இருபது வயதில் இந்த கவலைகள் எதற்கு?

Written By: Lakshmi
Subscribe to Boldsky

இருபது வயது என்பது வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய வயது இந்த வயதை பலர் கவலையிலேயே தொலைத்துவிடுகின்றனர். கல்லூரி, நண்பர்கள், அரட்டை, அவுட்டிங் என்று ஜாலியாக இருக்க வேண்டிய வயதில் தேவையில்லாதவற்றை எல்லாம் நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிருப்பது சரிதானா? சரி 20 வயதில் இருப்பவர்கள் எதை எல்லாம் நினைத்து கவலைப்பட கூடாது என்பது பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள்?

1. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள்?

நாம் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது நம் நினைவுக்கு முதலில் வருவது அடுத்தவர்களை பற்றி தான். இதை செய்தால் மத்தவங்க என்ன நினைப்பாங்க..? என்று நினைத்து கவலைப்பட வேண்டாமே!

2. முக புத்தகம்

2. முக புத்தகம்

உங்களை விட வயதில் பெரியவர்கள் எல்லாம் திருமணம் ஆகப்போகிறது, திருமணம் ஆகிவிட்டது, குழந்தை பிறந்துவிட்டது என ஸ்டேடஸ் போட்டால் நமக்கு இன்னும் இது எல்லாம் நடக்கவில்லையே என்று நினைத்து கவலைப்பட வேண்டாம். எதற்கும் ஒரு வயது வரம்பு உள்ளது.

3. காதல் தோல்வி

3. காதல் தோல்வி

காதல் தோல்வி எல்லாம் இந்த வயதில் சாதாரணம். கொஞ்ச நாட்கள் போனால் அது தானாகவே மறந்துவிடும். நீங்களே ஒரு நாள் நல்லவேளையாக தப்பித்தோம் என நினைத்து சிரிப்பீர்கள். அதற்காக எல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

4. காதல் செட் ஆகலயே..!

4. காதல் செட் ஆகலயே..!

எல்லோரும் காதலிக்கறாங்க..! எனக்கு மட்டும் இன்னும் காதல் செட் ஆகலயே அப்படின்னு கவலைப்பட்டுக்கொண்டு இருக்க வேண்டாம். வாழ்க்கையில் காதலை விட அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. சரியான வயதில் வரும் காதல் நிலையாக இருக்கும் எனவே நம்பிக்கையுடன் இருங்கள், தவறானவரிடம் மாட்டிக்கொள்ளாதீர்கள்.

5. பிரண்ட்ஸ் சண்டை

5. பிரண்ட்ஸ் சண்டை

இதுவரை நெருங்கிய நண்பனாக இருந்தான். இப்போது என்னுடன் சண்டை போடுகிறான். வேறு பிரண்ட்ஸ் அவனுக்கி கிடைத்துவிட்டார்கள் என்று மனதை வருத்திக்கொள்ள வேண்டாம்.

6. பெற்றோரின் பிரிவு

6. பெற்றோரின் பிரிவு

நீங்கள் வேலைக்காகவே அல்லது மேல் படிப்பிற்காகவோ உங்களது சொந்த வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டியிருக்கும். பெற்றோர்களிடம் பேச பல தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. விடுமுறையில் வீடு சென்று பார்த்துக்கொள்ளலாம். அதற்காக பெரிதாக கவலை வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Don not Feel for these Things at the Age Of Twenty

Don not Feel for these Things at the Age Of Twenty
Story first published: Friday, June 23, 2017, 17:38 [IST]
Subscribe Newsletter