Latest Updates
-
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்...
அடுத்தமுறை வெண் பொங்கல் செய்யும் போது இந்த ஒரு பொருளை சேத்துக்கோங்க.. டேஸ்டியா இருக்கும்..
Ven Pongal Recipe In Tamil: இன்று காலை என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தினமும் இட்லி, தோசை செய்து போரத்துவிட்டதா? அப்படியானால் வெண் பொங்கலை செய்யுங்கள்.
நீங்கள் செய்யும் வெண் பொங்கல் அவ்வளவு சுவையாக இருக்காதா? சுவையை அதிகரிக்க வேண்டுமானால் வெண் பொங்கலை செய்யும் போது, எண்ணெய்க்கு பதிலாக நெய்யை சேர்த்து செய்யுங்கள். இதனால் வெண் பொங்கல் மிகவும் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு நல்ல சுவையான வெண் பொங்கலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண் பொங்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது)
* கறிவேப்பிலை - சிறிது
* முந்திரி - 10-12
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* பச்சரிசி - 1/2 கப்
* தண்ணீர் - 4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி
சூடானதும், பாசிப்பருப்பைக் கழுவிப் போட்டு, 1-2 நிமிடம் பொன்னிறமாக
வறுக்க வேண்டும்.
* அதன் பின் அரிசியைக் கழுவிப் போட்டு, அத்துடன் 4 கப் நீரை ஊற்றி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 4
விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, சாதத்தை நன்கு கரண்டியால் கிளறி
விட வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள நெய்யை ஊற்றி,
நெய் சூடானதும் முந்திரியை சேர்த்து 30 நொடிகள் பொன்னிறமாக வறுக்க
வேண்டும்.
* பின் அதில் சீரகம், மிளகு, சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து,
பின்பு பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து
30 நொடிகள் வதக்கி, குக்கரில் வேக வைத்துள்ள சாதத்துடன் சேர்த்து
கிளறி, மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, குறைவான தீயில் வைத்து,
பொங்கல் மிகவும் கெட்டியாக இருந்தால், சுடுநீரை 1/2 கப் ஊற்றி கிளறி,
1-2 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான வெண்பொங்கல் தயார்.
Image Courtesy: indianveggiedelight



Click it and Unblock the Notifications







