வேறு ஒருவருடன் திருமணமான பிறகும் என்னை காதலித்தாள்! அவளை என்ன செய்வது?

Posted By:
Subscribe to Boldsky

நான் இப்போது ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் ஆசியராக பணியாற்றி வருகிறேன்.. நான் சொல்லப்போவது எனது குழந்தை பருவத்திலேயே தொடங்கிய எனது காதல் கதையை பற்றி தான்.. அவளது பெயர் கவிதா.. நான் கவி என்று தான் கூப்பிடுவேன்.. அவளுடைய அப்பாவும், என்னுடைய அப்பாவும் நண்பர்களாக இருந்தார்கள். இருவரும் தங்களது வருமானத்தை சேர்த்து வைத்து ஐந்தரை செண்ட் இடத்தை வாங்கி, இருவரும் பங்கிக் கொண்டனர்...

எங்கள் இருவருடைய வீட்டிற்கும் இடையில் ஒரே ஒரு சுவர் மட்டும் தான் இருக்கும்... சின்ன வயதில் பாட்டிகள் எல்லாம், எங்களை புருஷன், பொண்டாட்டி என்று சொல்லி கிண்டல் செய்து கொள்வார்கள்.. அப்போதே அவள் மீது ஏதோ ஒரு ஈர்ப்பு... அதே ஈர்ப்பு அவளுக்குள் இருந்தது என்பது நான் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் போது தான் தெரியும்...! நான் பொறியியல் படிப்பிற்காக சென்னையில் ஒரு பிரபல கல்லூரியில் சேர்ந்தேன்.. அவளுக்கு நர்சிங் படிக்க தான் ஆசை.. நான் பாலிடெக்னிக் படித்து விட்டு தான் பொறியியல் படிக்க வந்தேன்.. நான் பி.இ முதலாம் ஆண்டு படிக்கும் போது அவள் நர்சிங் இறுதி வருடம் படித்துக் கொண்டிருந்தாள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 என் மீது இருந்த பாசம்

என் மீது இருந்த பாசம்

என்னிடம் தினமும் போன் செய்து பேசுவாள்... ஆனால் என் மீது பாசமே இல்லாதது போல காட்டிக் கொள்வாள்.. என்னுடன் எத்தனை பெண்கள் படிக்கிறார்கள்.. அதில் நான் யாருடன் எல்லாம் பேசுவேன் என்பது பற்றி எல்லாம் விசாரித்துக் கொள்வாள்.. நான் வேண்டும் என்றே, என் கிளாஸ்ல ஒரு பொண்ணு இருக்கா பாரு... ப்பா.. அப்படி ஒரு அழக எங்கயுமே பார்க்க முடியாது..

அத விட பியூட்டி என்னனா.. அவ என்னோட பிரண்ட் டி... என்று சொல்வேன்...!

ஏய் போதும்.. போதும்.. ரொம்ப சீன் போடாதடா.. அவ எல்லாம் உன் மூஞ்சிய லவ் பண்ணுவாளா...? என்பாள் கிண்டலாக..!

 கேலி பேச்சுக்கள்

கேலி பேச்சுக்கள்

கேலி பேச்சுக்களும் கிண்டலும் எங்களது காதலில் மிக அதிகமாக இருந்தது... நான் அவளை மனதிற்குள் காதலித்துக் கொண்டு தான் இருந்தேன்.. அவளிடம் என் காதலை வெளிப்படுத்தாதற்கு காரணம் அவள் நம்மை விட்டு எங்கே போய்விட போகிறாள் என்பது தான்.. ஆனால் அவளால் தன் காதலை வெளிப்படுத்தாமால் இருக்க முடியவில்லை போல...

காதலை வெளிப்படுத்தினாள்

காதலை வெளிப்படுத்தினாள்

என்னிடம் ஒருமுறை, எனக்கு எங்க வீட்டுல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுட்டா என்ன பண்ணுவ..? என்றாள்...

ம்.. வந்து நல்லா சாப்பிட்டுட்டு போவேன் என்றேன்...!

அட போடா லூசு.. உங்கிட்ட போய் கேட்ட பாரு என்ன எல்லாம்..... என்றாள்

சிரித்தேன்....!

சரி நீயே என்ன கல்யாணம் பண்ணிக்கறயா என்று கேட்டாள்..

என்னது உன்னயா? வேற வினையே வேண்டாம் என்றேன்..

சரி.. போ.. உனக்கு கொடுத்து வச்சது அவ்ளோ தான்.. இருந்தாலும் கேக்கற.. என்ன கல்யாணம் பண்ணிக்கறயா என்றாள்...

ம்... நீ இவ்ளோ கேக்கறது நால.. நான் கொஞ்சம் யோசிச்சு சொல்லற என்றேன்..

என்னது யோசிக்கறயா.... போடா பைத்தியம்.. உனக்கு அவ்ளோ கொழுப்பா...? என்று என்னை அடிக்க தொடங்கிவிட்டாள்....

ஏய்.. ஏய்.. அடிக்காத டி.. கல்யாணம் தானா? பண்ணிக்கறேன் என்றேன்...

அவள் சிரித்துக் கொண்டே ஐ லவ் யூ டா கருவாயா.. என்றாள்... !

இது தான் காதலா?

இது தான் காதலா?

அவளை காதலிக்கிறேன் என்று சொன்ன பிறகு எனக்கு வாழ்நாளில் நான் காணத ஒரு சந்தோஷம் பிறந்தது.. என்னால் எதையுமே யோசிக்க முடிவில்லை.. என் மனது எல்லாம் அவள் நினைவாகவே இருந்தது.. எனக்கு தூக்கமே வரவில்லை.. தூங்கினால் இரவில் பல முறை கண் விழித்து பார்த்தேன்.. நாங்கள் இருவரும் சேர்ந்து ஒன்றாக தூங்கும் நாள் எப்போது வரும் என்ற மனதில் தோன்றியது... தலையனையை கட்டிப்பிடித்துக் கொண்டேன்...

சிறை பிடித்தாள்..

சிறை பிடித்தாள்..

எங்களது காதலில், அன்பு, பாசம், நம்பிக்கை, குறும்பு, சண்டை என எதற்கும் குறைவில்லாமல் தான் இருந்தது... என் மீது அவள் மொத்த காதலையும் அள்ளி இரைத்து விட்டு, இது எல்லாம் சும்மா டிரைலர் தான்.. கல்யாணத்துக்கு அப்பறம் தான் என் மொத்த காதலையும் நீ பார்க்கப் போற.. என்பாள்...! என்னை தன் பேச்சாலேயே சிறை பிடித்துவிடுவாள்...!

விபத்து

விபத்து

நான் ஊருக்கு செல்லும் போது எல்லாம் அவளுடன் என்னுடைய நேரத்தை கழிப்பேன்.. அப்போது அவள் படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தாள்.. நான் கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன்.. நான் ஹாஸ்டலில் இருக்கும் போது எனக்கு ஒரு எண்ணில் இருந்து கால் வந்தது.. நான் எடுத்து பேசினேன்.. என் சித்தப்பா தான் அது..! என் அப்பாவிற்கு சிறிய விபத்து நடந்துவிட்டதாக கூறி என்னை வர சொன்னார்.. நானும் பதறி போய் எங்களது ஊர் அரசு மருத்துவமனைக்கு சென்றேன்..

அதிர்ச்சி...

அதிர்ச்சி...

அந்த மருத்துவமனை முழுவது, என் உறவினர்கள், மற்றும் என் பக்கத்துவீட்டுக்காரர்களின் கூட்டம்... என்னை என் அம்மாவும், தம்பியும் வந்து கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதனர்.. என் அப்பா சீரியஸாக இருக்கிறாரோ என்னவோ என்று நினைத்து கொண்டேன்.. அப்போது தான்.. என் அம்மா, அப்பா நம்ம விட்டுவிட்டு போயிட்டாருப்பா... என்று கதறி அழுதார்... எனக்கு தூக்கு வாறிப்போட்டது..

பண பிரச்சனை!

பண பிரச்சனை!

என் அப்பாவை படுக்க வைத்திருந்த அறையின் ஜன்னல் வழியாக அவரை கண்டேன்.. அவரது முகம் எனக்கு அடையாளமே தெரியவில்லை.. அவர் நல்ல நிறமாக இருப்பார்.. ஆனால் அவரது முகம் கறுத்துப்போய் காணப்பட்டது... என்னால் என் அப்பா இனி இல்லை என்பதை நம்பவே முடியவில்லை.. உடனே என் சித்தப்பா வந்து, மேற்படி எல்லா காரியமும் செய்யனும்.. உங்கிட்ட பணம் இருக்காப்பா என்றார்.. நான் முளித்தேன்..!

இறுதி சடங்கு..

இறுதி சடங்கு..

எங்கிட்ட இவ்ளோ தான் இருக்குனு அவர் ஒரு தொகையை என்னிடம் கொடுத்தார்... என் காதலி கவிதா.. எனக்கு ஒரு பெரும் தொகையை கொடுத்துவிட்டு அமைதியாக சென்றுவிட்டாள்.. என் நண்பர்கள் சிலரின் உதவியால் என் அப்பாவின் இறுதி சடங்கிற்கு தேவையான தொகையை எல்லாம் புரட்டிவிட்டேன்... என் அப்பாவின் இறுதி சடங்கும் நடந்து முடிந்தது.. என் குடும்பத்தின் நம்பிக்கை எல்லாம் நானாக மட்டுமே இருந்தேன்..

 நகையை காணவில்லை

நகையை காணவில்லை

இப்படி இருக்க, அவளது வீட்டில் அவளது கல்யாணத்திற்காக சேர்த்து வைத்த நகைகளில் ஒன்று காணாமல் போகவே, அவளது அப்பா கொதித்தார்.. என்ன ஆனாது என்ன சண்டை என்று பார்க்க என் அம்மாவும், தம்பியும் அங்கு சென்றுள்ளனர்.. அப்போது தான் தெரிந்தது.. கவிதா தான் ஒரு நகையை எடுத்து விற்று, என் அப்பாவின் இறுதி சடங்கிற்காக பணம் கொடுத்துள்ளாள் என்பது...!

சொத்தை இழந்தோம்

சொத்தை இழந்தோம்

கவிதாவின் அப்பா, இத்தனை நாள் பழகிய பழக்கத்தை மறந்துவிட்டு, என் பொண்ண மயக்கி, எங்க வீட்டுல இருந்த நகைய திருடறீங்களா? என்ன குடும்பம்டா இது என்று திட்ட தொடங்கிவிட்டார்.. என் அம்மாவினால் அவமானம் தங்கமுடியவில்லை.. அப்பா வாங்கிய கடன்கள் சிலவும் இருந்த காரணத்தால், வீட்டை வந்த விலைக்கு விற்று விட்டோம்..! கவிதா வீட்டு கடன் உட்பட மேலும் சில கடன்களையும் அடைத்துவிட்டோம்...!

புதிய ஊர்

புதிய ஊர்

அப்போது எனது படிப்பும் முடிந்து வேலையும் கிடைத்து இருந்தது. எனது ஆரம்ப கால சம்பளம் 10,000 ரூபாய் தான்.. என் தம்பி மற்றும் அம்மாவை என்னுடனே தங்க வைத்துக் கொண்டேன்.. என் அம்மாவிற்கு கொஞ்சம் துணி தைக்க தெரியும்.. அதனால் அருகில் இருந்தவர்களுக்கு துணி தைத்துக் கொடுத்து, மளிகை செலவை ஏற்றுக் கொண்டார். தம்பியும் கல்லூரி முடித்துவிட்டு, ஒரு பிரவுசிங் செண்டரில் வேலை செய்து வந்தான்.. நான் வேலை நேரம் போக டியூசன் எடுத்தேன்.. ஆரம்பத்தில் எங்களது வாழ்க்கை மிகவும் கடுமையாக இருந்தது.. நாட்கள் செல்ல செல்ல அனைத்துமே பழகி போனது..!

திருமணம்

திருமணம்

நடுவில் ஒருநாள் கவிதா எனக்கு போன் செய்து எனக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன என்று கூறினாள்.. அந்த திருமணத்தை எதிர்த்து என்னால் போராட முடியவில்லை.. என் அப்பா ஆசையாக வாங்கிய வீட்டை விற்க முதல் காரணமே கவிதாவின் அப்பாவாக தான் இருந்தார்.. அது கூட பரவாயில்லை.. உறவு என்று நினைத்திருந்த அவரே எங்களது சூழ்நிலை தெரிந்தும் எங்களை கேவளமாக பேசிவிட்டார் என்ற ஒரு மனவருத்தம் இருந்தது.. அதனால் அவரை எதிர்த்து போராட முடியவில்லை...

அவமானம்

அவமானம்

என்னால் கவிதாவையும் மறக்க முடியவில்லை.. இருப்பினும், என் அம்மா, கவிதாவின் அப்பாவிடம் பேச சென்றார். ஆனால் அவளது அப்பா, என் அம்மாவிடம் முன்பு போல இல்லை.. வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்க கூட விடவில்லை.. ஒன்னும் இல்லாத உன் பையனுக்கு எதை நம்பி பொண்ண குடுக்கறது.. உனக்கு ஒரு பொண்ணு இருந்தா, நீ ஒண்ணும் இல்லாத ஒருத்தனுக்கு கொடுப்பியா என்று கேட்டு திட்டி அனுப்பிவிட்டார்...!

 கடினமான இதயம்

கடினமான இதயம்

அதன் பின் என்னால் வருந்தி கண்ணீர் விடுவதை தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை..! அவளது திருமண அழைப்பிதளை மட்டும் எனக்கு கூரியரில் அனுப்பினாள் அவள்.. செல்லலாம் என்று தான் நினைத்தேன்.. ஆனால் அவளை இன்னொருவனுடன் கல்யாண கோலத்தில் பார்க்க மனம் வரவில்லை அதனால் நான் திருமணத்திற்கு செல்லவில்லை..

பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து

அவளுக்கு திருமணம் நடந்து முடிந்து ஒரு மூன்று மாதங்கள் கழித்து எனக்கு அவளிடம் இருந்து ஒரு போன் கால் வந்தது.. இன்று எனது பிறந்த நாள் ஏன் எனக்கு வாழ்த்தவில்லை என்று கேட்டாள்.. நான் ஹேப்பி பர்த் டே என்று கூறினேன்.. என் பிறந்தநாளை கூட மறந்துவிட்டாயா? என்னால் தான் உன்னை மறக்கவே முடியவில்லை என்றாள்.. எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை..

காதல் நினைவுகள்

காதல் நினைவுகள்

அவள் திடீரென்று பழைய காதல் கதைகளை பேசி அழ ஆரம்பித்துவிட்டாள்.. எனக்கு அவள் என் காதலி என்பது நினைவில் இல்லை.. இன்னொருவர் மனைவி என்பது தான் நினைவில் இருந்தது.. என் கணவன் என்னை புரிந்து கொள்ளவே இல்லை.. என்னை அடிக்கிறார்.. துன்புறுத்துகிறார் என்று கூறினாள்... திருமணமான புதியதில் இப்படி தான் இருக்கும் போக.. போக எல்லாம் மாறிவிடும் என்றேன்..

எனது முடிவு இது தான்..!

எனது முடிவு இது தான்..!

அவள் உன்னையே திருமணம் செய்து இருக்கலாம்.. நான் பெரிய தப்பு செய்து விட்டேன்.. நீ என்னை இன்னும் காதலிக்கறயா? நான் இன்னும் உன்னை மறக்கவில்லை என்று தினமும் பல நூறு மெசேஜ்களை அனுப்பிக் கொண்டிருந்தாள்.. நான் இந்த உறவும் உங்களது காதலும் தவறான ஒரு பாதையில் சென்றுவிட கூடாது என்பதற்காக என் எண்ணை மாற்றிவிட்டேன்..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

I Missed My Lover Because of Family Problem

I Missed My Lover Because of Family Problem
Story first published: Saturday, December 23, 2017, 14:30 [IST]
Subscribe Newsletter