Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
பார்லி கஞ்சியை இந்த மாதிரி அடிக்கடி செஞ்சு குடிங்க.. உடல் எடை மடமடன்னு வேகமா குறையும்...
Weight Loss Barley Kanji Recipe In Tamil: நீங்கள் உடல் பருமனாக இருக்கிறீர்களா? உங்கள் உடல் எடையைக் குறைக்க ட்ரை செய்து கொண்டிருக்கிறீர்களா? அதுவும் கடுமையான டயட்டை மேற்கொண்டு, எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? உடல் எடை குறைய வேண்டுமானால் கடுமையான டயட்டை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
நல்ல சத்தான மற்றும் உடல் எடையைக் குறைக்கத் தூண்டும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து, வாய்க்கு ருசியாக சமைத்து சாப்பிட்டாலே எடையை எளிதில் குறைக்கலாம். அப்படி உடல் எடையைக் குறைக்க உதவும் ஒரு அற்புதமான பொருள் தான் பார்லி அரிசி. இந்த பார்லியைக் கொண்டு அடிக்கடி கஞ்சி செய்து குடித்து வந்தால், எடை வேகமாக குறையும். அதுவும் காய்கறிகள் சேர்த்து கஞ்சி செய்யும் போது சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு உடல் எடையைக் குறைக்க உதவும் வெஜிடேபிள் பார்லி கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பார்லி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பார்லி அரிசி - 100 கிராம்
* கேரட் - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* வெண்ணெய் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பார்லி அரிசியை
சேர்த்து 2 நிமிடம் நன்கு வறுக்க வேண்டும்.
* பின் அதில் மிளகு, சீரகம் சேர்த்து 1 நிமிடம் வறுத்து இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து அரைத்து பொடி
செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து
உருகியதும், அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு
பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் கேரட், பீன்ஸ் சேர்த்து நன்கு வேகும் வரை வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் 4 டம்ளர் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரைத்த பொடியை 4 டீஸ்பூன்
சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* 5-10 நிமிடம் குறைவான தீயில் வைத்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி
கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பார்லி கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications