கல்யாணமே கட்டிக்காம கூடிக்கலாமா? இந்தியாவில் ஓர் விசித்திர கிராமம்!

Posted By:
Subscribe to Boldsky

கல்யாணம் செய்துக் கொள்ளாமல் வாழும் உறவை லிவ்-இன் ரிலேஷன்ஷிப் என்பார்கள். இது மேற்கத்திய நாடுகளில் இருந்து உலகம் முழுதும் பரவியதாக தான் நாம் அறிந்து வைத்திருக்கிறோம்.

ஆனால், இந்தியாவில் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இந்த முறையை கடைப்பிடித்து திருமணம் செய்துக் கொள்ளாமல் வாழ்ந்து வரும் ஒரு கிராமம் இருக்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா?

இருக்கிறது! ராஜஸ்தானில் இருக்கும் கரசியா எனும் பழங்குடி மக்கள் ஆயிரம் ஆண்டுகளாக இப்படி தான் வாழ்ந்து வருகிறார்கள். இதை தங்கள் மூதாதையர்களிடம் இருந்து கற்று, பின்பற்றி வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
70 வயது மூதாட்டி...

70 வயது மூதாட்டி...

லிவ்-இன் என்றால், இது மேற்கத்தியத்திற்கே சவால் விடும் அளவு இருக்கிறது. 70 வயது மூதாட்டி, தனது மகன் முன்னாள் தனது லிவ்-இன் பார்ட்னரை திருமணம் செய்துக் கொள்கிறார். இது பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது.

Image Credit : womenpla.net

டாபா சடங்கு!

டாபா சடங்கு!

கடந்த ஆயிரம் வருடங்களாக கரசியா பண்பாட்டில் அவர்கள் கிராமத்தில் இருந்து யாரை வேண்டுமானாலும் துணையாக தேர்வு செய்துக் கொள்ளலாம். அதற்கு அந்த பழங்குடி ஒப்புதல் வழங்குகிறது.

இவர் இந்த நபரை தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என எந்த ஒரு நிபந்தனையும் இங்கே இல்லை. ஆனால், போதிய அளவு பணம் இருந்தால் அவர்கள் செய்துக் கொள்ளலாம்.

அதாவது சம்மதத்துடன் அல்ல, கடத்தியும் திருமணம் செய்துக் கொள்ளலாம். திரும்பி வரும் போது அவர்கள் ஜோடியாக தான் வர வேண்டும்.

Image Credit:i.pinimg.com

கடமை!

கடமை!

இந்த கிராமத்தில் திருமணம் செய்துக் கொள்ளாமலே இருவர் ஒன்றாக வாழலாம். இதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது, அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஒருவேளை அவர்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியவில்லை எனில், அந்த நபர், வேறு துணையை தேர்வு செய்துக் கொள்ளலாம்.

Image Credit: Static Flickr

டவுரி!

டவுரி!

இந்த கிராமத்தில், மணமகன் வீட்டார் தான் மணமகள் வீட்டுக்கு சீர்வரிசை, டவுரி கொடுக்க வேண்டும். அது திருமணம் நடந்த பிறகு இணைந்தாலும் சரி, திருமணம் செய்யாமல் இணைந்தாலும் சரி, மணமகன் வீட்டார் கொடுக்க வேண்டியதை கொடுத்தே ஆகவேண்டும்.

அதே போல, மணமகன் வீட்டார் தான் திருமண செலவு மொத்தத்தையும் எடுத்து செய்ய வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Live in culture of Rajasthan's Garasia Tribe!

Live in culture of Rajasthan's Garasia Tribe!
Subscribe Newsletter