பரணி vs காயத்திரி: இரு முகங்களும், இருவேறு குணங்களும். பிக்பாஸ் வீடு கூறுவது என்ன?

Posted By:
Subscribe to Boldsky

பிக் பாஸ் தமிழ் சுற்றி பல சர்ச்சைகள், அதை தொகுத்து வழங்கும் பிக் பாஸ் கமலுக்கு எதிராக பல கோஷங்கள், வழக்குகள். இதற்கும் வாழ்வியலுக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது? இதனால் உறவுகளுக்குள் கேடு தான் விளையும் என பலர் கூறுகிறார்கள்.

அவர்களுள் நீங்களும் ஒருவராக இருந்தால், இந்த கட்டுரை உங்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். கிளாமர் தான் பாடமா? என கேள்விகள் எழலாம். பாடம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி மட்டும் கற்பது அல்ல, எப்படி எல்லாம் இருக்க கூடாது என கற்பதும் கூட.

அந்த வகையில் இந்த கலியுகத்தில் நாம் எப்படி இருக்க கூடாது என கற்க வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில், இந்த கல்வி தான் இறந்துக் கொண்டிருக்கும் மனித நேயத்திற்கு உயிர்காக்கும் மருந்தாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரு முகங்கள்!

இரு முகங்கள்!

ரூபாய் நாணயத்தை போலவே மனிதர்களுக்கும் இரு முகங்கள் இருக்கிறது. அதை நாம் காலம், காலமாக அறிந்து வருகிறோம்.

ஐயோ! அவர் இப்படி பொய் சொல்கிறார்? மழுப்பி பேசுகிறார், சண்டை மூட்டுகிறார் என கூறுகிறோம். ஆனால், அந்த இரு முகங்கள் நம்மிடமும் இருக்கிறது என்பதை மறந்து விடுகிறோம்!

ஒரு சிறிய உதாரணம்...

ஒரு சிறிய உதாரணம்...

நம் வீட்டிற்கு விருந்தினர் சிலர் வருவார்கள். வீட்டில் அம்மா, அப்பா அவர்களை விழுந்து, விழுந்து உபசரிப்பு செய்வார்கள். கிளம்பும் போது "மீண்டும் எப்போ வரிங்க, அப்பப்போ வந்து போங்க.." என அன்பை செலுத்துவார்கள். ஆனால், அவர்கள் தெரு தாண்டியதும். இவன் வரலன்னு எவன் அழுதான். இவனால தான் அந்த பிரச்சனை எல்லாம் வந்துச்சு என புறம் பேசுவார்கள்.

சூழ்நிலை, மனிதர்கள்...

சூழ்நிலை, மனிதர்கள்...

இதனால் நமது அம்மா, அப்பா மோசமானவர்களாக ஆகிவிடுகிறார்களா? மனிதனின் இரண்டு முகம் சூழலுக்கு ஏற்ப, கண் முன்னே நிற்கும் மனிதற்கு ஏற்ப வெளிப்படும். உறவுகள் இல்லாமல் ஒரு தனி நபர் வாழ்ந்துவிட முடியாது.

அதே போல எல்லாரிடமும் நல்லது, கெட்டது மாறுபட்டு காணப்படும். அப்படி பார்த்தால் எல்லாரிடமும் ஒரு குற்றம் கண்டுபிடிக்க முடியும். அதற்காக உறவுகளே இல்லாமல் வாழ்ந்துவிட முடியுமா?

எப்போது ஒதுக்குவோம்...?

எப்போது ஒதுக்குவோம்...?

ஒரு நபரை எப்போது நாம் ஒதுக்குவோம் என்று பார்த்தால், அவரிடம் வெளிப்படும் நல்ல, கெட்ட குணாதிசயங்களின் சதவிகிதம் வைத்து தான்.

அவர் அதிகமாக கெட்ட குணாதிசயங்களை வெளிப்படுத்தினால் ஒதுக்கிவ்விடுவோம். இல்லையேல், அட்ஜஸ்ட் செய்துக் கொண்டு அரவணைத்துக் கொள்வோம்.

பழி பேசாதே!

பழி பேசாதே!

ஒருவரை நமக்கு பிடிக்கவில்லை என அவரை பற்றி எல்லாரிடமும் சென்று அவர் சரி இல்லை, அவர் சரியில்லை என பழி பேசுவது தவறு. இது அந்த நபர் மீது ஏற்படுத்தும் அதே எதிர்வினையை உங்கள் மீதும் ஏற்படுத்தும். இவர் வேறு நபர்களிடம் நம்மை பற்றியும் இப்படி தான் பேசுவாரோ என்ற தீய தாக்கம் பரவ கருவியாகிவிடும்.

தீர விசாரி...

தீர விசாரி...

யார் எது கூறினாலும், அதை அப்படியே நம்ப வேண்டாம். இதை தான் நமது முன்னோர்கள் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என கூறியுள்ளனர்.

தீர விசாரிக்காமல் நாம் எடுக்கும் முடிவுகள் நமக்கே பேக் ஃபயர் ஆகலாம். இதனால், நாம் சிறந்த உறவுகளை இழக்கும் நிலையும் உண்டாகும்.

கொட்டாதே...

கொட்டாதே...

நெல்லை கொட்டினால் அள்ளி விடலாம், சொல்லை கொட்டினால் அல்ல முடியாது என்பார்கள். எவ்வளவு எரிச்சல் ஊட்டினாலும், எவ்வளவு கோபம் வந்தாலும், வார்த்தை வெளியிடும் போது யோசிக்க வேண்டும்.

சில சமயங்களில் தவறு செய்தவரை விட, அவரை திட்டியதன் (அந்த வார்த்தைகள் காரணத்தால்) நாம் வேண்டாத நபர்களாகிவிடுவோம்.

ஆறாத வடு!

ஆறாத வடு!

தீயினால் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு... என்பதை நாம் அனைவரும் படித்தது தான். ஆனால், நாம் கோபம் அடையும் போது இதை பின்பற்றுகிறோமா என்பது தான் கேள்வி. கோபத்தை அடக்க தெரிந்த ஒருவன், உலகை அடக்கி விடுவான் என்பது சான்றோர் வாக்கு. எனவே, கோபத்தை அடக்கினால், உலகத்தை அடக்கிவிடலாம்.

சிரிப்பும் காயம் தான்!

சிரிப்பும் காயம் தான்!

ஒருவரை புண்படுத்தும் ஒரு சிறிய சிரிப்பு கூட தவறு தான். அது அந்த நபரை, அந்த நபரை சார்ந்திருக்கும் நபர்களை எந்த அளவிற்கு காயப்படுத்தும் என்பதை நாம் புரிந்துக் கொண்டு பேச வேண்டும். தவறு யார் தான் செய்யவில்லை, ஆனால், அதை அறிந்தும், தெரிந்தும் குறைத்துக் கொள்ளாமல், தொடர்ந்துக் கொண்டே இருப்பது தான் பெரும் தவறு!

யார் இவர்கள்!

யார் இவர்கள்!

இங்கே நாம் அறிந்த பாடங்களுக்கு கருவாக இருந்த இரண்டு முகங்கள் யார், யார் என நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த இரு முகங்கள் உங்களை சுற்றியும் இருக்கிறது. அதில் எந்த முகத்தை அரவணைக்க வேண்டும், எந்த முகத்தை புறக்கணிக்க வேண்டும் என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Human Value Lesson From Bigg Boss Tamil Two Faces of Human Being!

Human Value Lesson From Bigg Boss Tamil Two Faces of Human Being!
Subscribe Newsletter