ஒரு கையில் ரோஜா மறுகையில் அரிவாளுடன் சுற்றிவரும் சைக்கோ காதல் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

உறவில் இருக்கும் இணையர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்று பொசசிவ்னெஸ். ஆரம்பத்தில் சின்ன சின்ன சந்தேகங்களாக தலைதூக்கும் இது, இணை மீதான எதிர்ப்பை வளரச் செய்து சைக்கோத்தனமாக மாறி பெரும் சிக்கலையே ஏற்படுத்திவிடும்.

வாழ்நாள் முழுக்க பெரும் துயரமான உறவாக மாறிடுவதற்கு இதுவே அடித்தளமாய் அமைந்திடும். சிலர் தனக்கு கிடைக்காத காதலி இனி வேறு யாருக்குமே கிடைக்க கூடாது என்ற எண்ணத்தில் கொலை செய்வது, முகத்தில் ஆசிட் அடிப்பது என தன்னுடைய இணையை சிதைக்கும் அளவிற்கு சென்றுவிடுகிறார்கள்.

இதனை தவிர்க்க... தப்பிக்க உங்களுக்கு சில யோசனைகள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தவறுகளை விரும்புவர் :

தவறுகளை விரும்புவர் :

இணையின் தவறுகளை, குறைகளை மிகவும் விரும்பி ஏற்பதாக தன்னைக் காட்டிக் கொள்வர். வண்டி ஓட்டத்தெரியாது என்று நீங்கள் சொன்னாலும் வண்டி ஓட்டிவிடலாம் நான் கற்றுத்தருகிறேன் என்று சொல்லாமல் நான் இருக்கிறேன் எப்போதும் நான் பார்த்துக் கொள்வேன் என்று என்று அவர்களின் இருப்பை உணர்த்துமாறு அவர்களது தேவை இருக்குமாறு பார்த்துக்கொள்வர்.

பரிதாபம் :

பரிதாபம் :

தன்னைத் தவிர எல்லாரும் கெட்டவர்கள் என்கிற ரீதியில் பிறரைப் பற்றி தவறான கண்ணோட்டத்துடன் கூறுவதோ அல்லது இணையின் மீது மிகுந்த காதல் கொண்டிருப்பதாய் இந்த காதலால் தான் இப்போது மகிழ்ச்சியுடன் இருப்பதாய் ஒரு சிம்பதி உருவாக்கிவிடுவர்.

எந்த சூழலிலும் தன்னை விட்டு விலகிடக்கூடாது என்ற அவர்களது காதல் நெருக்கும் தருணத்தை நீங்கள் விரும்பி ஏற்க வேண்டும் என்றே எதிர்ப்பார்ப்பர்.

கவனம் :

கவனம் :

உங்களின் கவனம் முழுவதும் அவர் மீதே இருக்கும் படி பல்வேறு நாடகங்களை நிகழ்த்துவர். இணை எதைச் சொன்னால் எமோஷனலாக ரியாக்ட் ஆவார் என்பதை கண்டறிந்து அதனை அப்படியே நிகழ்த்துவர். வரும் வழியில் ஆக்ஸிடண்ட், நண்பனின் மரணம் என அவர்கள் சொல்லும் பொய் ஒவ்வொன்றும் உங்களை உலுக்கும். அவருக்கு ஆறுதல் சொல்ல எப்போதும் உடனிருக்க வேண்டும் என்று உங்களை நினைக்க வைப்பர். தன்னைப் பற்றியே தன்னுடைய இணை சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிற அவர்களது சைக்கோ எண்ணம் தான் இப்படியான பொய்களாக வெளிவருகிறது.

கண்காணித்தல் :

கண்காணித்தல் :

சைக்கோதனங்களின் ஆரம்ப அறிகுறி இது தான். இணையை தொடர்ந்து கண்காணிப்பர். ஆன்லைனாக இருந்தாலும் சரி, வெளியிலும் சரி உங்களது ஒவ்வொரு அசைவும் அவர்களுக்கு தெரிய வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பர். அதையும் நீங்களே சொல்லி முன்னரே அனுமதி வாங்கியிருக்க வேண்டும் என்றும் எதிர்ப்பார்ப்பர்.

விலகாத அன்பு :

விலகாத அன்பு :

இணை தன்னைப்பற்றிய தவறான கருத்துக்களை அதிகமாக பகிர்வார். அதாவது தான் எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும் நான் உன்னை நேசிப்பேன் என்று நீங்கள் சொல்லப்போகும் பதிலில் தான் அவரது நிறைவு அடங்கியிருக்கும். பின்னாட்களில் தான் தப்பித்துக் கொள்ள இதனையே ஆயுதமாக பயன்படுத்துவார்.

அதீத உரிமை :

அதீத உரிமை :

உங்கள் மீது அதிக அக்கறை இருப்பதாய் காட்டிக் கொள்வார்கள். அதே நேரத்தில் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். உங்களுக்கான பெர்சனல் பக்கங்கள் இருப்பதையே அவர்கள் விரும்ப மாட்டார். எதுவாக இருந்தாலும் தன்னைச் சுற்றியே இருக்க வேண்டும் என்று நினைப்பர். அவர்களின் திட்டங்களையே செயல்படுத்த நினைப்பர். அது பார்க்கும் படமாக இருந்தாலும் சரி, படுக்கையறையாக இருந்தாலும் சரி.

என்னோடு வா!! :

என்னோடு வா!! :

காதலிக்கும் காலங்களில் தனக்கு இணையாக அல்லது அதற்கும் கீழே தான் இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பர். அது அவர்களது கல்ச்சுரல் ஆக்டிவிட்டியாகவோ, படிப்பாகவோ அல்லது ப்ரோமஷனாகவோ இருக்கலாம்.

இப்படி ஏதேனும் ஒன்றில் உங்களின் கை ஓங்கினால் தான் கீழே இறங்க வேண்டிவரும் என்ற பயத்தினாலேயே அதனை கிடைக்கவிடாமல் செய்திடுவர் அது அன்பின் வழியாகவும் இருக்கலாம். கோபத்தின் வழியாகவும் இருக்கலாம்.

எது காதல் ? :

எது காதல் ? :

காதலில் இப்படியான சந்தர்ப்பங்கள் கண்டிப்பாக வரும். அது என் மேல் உள்ள அன்பு என்று நினைத்துக் கொள்ள வேண்டும். குறுகிய காலத்திற்கு வேண்டுமானால் அந்த அன்பு நமக்கு பிடித்திருக்கலாம். ஆனால் நாம் செய்யும் ஒவ்வொரு விஷயத்திற்கும் தடை போடும் போதோ அல்லது எப்போதும் நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்று உணரும் போது, அல்லது சிறுவயதிலிருந்து ஏங்கிய விஷயத்தை அடைய நினைக்கும் போதோ தடுக்கும் போது காதல் பாரமாக மாறும்.

புரிதல் :

புரிதல் :

என்ன தான் இணை மீது உங்களுக்கு அதீத ப்ரியங்கள் இருந்தாலும் உங்களுக்கான ப்ரசனல் பக்கங்களில் இன்னொருவரை எழுத அனுமதிக்காதீர்கள். மேற்கூறிய அறிகுறிகளுடன் உங்கள் இணை உங்களிடம் நடந்து கொண்டால் உங்கள் இணை உங்களை காதலிக்கவில்லை சைக்கோத்தனமாக பின் தொடர்கிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

சைக்கோவிற்கு அன்பு தெரியாது, காதல் புரியாது, காரணங்களை ஆராய்ந்து யோசிக்கத்தெரியாது. தான் என்ற அகங்காரம் மேலே எழும்பி நிற்கும் கோபம் கண்ணை மறைக்க ஒரு நொடியில் எதை வேண்டுமானாலும் நிகழ்த்தி விடுவர் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

ஆரம்பம் :

ஆரம்பம் :

அதீத காதலுக்குப் பின் விலகுதல் என்பது மிகுந்த சங்கடமான சூழலையே உருவாக்கிடும். காதலிக்க துவங்கும் போதே இப்படியான நிகழ்வுகள் நடந்தால் சுதாரித்திடுங்கள். குறிப்பாக உங்களின் சுயத்தை இழந்து, உங்களுக்கான இடத்தையும் இணையே நிரப்ப பார்க்கிறார் என்று உணர்ந்தால் யோசிக்காமல் அந்த உறவிலிருந்து வெளியேறிவிடுங்கள்.

விலகல் :

விலகல் :

விலகுதலுக்கான காரணங்களை முதலில் சொல்லி விடுங்கள் எதுவும் சொல்லாமல் விலகினால் அது உங்கள் இணைக்கு இன்னும் கோபத்தையே உண்டாக்கும். எடுத்தவுடனேயே புரியவைக்கப்போகிறேன் என்று களத்தில் இறங்காதீர்கள். நீங்கள் என்ன சொன்னாலும் எப்படி சொன்னாலும் இணைக்கு புரியாது அல்லது புரிந்து கொள்ள விரும்ப மாட்டார்.

சில காலம் தனிமை தேவைப்படுகிறது என்றோ ஒரு மாற்றம் வேண்டும் என்றோ பிரிந்து கொள்ளுங்கள்

தொடர்பு :

தொடர்பு :

கேட்டவுடனேயே உங்களுக்கான மாற்றம் கிடைத்திடாது. இந்த நேரத்தில் தான் உங்களின் இணை தான் இன்னும் மிகுந்த காதலோடு இருப்பதாகவும் நீங்கள் தான் அவரது காதலை உதாசீனப்படுத்துவதாகவும் நினைக்கச் செய்வார். இவற்றையெல்லாம் கேட்டு,பார்த்து தவறு செய்துவிட்டோமா என்று நினைக்காதீர்கள்.

விலக வேண்டும், ஓர் இடைவேளி, மாற்றம் வேண்டும் என்ற முடிவையும் நீங்கள் தான் எடுத்திருக்கிறீர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

முதல் வேலையாக தொடர்புகளை துண்டித்து விடுங்கள். அமைதி வேண்டும் என்று சொல்லிவிட்டு நேரில் மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டாம் என்றோ போன் மட்டும் பேச வேண்டாம் என்றோ இருந்தால் அதில் எந்த பிரியோஜனமும் இருக்காது.

உருமாறும் சண்டைகள் :

உருமாறும் சண்டைகள் :

நீங்கள் அவரை விட்டு விலகப்போகிறீர்கள் என்று தெரிந்தாலே உங்களின் இணை பல விதமான நடவடிக்கைகள் மேற்கொள்வார். உங்களை கைவிடக்கூடாது என்று பெரும் பிரயத்தனங்களை எடுப்பார். அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளை உதாசீனம் செய்ய செய்ய உங்கள் மீதான கோபம் தான் அதிகரிக்கும். நடந்த பிரச்சனைகள் எல்லாவற்றையும் மறந்து அவரை உதாசீனம் செய்தவையே பெரும் பிரச்சனையாக மாறி நிற்கும்.

வாய்ப்புகள் :

வாய்ப்புகள் :

தான் நினைத்ததை சாதிக்க எந்த நிலைக்கும் செல்ல தயங்காமல் உங்களின் இணை செயல்புரிவர். உங்களுக்கும் ஓர் சாஃப்ட் கார்னர் இருக்கும். இந்த ஒரு முறை மட்டும் மன்னித்து ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று பின்வாங்காதீர்கள். வாய்ப்புகள் கொடுக்க கொடுக்க அதனையே பழக்கமாக்கிக் கொள்வர். ஓர் முறை முடிவெடுத்தால் அதில் உறுதியாக இருங்கள்.

மிரட்டல்கள் :

மிரட்டல்கள் :

காதலில் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனை இது. உங்களை மிரட்டியே தான் நினைப்பதை இணை சாதிக்கிறார் என்றால் அப்படிப்பட்ட உறவில் இருப்பதே வீண். ஒவ்வொரு மிரட்டலுக்கும் அஞ்சி நடுங்காமல் நீங்கள் நிதானமாக யோசிக்கலாம். பொதுவாக இப்படியான மிரட்டல்களில் வருவது அந்தரங்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிடுவேன் என்பதும், தற்கொலை செய்து கொள்வேன் என்பதுமாகத்தான் இருக்கும்.

புகைப்படம் :

புகைப்படம் :

இப்போது எல்லாருடைய கைகளிலும் ஸ்மார்ட் போன் வந்துவிட்டதிலிருந்து தங்களின் படுக்கையறை காட்சிகளை புகைப்படம் எடுத்துக் கொள்வது அந்தரங்கங்களை படம் எடுத்து அனுப்புவது என்பது காதலின் ஓர் சடங்காக மாறிவிட்டிருக்கிறது. நம்பிக்கையின் அளவுகோலாகக் கூட இது பார்க்கப்படுகிறது.

காதலின் நம்பிக்கை நிர்வாணத்தில் தான் இருக்கிறது என்று யார் உங்களுக்குச் சொன்னார்கள்??

அந்தரங்கமான புகைப்படங்கள் எடுப்பதை முற்றிலுமாக தவிர்த்திடுங்கள்.

தற்கொலை மிரட்டல்கள் :

தற்கொலை மிரட்டல்கள் :

இதனை எளிதாக கடந்து விடவும் முடியாது. அதற்காக பயப்பட தேவையில்லை. நண்பர்களின் உதவியை நாடுங்கள். பெற்றோர் உங்களின் நிலையை புரிந்து கொள்வர் என்று நினைத்தால் அவர்களிடத்தில் தைரியமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

தற்கொலை மிரட்டல்களுக்கு பயந்து இணை சொல்வதை கேட்க ஆரம்பித்தீர்களானால் மீண்டும் நீங்கள் பழைய சுழலிலேயே சிக்க வேண்டி வரும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சமூகவலைதளம் :

சமூகவலைதளம் :

நவீன இளைஞர்களின் மிரட்டல் களம் சமூக வலைதளங்களாகத்தான் இருக்கிறது . ஒவ்வொரு சமூக வலைதள பக்கத்திற்கும் ப்ரைவசி செட்டிங்க்ஸ் நிறையவே இருக்கிறது. அதனை கடைபிடியுங்கள். உங்களுடைய அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திடுவேன் என்று மிரட்டினாலோ அச்சம் கொள்ளாது தைரியமாக போலீசில் புகார் கொடுக்கலாம்.

ஒரு நாளில் பத்து செய்திகள் வைரலாகும் இன்றைய தேதியில் இவை குறித்து நீங்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தவறு செய்தேன், திருந்திவிட்டேன் இனியும் அந்த தவறை செய்ய மாட்டேன். என்று உறுதியாக இருங்கள், இந்தப்பாடம் எப்போதும் உங்களுக்கு துணையாய் நிற்கும்.

பயம் :

பயம் :

மிக அடிப்படையான ஒன்று இந்த பயம் தான். வெளியில் தெரிந்து விட்டால் என்னைப் பற்றி என்ன நினைப்பர் என்று நீங்கள் பயப்படும் விஷயங்களையே தனக்கு சாதகமாக உங்களின் இணை பயன்படுத்திக் கொள்கிறார். எதையும் தைரியமாக சந்திக்க வேண்டும் என்கிற மனோதிடத்துடன் இருங்கள். உங்களின் பலவீனம் இணையின் பலமாக மாறும் என்பதை மறக்க வேண்டாம்.

தவறிலிருந்து எனக்கான வாழ்க்கைப்பாடத்தை கற்றிருக்கிறேன் என்று நிறைவாக உணருங்கள். அதை விடுத்து, தவறு செய்துவிட்டேன் என்று உங்களை நீங்களே குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்காதீர்கள்.

பாதுகாப்பு :

பாதுகாப்பு :

கடைசி ஒரு முறை நேரில் சந்திக்க வேண்டும், பேச வேண்டும் என்ற எந்த கோரிக்கைகளையும் ஏற்க வேண்டாம். அப்படியான சூழல் ஏற்ப்பட்டால் நண்பர்கள் அல்லது பெற்றோர் துணையுடன் சென்றிடுங்கள். தனியாகவோ அல்லது தொலைவான இடங்களுக்கு செல்வதையோ முற்றிலுமாக தவிர்த்திடுங்கள்.

திரும்பும் பழி :

திரும்பும் பழி :

காதலிக்கவில்லை என்று முற்றிலுமாக மறுப்பதை தவிர்த்திடுங்கள். காதலித்தேன் இணையின் இந்தந்த செய்கைகள்,செயல்கள் பிடிக்கவில்லை என்னால் ஏற்க முடியவில்லை அதனால் பிரிந்துவிட்டேன் என்ற உண்மையைச் சொல்லுங்கள் நான் காதலிக்கவேயில்லை இணை தான் என்னை தொந்தரவு செய்து காதலிக்க சம்மதம் வாங்கினான் என்று சிறுபிள்ளைத்தனமாக பொய் கூறுகையில் ஒட்டுமொத்த பழியும் உங்கள் மீதே திரும்பும்.

வாழ்க்கையின் அங்கம் :

வாழ்க்கையின் அங்கம் :

உங்களை நீங்களே பழிக்காதீர்கள். காதல் ஒரு முறை மட்டும் வரும் என்றும் புனிதமான காதலை நான் சிதைத்துவிட்டேன். வாழத்தகுதியற்றவள் என்று முட்டாள்தனமாக நினைப்பதை கைவிடுங்கள். காதல் இருந்தால் தான் உங்களால் வாழமுடியுமா என்ன? வாழ்க்கையின் ஓர் அங்கமாக வரும் காதலையே வாழ்க்கையாக நினைக்க வேண்டாம். காதலிலிருந்து விலகிவிட்டதாலேயே நீங்கள் உயர்ந்திடவும் இல்லை தாழ்ந்திடவும் இல்லை. நீங்கள் நீங்களாகத்தான் இருக்கிறீர்கள்

உங்களை மன்னியுங்கள் :

உங்களை மன்னியுங்கள் :

பிறரது வார்த்தைகளை விட உங்களின் வார்த்தை தான் உங்களை அதிகம் துவளச் செய்திடும். பெரும் தவறு செய்துவிட்டதாய் மன்னிக்கமுடியாத குற்றம் செய்துவிட்டதாய் உங்கள் மனசு சொல்வதை எதையும் கேட்காதீர்கள். தவறு செய்வது பிழையல்ல, தவறிலிருந்து தான் சரியான பாதையை கண்டடைய முடியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

காதலித்ததில் தவறு செய்துவிட்டேன் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் தவறு செய்வது மிகப்பெரிய குற்றமல்ல என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

காதல் வசமாகட்டும்!!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: love romance tips
English summary

dealing with psycho partner

Here Some tips to dealing a psycho partner
Story first published: Monday, July 31, 2017, 18:44 [IST]