நீங்க ஏமாத்துறீங்கன்னு தெரிஞ்சா? பொண்ணுங்க எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க?

Posted By:
Subscribe to Boldsky

நீங்கள் ஒரு பெண்ணிடம் நண்பராக இருக்க விரும்பினால் நண்பராக பழகுங்கள், காதலராக விரும்பினால் காதலை எப்படி தெரியப்படுத்துவது என முயற்சி செய்யுங்கள்.

இதை தவிர்த்து அவர்களை அப்ரோச் செய்ய, ப்ரபோஸ் பண்ண பொய்யாக நடித்து ஏமாற்ற முயன்று அதை அவர்கள் கண்டுபிடித்துவிட்டால், பெண்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள், தவிர்ப்பார்கள், உங்கள் மேல் எந்த மாதிரியான கோபம் கொள்வார்கள் என்பது பற்றி இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

ஒரு ஆண் தன்னிடம் ட்ரை பண்ண முயற்சி செய்கிறார் என்பதை சிலவற்றை வைத்து பெண்கள் அறிவர்களாம்....

அனுதினமும் கால் செய்வது, குறுஞ்செய்தி அனுப்புவது. எங்க இருக்க, என்ன பண்ற என கேட்டுக் கொண்டே இருப்பது.

#2

#2

நீ நல்ல இருக்கியா? சாப்பிட்டியா ? வீட்டுக்கு போயிட்டியா? ஏன் லேட்டு, பஸ் கெடச்சதா? ஆட்டோ லையே போலாமே... நான் வேணுமா கூட வரட்டுமா? என அக்கறை அதிகமாக எடுத்துக் கொள்வது.

#3

#3

அப்ரோச் செய்வதிலேயே மெதுவாக, வேகமாக என இரண்டு வகை இருக்கிறதாம். ஒன்று அந்நியன் அம்பி போல தயங்கி, தயங்கி அப்ரோச் செய்வது. இன்னொன்று ரெமோ ஸ்டைலில் எடுத்தவுடன் பட்டாரென்று போட்டு உடைத்து அப்ரோச் செய்வது.

இந்த இரண்டு வகையிலும் புத்திசாலித்தனமாக அப்ரோச் செய்பவர்கள், முட்டாள்தனமாக அப்ரோச் செய்பவர்கள் என இரண்டு சப்-கேட்டகிரி வேறு உள்ளதாம்.

#4

#4

சரி, ஒரு நபர் தன்னிடம் அப்ப்ரோச் தான் செய்ய வருகிறார் என தெரிந்துக் கொண்டால் அவர்களை எப்படி எல்லாம் பெண்கள் நிராகரிப்பார்கள்...

24x7 செய்தி அனுப்பிக் கொண்டே இருந்தால். செய்திகளுக்கு நேர தாமதமாக ரிப்ளை செய்வது.

#5

#5

தினமும் போனில் பேசும் அளவிற்கு பழக்கம் இருந்தால், ரெகுலராக பேசுவதை நிறுத்துவது.

#6

#6

வெளியே அழைக்கும் போதெல்லாம், ஏதேனும் சாக்குபோக்கு, காரணங்கள் சொல்லி தட்டிக்கழித்துக் கொண்டே இருப்பது.

#7

#7

உண்மையிலேயே காதலர் இருக்கிறாரோ, இல்லையோ... எனக்கு லவ்வர் இருக்கு, வீட்டுல மாப்ள பாத்துட்டாங்க.. என்று பொய் கூறுவது.

#8

#8

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்.... "அண்ணா..." என அழைக்க ஆரம்பிப்பது...

#9

#9

நல்லவர், தனது நல்ல நண்பர், வாழ்நாள் முழுக்க இந்த நட்பு நீடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் போது, அவர் தன்னிடம் தவறாக நடக்க தான் முயற்சி செய்கிறார் அல்ல வேறு காரணத்திற்காக தான் நல்லவர் போல நடித்து அப்ரோச் செய்ய நடித்துள்ளார் என அறியவந்தால் பெண்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள்...

சிலர் இப்படி எல்லாம் செய்யாதே எனக்கு விருப்பம் இல்லை அறிவுரை கூறுவார்கள். பலர் நேரடியாக திட்டி தீர்த்துவிடுவார்கள். இன்னும் சிலர் ஏதும் பேசாமல், எங்கே எதாவது பேசினால் எதாவது செய்து விடுவானோ என்ற அச்சத்தில் ஒதுங்கி சென்றுவிடுவார்கள்.

#10

#10

மேலும், பெண்கள் இப்படி ஒரு ஆண், நம்பி துரோகம் செய்யும் படி நடந்துக் கொண்டார், அவர்களை இவர்கள் இப்படி தான் என்ற ஒரு லிஸ்ட்டில் சேர்த்து விடுகின்றனர். இதனால், இதே போல வேறு எந்த ஆண் நடந்துக் கொண்டாலும், உண்மையாகவே அணுகினாலும், அவனும் அப்படி தான் என்ற எண்ணம் மட்டுமே உள்ளத்தில் கொள்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How Girls React? Avoid? and Realize, When They Got To Know That You are Cheating Them!

How Girls React? Avoid? and Relize, When They Got To Know That You are Cheating Them!
Story first published: Wednesday, May 3, 2017, 14:13 [IST]
Subscribe Newsletter