கோடீஸ்வர மணமகனை கேட்ட அழகிய பெண்ணுக்கு, பளீர் பதில் அளித்த முகேஷ் அம்பானி!

Posted By:
Subscribe to Boldsky

இணையத்தில் ஒரு அழகிய பெண், பணக்கார ஆண்மகனை திருமணம் செய்துக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும் என்ற தலைப்பில் ஒரு பதிவேற்றம் செய்திருந்தார்.

அதில், தான் மிக நேர்மையான நடந்துக் கொள்ள விரும்புகிறேன். பணக்கார ஆண்மகனை திருமணம் செய்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் கூறுங்கள் என பதில்கள் கேட்டிருந்தார்.

அந்த பெண் தன்னை பற்றி குறிப்பிடுகையில், என் வயது இந்த வருடத்துடன் 25. நான் பார்க்க மிகவும் அழகாக இருப்பேன். ஸ்டைல் மற்றும் நல்ல ரசனை உள்ள பெண். நான் வருடத்திற்கு நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஆண்மகனை திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறேன் என பதிவு செய்திருந்தார்.

இந்த பதிவு எப்படியோ முகேஷ் அம்பானி கண்ணில் பட, அவர் அந்த அழகிய பெண்ணுக்கு பளீர் என ஓர் நல்ல அறிவுரை மிக்க பதிலை அளித்திருந்தார்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிறைய பெண்கள்...

நிறைய பெண்கள்...

பதிலின் ஆரம்பித்திலேயே, உங்களை போல பல பெண்கள் இந்த சந்தேகத்துடன் உலாவி வருகிறார்கள். உங்கள் இந்த சந்தேகத்திற்கு ஒரு முதலீட்டாளராக நல்ல தீர்வளிக்க நான் விரும்பிகிறேன் என பதிலை துவக்கி இருந்தார் முகேஷ் அம்பானி.

தவறான தேர்வு!

தவறான தேர்வு!

எனது வருட சம்பாத்தியமும் நூறு கோடிக்கு மேலானது தான். ஆனால், உங்களை போன்ற ஒரு பெண்ணை தேர்வு செய்வது என் பார்வையில் தவறு என்று தான் நான் கருதுவேன். இதற்கான விளக்கத்தையும் நான் அளிக்க முனைகிறேன்.

அழகும், பணமும்!

அழகும், பணமும்!

அழகு என்பதை பெண்ணாகவும், பணம் என்பதை ஆணாகவும் வைத்துக் கொண்டால். இங்கு ஒரு பெரிய பிரச்சனை எழும். அழகு வருடத்திற்கு வருடம் குறைந்துக் கொண்டே போகும் ஒன்று. பணம் என்பது வருடத்திற்கு, வருடம் உயர்ந்துக் கொண்டே போகும் ஒன்று (சரியாக உபயோகித்தால்).

பொருளாதார பார்வை!

பொருளாதார பார்வை!

பொருளாதார பார்வையில் இதை கண்டால், பணம் எனும் ஆண் (நான்) அதிகரிக்கும் சொத்து, அழகு எனும் பெண் (பூஜா) தேய்மானம் அடையும் சொத்து. ஒரு பத்து வருடம் கழித்து பார்க்கும் போது உங்களுக்கான மதிப்பு மிகவும் குறைந்திருக்கும்.

வர்த்தக நிலை!

வர்த்தக நிலை!

செழிப்படையும் ஒரு சொத்தை, தேய்மானம் அடையும் சொத்துடன் சேர்க்க எந்த முதலீட்டாளரும் முனைய மாட்டார். வர்த்தக நிலையில் பார்க்கையில் நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் எந்த ஒரு நபரும் உங்களுடன் டேட்டிங் செய்வாரே தவிர, திருமணம் செய்துக் கொள்ள மாட்டார்.

அழகை மறந்துவிடுங்கள்!

அழகை மறந்துவிடுங்கள்!

எனவே, உங்கள் அழகு தோற்றத்தையும், நூறு கோடி சம்பாதிக்கும் ஆண்மகன் தான் வேண்டும் என்பதை மறந்து விடுங்கள். மேலும், நீங்கள் நூறு கோடி சம்பாதிக்கும் பெண்ணாக வளரலாமே. நூறு சம்பாதிக்கும் மணமகனை தேடுவதை விட, இது சிறந்த தேர்வு. என கூறி முகேஷ் அம்பானி தனது பதிலை முடித்துக் கொண்டார்.

உண்மையா? பொய்யா?

உண்மையா? பொய்யா?

லிங்க்டு இன் முதல் பல இணையங்களில் அம்பானி இப்படி பதில் அளித்ததாக ஒரு பதிவு மிக வைரலாக பரவி வருகிறது.

ஆனால், இது எந்த அளவு உண்மை, அம்பானி தான் கூறினாரா அல்ல நெட்டிசன்கள் எப்போதும் போல எங்காவது சுட்டு இவரது பெயரில் மறுபதிவு செய்து வருகிறார்களா என்ற குழப்பமும் நிலவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A reply from Mukesh Ambani to a pretty girl seeking a rich husband

A reply from Mukesh Ambani to a pretty girl seeking a rich husband, read here in tamil