For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் இரவு என் தந்தை செய்யும் காரியத்தை கண்டு, முற்றிலும் வெறுக்கிறேன்!

தினமும் இரவு அவர் செய்யும் காரியத்தை கண்டு, என் தந்தையை முற்றிலும் வெறுக்கிறேன்!

|

நான் வாழும் வாழ்க்கை வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும் என சிலர் எண்ணுகிறார்கள். மூன்று பிள்ளைகளில் நான் தான் இளையவள். நான் ஒரு அப்பர்-மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த பெண். நான் சொல்லாமலேயே, நான் செல்லமாக வளர்ந்தவள், வேண்டுவது எல்லாம் கிடைக்கும் என பலர் எண்ணுகிறார்கள். உண்மையும் அதுதான்.

ஆனால், நான் வேண்டாத சில விஷயங்களும் எனக்கு கிடைத்துள்ளது. அதை பற்றி நான் வெளியே பேச கூட முடியாத நிலை. எனது குழந்தை பருவ நாட்கள் மிகவும் அழகானவை, அற்புதமானவை. ஆனால், இரவு மிகும் அசௌகரியமானது, சித்திரவதையானது.

அந்த நினைவுகள் என்னுள் பல ஆழமான மறையாத வடுக்களை உருவாக்கி சென்றுள்ளது. இன்னும் நான் அதை எப்படி கையாள்வது என அறியாதிருந்தேன்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தாய், தந்தையுடன்...

தாய், தந்தையுடன்...

சிறுவயதில் நான் எனது தாய், தந்தையுடன் தான் உறங்குவேன். என் உடன் பிறந்தவர்கள் பக்கத்து அறையில் படுத்து உறங்குவார்கள். அப்போது நான் இரண்டாவது அல்லது மூன்றாவது படித்துக் கொண்டிருந்த காலம். அப்போது தான் எனது பெற்றோர் பற்றி நான் ஒன்று கண்டறிந்தேன்.

சில சமயங்களில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை குறைத்து மதிப்பிடுவது உண்டு. அதனால் பாதிக்கப்பட்டவள் நான். நான் படுத்தவுடன் உறங்கிவிடுவேன் என எனது பெற்றோர் கருதினர். ஆனால், நடுராத்திரியில் அந்த சப்தம் கேட்கும் போது என்னால் அந்த நேரத்தில் விழித்துக் கொள்ள முடியாத நிலை தான் இருந்தது.

பரிதாபகரமான நிலை...

பரிதாபகரமான நிலை...

நானும் எனது தந்தையும், எனது தாய் மற்றும் உடன் பிறந்தோர் உறங்க செல்லும் முன்னரே படுக்கையறைக்கு சென்றுவிடுவோம். எனது அம்மா அவரது வீட்டு வேலைகளில் பிஸியாக இருப்பார். உடன் பிறந்தோர் பள்ளி பாட வேலைகள் செய்துக் கொண்டிருப்பார்கள்.

நான் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்ற பிறகு அவர் அனுதினமும் எனது தாயை வற்புறுத்துவார். தினமும் இது நடக்கும், இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என தெரியாது. எனது தாய் பரிதாபகரமாக சப்தமிடுவார். அவருக்கு வலிக்கிறது என்று மட்டும் தான் நான் அறிவேன். சில காலம் கழித்து தான் அது எதனால் என நான் அறிந்துக் கொண்டேன்.

அசௌகரியம்!

அசௌகரியம்!

இது தான் காரணம் என அறிந்த பிறகு இரவு மட்டுமல்ல, பகலிலும் நான் எனது தந்தையை வெறுக்க ஆரம்பித்தேன். ஆனால், இதுகுறித்து என்னால் வெளியே பேச இயலவில்லை. நான் நடுராத்திரியில் உடல்நலம் சரியில்லாதது போல நடிக்க துவங்கினேன். அவர்கள் நான் பயந்து போய் இருப்பதாக கூறினார்கள். வேண்டுமென்றே நாடு ராத்திரியில் எழுந்துக் கொள்வேன்.

என் தாயை அவரிடம் இருந்து காக்க, என்னென்ன செய்ய முடியுமோ, அனைத்தும் செய்தேன். ஆயினும், பல நாட்கள் அவர் விருப்பம் போலவே தொடந்தது.

மூன்று வருடங்கள் இப்படி தொடர்ந்தது...

மூன்று வருடங்கள் இப்படி தொடர்ந்தது...

இதில் பெரும் கொடுமையே, இது குறித்து யாரிடம் எப்படி கூறுவது என அறியாதிருந்தது தான். என் உடன் பிறந்தோர் என்னைவிட மிகவும் வயது மூத்தவர்கள். நான் அவர்களுடன் அவ்வளவு நெருக்கமாகவும் இருந்தது இல்லை. நண்பர்கள் அல்லது ஆசிரியர்களிடம் இந்த கேள்வியை எப்படி கேட்பது என்றும் தெரியவில்லை. பணியாள், ஓட்டுனர் என யாரிடமும் இதுகுறித்து நான் ஆலோசிக்க முடியாது. குழந்தைகள் இதுகுறித்து பேச கூடாது என்பது நமது சமூகத்தில் எழுதப்படாத சட்டம். ஆனால், என் வாழ்வில் இது பெரிய பிரச்சனை.

ஏழாம் வகுப்பு!

ஏழாம் வகுப்பு!

நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, நான் நிரந்திரமாக எனது உடன் பிறந்தோருடன் உறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எங்கள் இரு அறைகளுக்கு மத்தியில் பல சுவர்கள் இருந்தன. ஆனால், எனது எண்ணம் முழுக்க அவர்களது படுக்கையறை பற்றியே இருந்தது.

இயல்பு...?!

இயல்பு...?!

எனது தாயின் பாதுகாப்பு குறித்து நான் மிகவும் ஆலோசித்தேன். நான் கொஞ்சம், கொஞ்சம் வளரும் போது தான் செக்ஸ் என்றால் என்ன, அந்த ஆக்டிவிட்டி என்ன என்பது அறிய துவங்கினேன்.

திருமணத்திற்கு பிறகு இது மிக இயல்பு என்பதை உணர்ந்தேன்.

ஆனால், திருமண வாழ்வென்பது இது மட்டும் தான் என்றால், எனக்குக் அப்படி ஒரு பந்தமே தேவையில்லை.

குடி!

குடி!

நான் பிறக்கும் முன்னர் அனைவரும் தாத்தா- பாட்டி வீட்டில் இருந்ததாகவும், அப்போது எனது தந்தை தினமும் குடித்துவிட்டு வந்து, எனது தாயை செக்ஸ் வைத்துக் கொள்ள தொல்லை செய்வார் என்றும் எனது உடன் பிறந்தோர் கூறி அறிந்தேன். என் தாய் உதவியின்றி தவித்தார் என்பதை நான் மிகுதியாக கண்டுணர்ந்தவள்.

அச்சம்!

அச்சம்!

இன்னும் சில வருடங்களில் என் தந்தை எனது திருமணத்தை பற்றி பேச்சை துவங்குவார், அவரிடம் என்ன பதில் கூறுவது என தெரியவில்லை. ஒருவேளை சிலருக்கு இது பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், என்னை பொறுத்தவரை எனக்கு இது மிகப்பெரிய அச்சம். என் தந்தை எனது தாய்க்கு செய்தது மிகப்பெரிய கொடுமை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

I Hated My Father As A Child For What I Saw Every Night!

I Hated My Father As A Child For What I Saw Every Night!
Desktop Bottom Promotion