினர்கள் தானே.. நமது திருமணத்தில் என்ன தடங்கல் வரப் போகிறது என்று எல்லாம் நான் கேட்டேன் ஆனால் அவன் அதை எல்லாம் ஏற்றுக்கொள்ளவே இல்லை.... உனக்கு புரியாது... காதல் வேண்டாம் என்று கூறிவிட்டான்....

ஏன் இப்படி செய்தான்..

ஏன் இப்படி செய்தான்..

எனக்கு ஒன்றுமே புரியவில்லை.. நான் அவனை உண்மையாக காதலித்தேன்... அவன் இல்லாமல் என்னால் வாழமுடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டேன்... என் கணவனாக நினைத்து தான் அவனுடன் நான் பேசினேன்... ஆனால் அவன் என்னை இப்படி தூக்கி எறிவான் என்று நான் நினைக்கவில்லை.. உன் வீட்டில் முதலில் பேசி பார்... அவர்கள் உனக்கு பிடித்திருந்தால் ஒப்புக்கொள்வார்கள்... நீ ஏன் பேசிக்கூட பார்க்கமலேயே இப்படி எல்லாம் செய்கிறாய்... என்னை இந்த அளவிற்கு காதலித்த உனக்கு எனக்காக உன் வீட்டில் பேச மனம் வரவில்லையா என்று எல்லாம் அவனிடம் கேட்டேன்.. ஆனால் அவன் அதற்கு எல்லாம் சற்றும் வளைந்து கொடுக்கவில்லை...

கண்டு கொள்ளவில்லை

கண்டு கொள்ளவில்லை

என் போனை எதிர்பார்க்கவில்லை... பத்து நாட்கள் நான் பேசாமல் இருந்தாலும் கூட, என்னை கண்டு கொள்ளவில்லை... நான் மிகவும் நொந்து போனேன்... அவனை பார்க்க வேண்டும்... அவனுடன் பேச வேண்டும் என்று ஏங்கினேன்... ஆனால் அவன் அதை எல்லாம் கண்டு கொள்ளமலேயே இருந்து விட்டான்.. என் மனம் பதறியது.. அப்போது தான் ஏன் நம்மை விட்டு சென்றான் என்று யோசித்தேன்... கடந்த சில நாட்களாக அவன் உடலுறவை பற்றி மட்டும் தான் பேசினான்... நாம் அதற்கு சரி என்று சொல்லாததாலும், என்னிடம் இருந்து எந்த ஒரு சாதகமான பதில்களும் கிடைக்காததாலும் தான் விட்டு சென்று விட்டான் என்று தோன்றியது.... இதை பற்றி எல்லாம் என் நெருங்கிய தோழியிடம் சொல்லி அழுதேன்....!

தந்திரம்

தந்திரம்

அவள் அப்போது அவனது குணத்தை தெரிந்து கொள்வதற்காக ஒன்று செய்தாள். முகநூலில் ஒரு போலி கணக்கு தொடங்கி அவனுடன் என் முன்னாலேயே பேசினாள். ஒரு தவறான பெண்ணை போல பேசினாள்... நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூறினாள்... அவனும் சரி என்று சொல்லிவிட்டான்... பின் அவர்கள் உடலுறவு பற்றி எல்லாம் பேசினாள்.. அவனும் இவளை வீட்டிற்கு வர சொன்னான்... இதை எல்லாம் கண்டு நான் அதிர்ந்து விட்டேன்..... இப்படி கூட ஆண்கள் இருப்பார்களா என்று தோன்றியது....

இப்படியுமா இருப்பார்கள்?

இப்படியுமா இருப்பார்கள்?

மேலும் அவள், அவனுடன் பேசவே .... தொடர்ந்து இதுவரை தான் எத்தனை பெண்களை ஏமாற்றி உள்ளேன்... என்பதை பற்றி எல்லாம் பேச ஆரம்பித்து விட்டான்... இதை எல்லாம் கேட்டு எனக்கு தலைசுற்றி போனது... என்னால் பொருத்துக் கொள்ளவே முடியவில்லை... அவனிடம் இதை பற்றி கேட்கிறேன் என்று கூறினேன்.. வேண்டாம் இதை எல்லாம் அவனிடம் கேட்க வேண்டாம் விட்டுவிடு என்று என் தோழி கூறினாள்... இத்தனைக்கும் அவள் எனது தோழி என்று கூறி தான் பிரபாவிடம் பேசி இருக்கிறாள்... அப்படி இருக்கவே இவன் இந்த மாதிரி எல்லாம் பேசி இருக்கிறான்....!

காமம் தான் முக்கியமா?

காமம் தான் முக்கியமா?

அவனுக்கு காமம் தான் முக்கியம் என்றால், அதற்காகவே சிலர் இருப்பார்கள் அவர்களிடம் இதற்காக தான் என்று குறிப்பிட்டு கூறி அதனை பெற்றுக் கொள்ளட்டும்.. எதற்காக இது போன்ற காதல் என்ற வார்த்தை சொல்லி, அடுத்தவர்களை ஏமாற்ற வேண்டும்...? இது பாவம் இல்லையா? காதல் என்ற வார்த்தை சொல்லி ஏமாற்றும் ப்ளே பாய் பசங்களால் பெண்கள் சில நல்ல குணமுடைய ஆண்களையும் சந்தேகம் கொள்கிறார்கள்....!

மறக்க இயலவில்லை

மறக்க இயலவில்லை

அவன் என்ன தான் என்னை ஏமாற்றி இருந்தாலும் கூட அவனை மறக்க என்னால் இயலவில்லை... அவனை திருத்த வேண்டும் என்று முடிவு எடுத்தேன்.. அதற்கான முயற்சியையும் எடுத்தேன்... ஆனால் நான் முட்டாள் ஆனது தான் மிச்சம்.....

மறக்க முயற்சித்தேன்...

மறக்க முயற்சித்தேன்...

என் வாழ்வின் வரம் என்று நினைத்தேன் அவனை... ஆனால் என் வாழ்வின் சாபம் ஆனான்... நான் பித்து பிடித்தது போல அலைந்தேன்... என்னை எல்லோரும் என்ன ஆனது என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.. அதன் பின்னர் என்னை நான் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஒரு மனநலமருத்துரிடம் சென்றேன்...

மகிழ்ச்சியான வாழ்வு

மகிழ்ச்சியான வாழ்வு

சிகிச்சைக்கு பின் என் வாழ்க்கை நன்றாக உள்ளது. நான் படித்து முடித்து இன்று நல்ல வேலையில் இருக்கிறேன்.. இன்று அவன் என்னை மிஸ் செய்து விட்டோமே என்று வருந்தும் அளவிற்கு வாழ்ந்து வருகிறேன்

இது வேண்டாமே

இது வேண்டாமே

ஒரு பொய்யான காதலை நம்பி என் வாழ்க்கையில் நான் பல துயரங்களை அனுபவித்து விட்டேன்.. நான் எழுதியது எல்லாம் ஒரு துளி கூட இல்லை... ஆண்களாக இருந்தாலும், சரி பெண்களாக இருந்தாலும் சரி.. அன்பை காட்டி ஒருவரை ஏமாற்றாதீர்கள்... இதுவே நான் உங்களிடம் மட்டியிட்டு கேட்டுக் கொள்வதாகும்.. எனது நிலை இனி எந்த ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கு வந்துவிட கூடாது என்பதே எனது விருப்பம்..

இப்படிக்கு

நான்.....!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

My Story : I love him a lot but he cheated me

My Story : I love him a lot but he cheated me