முன்னால் காதலை இன்னும் உங்களது துணை மறக்கவில்லை என்பதை உணர்த்தும் செயல்கள்!

Written By:
Subscribe to Boldsky

ஏதோ சில காரணங்களுக்காக ஒருவர் தனது முன்னால் காதலை விட்டு விட்டு வேறொரு புதிய உறவில் இணைய வேண்டி இருக்கிறது. காதல் தோல்வி, ஏதோ சில மன கசப்புகள், சண்டைகள் போன்றவற்றினால் தனது முன்னால் காதலன் / காதலியை பிரிவது பொதுவான ஒரு சூழல் தான் என்றாலும், அந்த முன்னால் காதல் இருந்து முழுமையாக வெளி வராமலும், முன்னால் காதலை முழுவதுமாக மறக்க முடியாமலும் இன்னொருவரை காதலிப்பதோ அல்லது திருமணம் செய்வது போன்றவறை நாம் காதலுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம் ஆகும்.

How to find your partner still love his ex lover

சில சமயங்களில் முன்னால் காதலை முழுவதுமாக மறக்க முடியாமல் புதிய உறவில் இணைய வேண்டிய நிலை பலருக்கு ஏற்படுகிறது. இதில் உள்ள முக்கியமான கொடுமை என்னவென்றால், திருமணம் அல்லது புதிய உறவில் நுழைந்த பின்னரும் கூட ஒருவர் தனது முன்னால் காதலின் நினைவாகவே வாழ்ந்து கொண்டிருப்பது தான்.

இந்த சூழ்நிலையானது எந்த ஒரு துணைக்காக இருந்தாலும் பெரும் கவலையை ஏற்படுத்தும். உங்களது துணை இன்னும் அவரது முன்னால் காதலன் / காதலியின் நினைவாக தான் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகளை இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆன்லைன்

ஆன்லைன்

உங்களது துணை எந்த நேரமும் ஆன்லைன்னில் இருப்பது சாதாரணமான ஒன்றாக கூட இருக்கலாம். ஆனால் அவரது முன்னால் காதலின் புரோப்பைல் பக்கத்தை அலசி ஆராய்வது, அடிக்கடி அவரது புரோப்பைல் பக்கத்தை நொட்டமிடுவது போன்றவை உங்களது கண்களில் அடிபட்டால் சற்று கவனமாக இருந்து கொள்ளுங்கள். அவருக்கு அவரது முன்னால் காதலின் தற்போதைய நிலை, அவர் தன் வாழ்வில் என்னென்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகமாக இருப்பதை நீங்கள் உணர முடியும்.

இரகசியம் காப்பது

இரகசியம் காப்பது

ஒருவர் தனது முன்னால் காதலை பற்றி அதிகம் பேச விரும்பம் இல்லாமல் இருக்கலாம். அவருக்கு அதனை பற்றி பேசவும், அதனை நினைக்கவும் விருப்பம் இல்லாமல் இருப்பது நல்லது தான் என நினைத்து விட்டு விடுங்கள். அதனை அடிக்கடி கிளறி விட நினைக்க வேண்டாம். அவர்கள் இருவரும் தொடர்பில் இருந்து கொண்டும் கூட நீங்கள் கேட்கும் போது அதனை பற்றி மறைக்கிறார்கள் என்றால் நீங்கள் சற்று உஷாராக இருக்க வேண்டியது அவசியம்.

இரகசிய சந்திப்பு

இரகசிய சந்திப்பு

உங்களுக்கு தெரியாமல் உங்களது துணை, அவரது முன்னால் காதலை சந்திப்பது ஆபத்தான ஒன்றாகும். அது உங்களது காதல் உறவிற்கும் நல்லதல்ல. இவ்வாறு ஏதேனும் ஒரு சந்திப்பு நடைபெற்றால் நீங்கள் அதனை கவனமான முறையில் கையாள வேண்டும். இது இந்த இரகசிய சந்திப்பானது முற்றிலும் தவறான ஒன்றாகும். இதற்கு ஆரம்பத்திலேயே தடை போட வேண்டியது அவசியம்.

பெயரை பயன்படுத்துவது

பெயரை பயன்படுத்துவது

உங்கள் இருவருக்கும் இடையேயான உரையாடலின் போது அடிக்கடி உங்களது துணை அவரது முன்னால் காதலன் / காதலியின் பெயரை பயன்படுத்துவது மிகவும் எரிச்சலூட்டும் ஒன்றாக மட்டுமில்லாமல், உங்களை ஆத்திரத்தின் உச்சிக்கு கொண்ட செல்ல கூடிய ஒன்றாகவும் இருக்கும். எனவே உங்களது துணையிடம் இவ்வாறாக நீங்கள் உங்களது முன்னால் காதலி / காதலனின் பெயரை அடிக்கடி பயன்படுத்துவது என்னை தடுமாற செய்கிறது. என நிதானமாக பேசி புரிய வையுங்கள்.

மன ரீதியான ஒத்துழைப்பு

மன ரீதியான ஒத்துழைப்பு

யாருக்காக இருந்தாலும், ஒரு சில கால கட்டத்தில் மற்றொருவரின் ஆறுதலும், தூண்டுதலும் தேவைப்படும். என்னை யாராவது பாராட்ட மாட்டார்களா? என்னை யாராவது அரவணைக்க மாட்டார்களா என்று தோன்றும். இதனை நாம் வெளியிடங்களில் எதிர்பார்ப்பது இயலாதும் கிடைக்காத ஒன்றாகவும் இருக்கும். உங்களது ஆசைகளுக்கும், விருப்பங்களுக்கும் உங்களது துணை செவி சாய்க்காமல் இருந்தால் அவர் ஏதோ ஒரு பாதையில் வழி மாறி செல்கிறார் என கொள்ளலாம். இதற்கு அவரது மனதில் இருக்கும் தனது முன்னால் காதலின் நினைவு கூட காரணமாக இருக்கலாம்.

உணர்வுக்கு மதிப்பளிப்பது

உணர்வுக்கு மதிப்பளிப்பது

உங்களது துணை அவரது முன்னால் காதலியிடம் எதுவாக இருந்தாலும் கேட்டு செய்வது.. அவர் என்ன கூறுகிறாரோ அதன் படி நடந்து கொள்வது போன்றவை உங்களை காயப்படுத்த கூடியதாக இருக்கும். இந்த சூழ்நிலையில் நீங்கள் அவரை உங்களது சொல்படி கேட்க வைக்க இயன்றவற்றை மறவாமல் செய்ய வேண்டியது அவசியம்.

நட்புக்கும் மேல்

நட்புக்கும் மேல்

சிலர் தங்களது பெரிய மனதின் காரணமாக, தங்களது துணையை அவரது முன்னால் காதலுடன் நட்புடன் பழக விட்டு விடுவார்கள். ஆனால் அந்த நட்பு எல்லைக்குள் இருந்து விட்டால் அதில் யாருக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் அவருடன் உங்களுக்கு தெரியாமல் வெளியிடங்களுக்கு செல்வது, உங்களது தனிப்பட்ட விஷயங்களை அவருடன் பகிர்ந்து கொள்வது என சில அத்துமீறல்களில் ஈடுபட்டால் நீங்கள் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.

ஒப்பீடு செய்தல்

ஒப்பீடு செய்தல்

யாருக்காக இருந்தாலும் சரி ஒப்பிட்டு பேசுவது என்பது சுத்தமாக பிடிக்காத ஒன்றாக தான் இருக்கும். எதற்கு எடுத்தாலும், எனது முன்னால் காதலி இதனை வேறு விதமாக செய்வாள் அது நன்றாக இருக்கும். எனது முன்னால் காதலியின் ஹேர் ஸ்டைல் நன்றாக இருக்கும். எனது முன்னால் காதலன் உன்னை விட நல்லவன். நீ அவ்வாறு இல்லை என்று எப்போது பார்த்தாலும் முன்னால் காதலை உங்களுடன் ஒப்பிட்டு பேசுதல் உங்களது காதலன் / காதலி அவரது முன்னால் காதலை இன்னும் மறக்காமல் தான் இருக்கிறார் என்பதை காட்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to find your partner still love his ex lover

How to find your partner still love his ex lover
Subscribe Newsletter