ஊரைச் சுற்றி கடன், குடிகார கணவன்! நான் வாழ்வது என் குழந்தைக்காக மட்டுமே - My Story #039

Written By:
Subscribe to Boldsky

என்னுடையது வீட்டில் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான். எங்களது வீட்டில் மூன்று பெண் பிள்ளைகள், இரண்டு ஆண் பிள்ளைகள். நான் அதில் இரண்டாவது பெண் பிள்ளை.. எனக்கு மாப்பிள்ளையை பிடித்து தான் திருமணம் செய்து கொண்டேன். எனக்கு நகர வாழ்க்கை மற்றும் நகரத்து மனிதர்களை பற்றி அதிகமாக எந்த ஒரு அபிப்பராயமும் இல்லை. நாங்கள் கிராமத்தில் அனைவரிடத்திலும் எதார்த்தமாக தான் பழகுவோம். சொன்னால் சொன்ன மாதிரி நடந்து கொள்வார்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உதவாத அக்கா...

உதவாத அக்கா...

எனக்கு திருமணமாகி நானும் என் கணவரும், அவரது சொந்த வீட்டில் இருந்தோம். அந்த ஒரு சின்னஞ்சிறிய வீட்டில் நான், எனது கணவர், என் கணவனின் அண்ணா, அண்ணி, என் கணவரின் தம்பி, என் மாமனார் ஆகியோர் இருந்தோம். எனது கணவரின் அண்ணனின் மனைவிக்கு என்னை கண்டால் சுத்தமாக பிடிக்காது. எனக்கு எந்த ஒரு விஷயத்திலும் உதவி செய்ய மாட்டார். குடும்ப செலவு அனைத்தும் என் கணவரின் தலையில் தான் விழும். எனக்கு தேவையானவற்றை எனது தாய், தந்தை வீட்டில் இருந்து பெற்றுக் கொள்வேன். ஒருநாள் தண்ணீர் இரைப்பதற்காக, கயிற்றை கட்டி உள்ளே குடத்தை இறக்கினேன். குடத்தில் தண்ணீர் எடுப்பதற்குள், எனது கணவனின் அண்ணன் மனைவி வந்து, உனக்கு தண்ணீர் எடுக்க தெரியாது என் கயிற்றை கொடு என்று பிடுங்கி சென்று விட்டார். பின் அங்கிருந்த ஒருவர் தான் கயிற்றை கொடுத்து உதவினார். அந்த அளவுக்கு என்னை பிடிக்காதவராக இருந்தார் அவர்...

வீட்டை விட்டு துரத்தினர்

வீட்டை விட்டு துரத்தினர்

அப்போது நான் கர்ப்பமாக இருந்தேன். ஒருநாள் என் கொழுந்தனார் என்ன நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை, நானும் என் கணவரும் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்றால் நான் விஷம் குடித்து இறந்து விடுவேன் என்று சொன்னார். நாங்கள் பயந்து போய் இரவு 10 மணிக்கு எங்களது பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டோம். எங்களுக்கு எங்கே போவது என்று ஒன்றும் புரியவில்லை... அருகில் இருந்த எங்களது குல தெய்வத்தின் கோவிலில் எங்களது பொருட்களை மூட்டை கட்டி போட்டு விட்டு எனது அம்மா வீட்டிற்கு சென்று விட்டோம். பின்னர் அடுத்த நாளே திரும்பி வந்து, ஒரு வாடகை வீடு பார்த்து, அதில் குடியேறினோம்.

வாடகை வீடு

வாடகை வீடு

வாடகைக்கு அருகில் குடியிருந்தவர்கள் எங்களிடம் மிகுந்த அன்பு காட்டினார்கள். திருமணமாகி வந்த நாள் முதலாக புகுந்த வீட்டில் ஒருவரது அன்பையும் நான் பெறவில்லை... வாடகை வீட்டிற்கு வந்த பின்னர் தான் அந்த அன்பு கிடைத்தது. சில தினங்களிலேயே எனது கொழுந்தனார் என் வீட்டிற்கு வந்தார்.. என்னிடம் நன்றாக பேசினார். அவரது பேச்சுக்களை நம்பினேன்.. நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் அந்த பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் நான் விஷம் குடித்து இறந்து விடுவேன் என்று என்னை மிரட்டினார். சரி என்று அந்த பெண்ணின் அம்மாவிடம் சென்று பேசினோம். ஆனால் பலமுறை எங்களை அவமானப்படுத்திய பின்னரே திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார்.

பொறாமை பிடித்தவர்கள்

பொறாமை பிடித்தவர்கள்

திருமணத்திற்கு பின்னரும் எனது கொழுந்தனார், அடிக்கடி வீட்டிற்கு வந்து என் கணவரிடம் செலவுக்கு காசு வாங்கி செல்வார். நான் ஒன்றும் கூற மாட்டேன். என் கணவரின் அண்ணனோ நன்றாக போகும் எங்களது திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகளை ஏற்படுத்த என்னனென்னவோ செய்வார். என் கணவரின் தொழிலும் கூட நஷ்டம் ஏற்பட அவர் பல சமயங்களில் காரணமாக இருந்தார். ஆனால் நாங்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை...

நிறைவேறாத ஆசை

நிறைவேறாத ஆசை

அப்போது நான் கர்ப்பமாக இருந்ததால் எனது தாய்வீட்டில் இருந்தேன்... எனது பிரசவ செலவுக்காக வைத்திருக்கும் தொகையை பறித்தே ஆக வேண்டும் என்று என் கணவரின் அண்ணன் திட்டமிட்டுவிட்டார். அதனை என் கணவரின் மூலமாக எனது அப்பாவிடம் வந்து அடிக்கடி தொல்லை செய்து கேட்டார். ஆனால் என் அப்பா அந்த பணத்தை என்ன ஆனாலும் தரமுடியாது என்று மறுத்துவிட்டார். இந்த கோபத்தில் எனது கணவரின் அண்ணன் எங்களது குழந்தையை காண கூட அவரை அனுமதிக்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்து தான் என் கணவர் வந்தார். பிரசவ காலத்தில் கணவர் அருகில் இருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசை அந்த ஆசை கூட எனக்கு நிறைவேறா ஆசையாகிவிட்டது.

தொல்லைகள்

தொல்லைகள்

நான் குழந்தை பிறந்ததும் என் கணவருடைய ஊருக்கே வந்துவிட்டேன். குழந்தையை வைத்துக் கொண்டு எனது கணவருடைய வேலைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வேன். என் மகள் வாடகை வீட்டில் சிரமப்பட கூடாது என்று எனது அப்பா எனக்கு ஒரு வீட்டையும் அதனும் சேர்த்து நிலத்தையும் வாங்கி கொடுத்தார். நாங்கள் புது வீட்டில் குடியேறினோம். அது மிகப்பெரிய வீடு... எனது கணவனின் அண்ணன் குடும்பத்திற்கும், அவரது தம்பி குடும்பத்திற்கும் எங்களை கண்டு பொறாமை வந்தது. அடிக்கடி எங்களது தொழிலில் ஏதாவது ஒரு தொல்லையை கொடுப்பார்கள்...

தலையில் விழுந்த இடி

தலையில் விழுந்த இடி

என் கணவனின் தம்பி, அவரது மனைவியின் தூண்டுதலால் தானும் ஏதாவது செய்து பெரிய ஆள் ஆக வேண்டும் என்று மூன்று லாரிகளை வாங்கினார். என் கணவரின் அண்ணானும் ஒரு லாரியை வாங்கினார். இவை அனைத்தும் கடனில் வாங்கப்பட்டவை. இவர்களது முன்னேற்றத்தை கண்டு எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இவை கடனில் வாங்கப்பட்டவை என்று எனக்கு தெரியாது. என் கணவருக்கு அரசாங்க கண்டிராக்ட் ஒன்று கிடைத்தது. அதற்கு பண செலவுக்கு நான் எனது நகைகள் எனது குழந்தையின் நகைகள் அனைத்தையும் கொடுத்தேன்...இரண்டு தொழில்களை என் கணவர் ஒரே நேரத்தில் செய்கிறார்கள் நாங்கள் விரைவில் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வருவோம் என்று நினைத்துக் கொண்டிருந்த வேலையில் தான் என் தலையில் இடி வந்து விழுந்தது போல ஒன்று நடந்தது....

ஊரை சுற்றி கடன்

ஊரை சுற்றி கடன்

எங்களது வீட்டு பத்திரத்தை எதற்காகவோ பார்க்க நினைத்தேன்.. ஆனால் அது அங்கு இல்லை.. என்னவென்று என் கணவரிடம் விசாரித்தேன். பல பொய்களை கூறினார்... தினமும் அழுது புலம்பி விசாரித்ததில் தான் தெரிந்தது, அவர் எங்கள் வீட்டு பத்திரத்தை அடமானமாக வைத்து தான் அவரது அண்ணன், தம்பிக்கு லாரி வாங்கி கொடுத்தது தெரியவந்தது. அதை விட பெரிய இடி என்னவென்றால் இதுவரை அவரது அண்ணனும் தம்பியும் ஒரு பைசா கடனை கூட திருப்பி தரவில்லை. என் கணவர் ஒரு அப்பாவி யாராவது உருகி பேசினால் அனைத்தையும் கொடுத்து விடுவார். இது மட்டுமின்றி ஊரை சுற்றி கடனை வாங்கி வைத்திருந்தார். அதற்கான வட்டியானது அசலை விட அதிகமானது.

கழுத்தை நெறித்த கடன்

கழுத்தை நெறித்த கடன்

கடன் கொடுத்தவர்கள் ஒருவர் ஒருவராக வந்து எங்கள் வீட்டு வாசலில் கத்த ஆரம்பித்து விட்டார்கள். கடன் பிரச்சனைகள் கழுத்தை நெறிக்க தொடங்கி விட்டன. எனது கணவருடைய அண்ணன் மற்றும் தம்பியிடம் இதை பற்றி பேசினேன். சண்டை போட்டேன். ஆனால் அவர்கள் என்னை அடித்து விட்டார்கள். என் கணவரும் சேர்ந்து என்னை அடிக்க ஆரம்பித்துவிட்டார். அதன் பின்னர் சில நாட்களிலேயே என் கணவர் ஊரைவிட்டு ஓடி விட்டார். எனக்கு யாருமே இல்லை.. நான் என் ஒற்றைக் குழந்தையுடன் இருந்தேன் என் குழந்தைக்கு அப்போது 9 வயது.. என்னிடம் விசாரிக்க தயங்கியவர்கள் எல்லாம், என் குழந்தையிடன் அப்பா எங்கே எங்கே என்று கேட்டார்கள். அவள் சொல்ல தயங்கினாள். அந்த வயதிலேயே அவள் தினமும் அழுவாள். தந்தையுடன் சேர்ந்து பிறர் செல்லும் போது எல்லாம் இவள் கவலையுடன் இருப்பாள். எனக்கு குடும்ப பொருப்பிற்காக தொழிலை என் கையிலேயே எடுக்க வேண்டிய நிலை... என் குழந்தையை கவனிக்க யாருமே இல்லை..

அப்பாவை பார்த்து பயம்

அப்பாவை பார்த்து பயம்

என் வீட்டு பத்திரத்தை காவல் நிலையத்திற்கு சென்று, ஒரு காவலரின் உதவியுடன், அசலையும், பாதி வட்டியையும் கொடுத்து மீட்டேன்... மீதி கடன்களை நானே அடைக்கிறேன் என்று அனைவருக்கும் வாக்கு கொடுத்தேன். ஆறு மாதம் கழித்து, என் கணவரை கண்டேன். ஒரு குடிகாரனாகவும், பல போதைப் பழக்கத்திற்கு அடிமையானவனாகவும்... எந்த நேரமும், அப்பா.. அப்பா என்று பின்னாலேயே சுற்றி என் மகள் அப்பாவிடம் செல்லவே பயப்பட்டாள். அம்மா, பிள்ளையா? அப்பா பிள்ளையா என்று கேட்டால், அப்பா பிள்ளை என்று தான் சொல்வாள். ஆனால் இப்போது எல்லாம் தன்னை விட்டு ஓடிப்போன தனது அப்பாவிடம் பேசவே தயங்குகிறாள்.

குடிகார கணவன்

குடிகார கணவன்

என் கணவன் தினமும், குடித்து விட்டு வந்து தொல்லை செய்கிறான். சாப்பாடு சரி இல்லை என்று தூக்கி எறிகிறான். என் குழந்தை பல நாட்கள் பட்டினியாகவே உறங்குகிறது. எங்களை பெரிய மனிதர்களாக பார்த்து மரியாதையாக நடத்தியவர்கள் எல்லாம் இப்போது கீழே போட்டு மிதிக்கிறார்கள். இதை எல்லாம் தாங்கிக் கொள்ளவும், ஊரார் கேள்விக்கு பதில் சொல்லவும் எனக்கே முடியவில்லை என்றால், எனக்கு இருக்கும் பெண் குழந்தைக்கு எப்படி இருக்கும்? என் கணவரின் அட்டாகசம் என்றும் முடியும் பாடில்லை.. வீட்டில் நான் வைத்திருக்கும் சில நூறுகளை கூட திருடிவிடுவார்.. என்னிடம் பணம், நகை என எதுவுமே இல்லை... நான் வாழ்வது எல்லாம் எனது குழந்தைக்காக மட்டும் தான்....! என் கணவர் வாங்கிய பல லட்ச ரூபாய் கடனை நான் தனி ஆளாக நின்று நல்ல சோறு சாப்பிடுகிறோமோ இல்லையோ சரியாக கடனை அடைத்துக் கொண்டு வருகிறேன், யார் சாபமும் என் குழந்தையை தாக்கிவிட கூடாது என்பதற்காக....!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

i am leaving for my baby only

i am leaving for my baby only
Subscribe Newsletter