காதலனை கரம்பிடிக்க ரூ.2000 கோடிகளை துச்சமாக உதறிவந்த மாடர்ன் ஜூலியட்!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய தலைமுறையில் இதை அதிசயம் எனலாம். காதலுக்கு பணம் தேவையில்லை ஆனால், திருமணம் முடித்து ஒன்றாக வாழ பணம் கட்டாயம் அவசியம் என பேசுவோர் தான் 99% பேர். மீதம் இருக்கும் 1% பேரை காண்பது மிகவும் அரிது.

அந்த 1% ஒருவர் தான் இன்று உலகம் முழுதும் காதலின் புது அடையாளமாக மாறியிருக்கும் ஏஞ்சலின் ஃபிரான்சிஸ் கூ. இவரது தந்தை கூ கே பெங் மலேசியாவை சேர்ந்த ஒரு பெரும் கோடீஸ்வரர்.

நட்சத்திர விடுதிகள், மலேசியன் யூனைடர் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர் என பன்முகம் கொண்டவர் கூ கே பெங். இவரது சொத்து மதிப்பு தான் 300 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் இது ஏறத்தாழ ரூ. 2000 கோடி ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இங்கிலாந்தில் படிப்பு!

இங்கிலாந்தில் படிப்பு!

ஏஞ்சலின் ஃபிரான்சிஸ் கூ இங்கிலாந்தில் படித்து வந்தார். அப்போது அங்கே பழக்கமான ஜடிடிஹா ஃபிரான்சிஸ் எனும் நபருடன் உண்டான நட்பு காலப்போக்கில் காதலாக மலர்ந்தது. பெரும் பணக்கார குடும்பத்தை சேர்ந்த கூ கே பெங்கிற்கு தனது மகள் ஒரு டேட்டா சைண்டிஸ்ட் ஒருவரை திருமணம் செய்துக் கொள்ள மனம் ஒப்பவில்லை.

பெற்றோர் எதிர்ப்பு!

பெற்றோர் எதிர்ப்பு!

இதனால் ஏஞ்சலின் ஃபிரான்சிஸ் கூவின் காதலுக்கு அவரது வீட்டார் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், தனது காதலா, குடும்பமா என்ற போராட்டத்தில், ஏஞ்சலின் ஃபிரான்சிஸ் கூ காதலனின் கரம் பிடிக்க முடிவு செய்தார்.

பணம்?

பணம்?

இந்த காதல் திருமணத்தால் தனது பரம்பரை சொத்தான 2000 கோடிகள் இழக்க கூடும் என அறிந்தும். பணத்தை விட தனது காதல் தான் முக்கியம் என ஏஞ்சலின் ஃபிரான்சிஸ் கூ முடிவெடுத்தார். இதன் காரணமாகவே ஏஞ்சலின் ஃபிரான்சிஸ் கூ இப்போது காதலின் புதிய அடையாளமாக மாறியிருக்கிறார்.

தவறான கருத்து!

தவறான கருத்து!

"எனது தந்தையின் கருத்து தவறானது. எது சரி என்ற கேள்விக்கு, என் மனம் காதலே என பதிலளித்தது. பல கோடி பணம் இழப்பது குறித்த மனவருத்தம் ஏதும் இல்லை. நான் சிக்கனமாக வாழக் கற்றுக் கொண்டுள்ளேன்." என ஏஞ்சலின் ஃபிரான்சிஸ் கூ கூறியுள்ளார்.

1500 பவுண்டுகள்!

1500 பவுண்டுகள்!

மலேசியாவின் பெரிய செல்வந்தர்களுள் ஒருவரான ஏஞ்சலின் ஃபிரான்சிஸ் கூ -வின் திருமணம் வெறும் 1500 பவுண்டுகள் செலவில் நடந்தது. இருவரது நெருங்கிய நண்பர்கள் மட்டுமே திருமணத்திற்கு வந்திருந்தனர். 30 பேர் முன்னிலையில் பெம்ப்ரோக் கல்லூரி தேவாலயத்தில் இந்த திருமணம் நடைபெற்றது.

All Image Credits:Angeline Francis Khoo

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Girl Gives Up 300 Million USD Inheritance to Marry Her Lover!

Girl Gives Up 300 Million USD Inheritance to Marry Her Lover!
Story first published: Wednesday, August 9, 2017, 10:04 [IST]
Subscribe Newsletter