30 வயது பெண்கள், 20 வயது பெண்களிடம் கூறும் 10 இரகசியங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

வாழ்க்கை என்பது வாழ்வதற்கு, சாதரணமாக அல்ல அனுபவித்து வாழ்வதற்கு. இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி, கவலை, சுவாரஸ்யம், மாற்றம், ஏமாற்றம் என அனைத்தையும் அனுபவித்து வாழ தான் இந்த வாழ்க்கை.

நாம் வாழும் இந்த வாழ்க்கை பஃபே அல்ல, நமக்கு பிடித்ததை மட்டும் சுவைக்க. சொல்லப் போனால் நமது வாழ்க்கை ஒரு பிச்சை தான். உயிர் வாழ வேண்டும், நமது எல்லையை தொட வேண்டும் என்றால் கிடைப்பதை எல்லாம் சாப்பிட்டு தான் ஆகவேண்டும்.

சகித்துக் கொள்ளவும் வேண்டும், சாதிக்கவும் வேண்டும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நேசம்!

நேசம்!

உங்களை நீங்களே நேசிக்கவும், உங்களுக்கு நீங்களே மதிப்பளிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள். அப்போது தான் சமூகத்தில் நீங்கள் நிலைத்து இருக்கவும், உறவுகளை வலுவாக பேணிக்காக்கவும் முடியும்.

ஊட்டம்!

ஊட்டம்!

உங்கள் உயிருக்கு ஊட்டமளியிங்கள். உங்கள் ஆர்வத்தை நோக்கி பயணிக்க கற்றுக்கொள்ளுங்கள். காதல், உறவுகளை தாண்டி, உங்கள் உயிர் எதை நோக்கி பயணிக்க தூண்டுகிறதோ அந்த பாதையில் பயணம் செய்யுங்கள்.

நட்பு!

நட்பு!

நல்ல நண்பர்களை சம்பாதியிங்கள். உங்கள் நண்பர்களுக்கு ஏதேனும் உதவி என்றால் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் அங்கு நிற்க கற்றுக் கொடுங்கள்.

நட்பு இல்லாத வாழ்க்கை சிறக்காது. உங்கள் வாழ்க்கையின் சிறந்த ஊட்டச்சத்து நட்பு தான்.

உண்மை!

உண்மை!

உண்மையாக இருங்கள், நீங்கள் நீங்களாக இருங்கள். யாருக்காகவும், எதற்காகவும் நடிக்க வேண்டும், வேடமிட வேண்டாம்.

உங்கள் உண்மையான உருவத்திற்கு, குணத்திற்கு கிடைக்கும் வெற்றி தோல்விகளை ஏற்றுக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் உண்மையாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

நீங்களாக...

நீங்களாக...

நீங்கள், நீங்களாக வாழ வேண்டும். நீங்கள் அனைவரையும் மகிழ்ச்சி படுத்தவோ, திருப்தி படுத்தவோ முடியாது. எனவே, உங்களுக்கு சரி எனப்படும் சிறந்த முடிவுகளை எடுங்கள்.

சமரசம்!

சமரசம்!

யாருக்காகவும், எதற்காகவும் உங்கள் வாழ்க்கையை, வேலையை சமரசம் செய்துக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு எது தேவையோ அதை யாருக்காகவும் இழக்க வேண்டாம். அதற்காக யாரையும் புண்படுத்தவும் வேண்டாம்.

பயணம்!

பயணம்!

நிறைய பயணம் செய்யுங்கள். பதின் வயதில் இருந்து இளமை காலத்தில் நீங்கள் பயணிக்கும் தருணங்கள் தான் உங்கள் வாழ்க்கையின் சிறந்த பாடங்கள். அவை கற்றுத்தரும் பாடங்கள் இன்றியமையாதவை.

கவலை!

கவலை!

கவலை பட வேண்டாம். தடைகள் இல்லாத நீரோட்டம் கடலை சேர்வதில்லை, எதிரணி இல்லாத விளையாட்டில் சுவாரஸ்யம் இருப்பதில்லை.

எனவே, தோல்வி அல்லது முயற்சிகள் சரியான பலன் தராத நேரத்தில் சோர்வடைய வேண்டாம், கவலை அடைய வேண்டாம்.

முடியும்!

முடியும்!

"முடியும்" என்ற சொல்லை எந்த சூழ்நிலையிலும் மறந்துவிட வேண்டாம். அது காதல், வாழ்க்கை, வேலை என அனைத்திற்கும் பொருந்தும்.

உங்களுக்கு நெருக்கமானவர்களே கூட உங்களை விட்டு செல்லலாம், மீண்டும் வந்து இணையலாம். எனவே, எதற்கும் வருந்தி முடியாது என்ற நிலைக்கு சென்றுவிட வேண்டாம்.

ரசிப்பு!

ரசிப்பு!

அனைத்தையும் ரசியுங்கள். கடல், சூரியன், மேகங்கள், சிறிய செடி, மொட்டு, பூக்கள், மழலை, காதல் என கண்ணில் ரசிக்கும் படி இருக்கும் எதையும் வெறுமென பார்த்து செல்ல வேண்டாம். சில நிமிடங்கள் ஒதுக்கி ரசித்துவிட்டு செல்லுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

These Are The Truths Women In Their 30s Want To Tell Women In Their 20s

These Are The Truths Women In Their 30s Want To Tell Women In Their 20s
Story first published: Thursday, September 22, 2016, 14:22 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter