For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாமியார் மாமனாருடன் நட்புறவு கொண்டாடுவது எப்படி?

By Maha
|

நாம் அனைவருமே பெரியோர்களை மதிக்க தெரிந்தவர்கள்தான். ஆனால் ஒருசில நடவடிக்கைகளால் மட்டுமே நம் மாமியார், மாமனாரிடம் வெறுப்பு ஏற்படுகிறது. எனவே நாம் அவர்களுடன் நட்பு கொண்டு, நல்ல உறவை தொடர்வது எப்படி என்பதற்கு இதோ சில வழிகளை அனுபவசாலிகள் பட்டியலிட்டுள்ளனர். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அந்த வழிகளை கடைபிடித்தால் எப்படிப்பட்ட மாமியார், மாமனாரும் மிகுந்த அன்புடன் நடந்து கொள்வர்.

* எப்பொழுதும் அமைதியாக இருக்கவும். மிக கடுமையாக நடந்து கொள்ளுதல் முறையல்ல. மரியாதையுடனும் உறவுக்கான உரிமை கொண்டு அவர்களை அழைப்பதும், பேசுவதும் அவசியம்.

How to Become Friends With Your in Laws
* முதன்மையாக உங்கள் மாமியார் மாமனாரை பார்க்க செல்லும் போது ஆண் எனில் நல்ல ஒரு பேன்ட் மற்றும் சட்டையும், பெண் எனில் சேலை அல்லது சுடிதார் அணந்து கொண்டும், அவர்கள் மகிழ்ச்சி கொள்ளும் படியாகவும், பெருமைக் கொள்ளும் படியாகவும் இருக்க வேண்டும். மேலும் அதிகமாக அலங்கரித்து கொள்ளாமல், மென்மையான இயற்கை தோற்றத்துடன், சாதரணமான பாணியில் செல்லுதல் அவர்களை ஈர்க்கும். முக்கியமாக அவர்களை பார்க்கும் போது, அவர்களை கவரும் வகையில் உடையும், பாவனையும் நன்றாக இருத்தல் மிகவும் அவசியம்.

* பெரியோர்கள் என்பதால் அவர்கள் சொல்லை ஏற்றுகொள்வது நல்லது. நம் பெற்றோர்களிடம் எப்படி அன்பாக அவர்களின் பேச்சை கேட்டு நடந்து கொண்டோமோ, அதேப்போல் இவர்களும் நம் தந்தை தாய் என்று எண்ணி நடந்தால் பிரச்சினைக்கு இடம் இல்லை.

* அவர்களை நண்பர்கள் போல் கருதி, வீட்டில் அவர்கள் முன்னிலையிலேயே அனைத்தையும் செய்தல் அவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும். ஏதேனும் தவறு செய்துவிட்டால், அவர்களிடம் மறக்காமல் மன்னிப்பு கேட்க வேண்டும்.

* அவர்களுடன் சிறுவயதில் நிகழ்ந்த நகைச்சுவை நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்ளுதல் மூலம், அவர்கள் ஆனந்தம் கொள்வதோடு, நல்ல நட்புறவு வளரும்.

* மிக முக்கியமாக, நீங்கள் எங்கேனும் வெளியே செல்வதாக இருந்தால், அவர்களிடம் சொல்லி செல்ல வேண்டும். மேலும் எப்போதும் முகத்தில் ஒரு புன்னகை மற்றும் நட்பு உள்ளத்துடன் அவர்களிடத்தில் நடந்து கொள்ளவும்.

'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கேற்ப நாம் பணிவுடன் நடந்து கொள்ளும் போது நாம் எத்தகையவராக இருந்தாலும், அழகாகவே காட்சி அளிப்போம். அனைவரிடமும் சிரித்து பேசி பழகும் போது, நம் துணைவரின் தாய், தந்தையரை ஏன் விரோதியாக எண்ண வேண்டும். நட்புடன் நடந்து கொண்டால் உறவுகள் சுமுகமாக, சண்டையின்றி, சந்தோசமாக இருக்கும். அதனால் புன்னகையுடனும், பணிவுடனும் நடந்து கொண்டு அழகாகக் காட்சி அளியுங்கள்.

English summary

How to Become Friends With Your in Laws | மாமியார் மாமனாருடன் நட்புறவு கொண்டாடுவது எப்படி?

How to become friends with the in laws, this may seem to be a hard challenge for any relationships, new or old the guidelines below reflects a person of good upbringing and any in law will be pleased to have you.
Desktop Bottom Promotion