ஆம்பளைங்க மேல அப்படி என்னதா கோபம் சுஷ்மா ஸ்வராஜ்-க்கு!

Posted By:
Subscribe to Boldsky

நேற்று ஜி.ஒ.எம் எனும் அனைத்து அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய வெளித்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். ஆண்கள் ஹோம் சயின்ஸ் பயில வேண்டும், பெண்கள் பிசிகல் எஜுகேஷன் பயில வேண்டும் என கூறியுள்ளார்.

அதாவது ஆண்கள் வீட்டு வேலைகளையும், பெண்கள் தற்காப்பு கலைகள் போன்றவற்றையும் பயில வேண்டியது அவசியம் என இவர் கூறியுள்ளார்.

இதனால், கணவன், மனைவி வாழும் ஒரு குடும்பத்தில் என்னென்ன நன்மைகள் எல்லாம் விளையும் என இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

மனைவி, அம்மா உடல் நலம் சரியில்லாமல் இருந்தால் வீட்டில் இருக்கும் ஆண்களே சமைத்தும் வீட்டை சுத்தப்பத்தமாக வைத்துக் கொள்ள முடியும்.

#2

#2

ஆண்கள் வீட்டில் இல்லாத போது, யாராது திருட வந்தாலோ, தகாத முறையில் நடந்துக் கொள்ள முயற்சித்தாலோ பெண்கள் எதிர்த்து போராட முடியும்.

#3

#3

பொதுவாகவே, ஆண்களுக்கு வேலை சார்ந்த மேலாண்மை என்று வரும் போது வீட்டிற்கு வெளிய கில்லியாக இருந்தாலும், வீட்டின் உள்ளே எந்த வேலையும் தெரியாமல் தான் இருப்பார்கள்.

வீட்டை சுகாதாரமாக வைத்துக் கொள்வது ஆரோக்கியம் சார்ந்த நன்மைகளையும் அளிக்கும். எனவே, ஆண்கள் வீட்டு வேலைகள் பயில்வது பேச்சுலர் வாழ்க்கைக்கும் மிகவும் அவசியமானது.

#4

#4

என்று ஒரு நாள் இந்திய நாட்டில் பெண் ஒருவர் நடுராத்திரியில் தைரியமாக சென்று வர முடிகிறதோ அது தான் உண்மையான சுதந்திரம்...

அதற்கு துணையாக இருக்க, பெண்கள் மத்தியில் தைரியம் அதிகரிக்க பெண்கள் கட்டாயம் தற்காப்பு கலை பயில வேண்டும்.

#5

#5

பொதுவாகவே பெண்கள் வீக்கர் செக்ஸ் என்ற பாகுபாடு பார்க்கப் படுகிறது. இதை உடைத்து எரிய சுஷ்மா கூறியது போல, பெண்கள் தற்காப்பு கலை பயில வேண்டியது அவசியம்.

#6

#6

கற்பழிப்பு நிகழ்வுகள் ஏதோ காலை சூரியன் விடிந்து, மாலை அஸ்தமனம் ஆவது போல தினந்தோறும் நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த சம்பவங்களின் எண்ணிக்கை குறைய வேண்டும் என்றால் பெண்கள் கட்டாயம் தற்காப்பு கலை கற்றுக் கொள்ள தான் வேண்டும்.

#7

#7

ஆண்கள், பெண்கள் சமக்கு சமம் என எல்லா வேலைகளும் செய்ய துவங்கி விட்டார்கள். ஆனால், அதற்கு நிகராக, பெண்கள் முன்பு செய்து வந்த எல்லா வீட்டு வேலைகளும் ஆண்களுக்கு செய்ய தெரியுமா என்றால்., பத்தில் ஒருவருக்கு கூட பெரிதாக, முழுதாக தெரியாது. எனவே, பெண்கள் சவால் விடும் விதமாகவாவது, ஆண்கள் வீட்டு வேலைகளை கற்க தான் வேண்டும்.

#8

#8

இன்று பெரும்பாலும், கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் நிலையில் தான் குடும்பங்கள் இருக்கின்றன.

எனவே, ஆண்கள் வீட்டு வேலைகள் கற்றுக் கொள்வது மனைவிக்கு பெரும் உதவியாக இருக்கும். அதே போல, பெண்கள் தற்காப்பு கலைகள் கற்றுக் கொள்வது, குடும்பத்திற்கே பெரும் உதவியாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Men should opt for home science and women should take up physical education, Sushma Swaraj Says!

Men should opt for home science and women should take up physical education, Sushma Swaraj Says!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter