தினமும் ஓட்ஸை இப்படி கஞ்சி வெச்சு 1 கப் குடிங்க.. உடல் எடை கடகட-ன்னு வேகமா குறையும்...

Posted By:

Weight Loss Oats Kanji Recipe In Tamil: உலகில் எடை இழக்க முயற்சிப்போரின் மத்தியில் மிகவும் பிரபலமான உணவு தான் ஓட்ஸ். நீங்கள் உடல் எடையைக் குறைக்க தினமும் காலையில் ஓட்ஸ் சாப்பிடுவீர்களா? ஆனால் நீங்கள் சாப்பிடும் ஓட்ஸ் அவ்வளவு சுவையாக இருக்காதா? தினமும் இப்படி சுவையில்லாத ஓட்ஸை தான் சாப்பிட்டு வருகிறீர்களா? அப்படியானால் அடுத்தமுறை ஓட்ஸை சாப்பிடுவதாக இருந்தால், அதைக் கொண்டு ருசியாக கஞ்சி தயாரித்து குடியுங்கள்.

இப்படி காய்கறிகள் சேர்த்து ஓட்ஸைக் கொண்டு கஞ்சி தயாரிக்கும் போது, அதன் சுவை பிரமாதமாக இருப்பதோடு, மிகவும் சத்தானதாகவும் மாறுகிறது. பொதுவாக ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம் இருக்கும். அத்துடன் காய்கறிகளை சேர்த்து கஞ்சி தயாரிக்கும் போது, அந்த ஓட்ஸ் கஞ்சி விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Weight Loss Kanji Recipe How To Make a Oats Kanji

உங்களுக்கு எடை இழப்புக்கு உதவும் ஓட்ஸ் கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே எடை இழப்புக்கு உதவும் ஓட்ஸ் கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* ஓட்ஸ் - 1 கப்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 5 கப்
* மிளகுத் தூள் - 3/4-1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஓட்ஸை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி ஒரு தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கேரட், பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு தக்காளி மென்மையாகி, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 5 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நீரானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஓட்ஸை சேர்த்து நன்கு கிளறி, 5-7 நிமிடம் நன்கு ஓட்ஸை வேக வைக்க வேண்டும்.
* ஓட்ஸ் நன்கு வெந்ததும், அதில் மிளகுத் தூள் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான ஓட்ஸ் கஞ்சி தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, November 20, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion