For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பச்சை பட்டாணி கேக்: ஆரோக்கியமான சிற்றுண்டி செய்முறை

பச்சை பட்டாணி கேக்: ஆரோக்கியமான சிற்றுண்டி செய்முறை

By Staff
|

குளிர்காலம் உங்களின் கதவை தட்டுகிறது. இது நீங்கள் உடல் நோய்களைப் பற்றிய கவலை இல்லாமல் பல்வேறு உணவு வகைகளை அனுபவிக்க வேண்டிய பருவம். மேழும் இந்தப் பருவத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகள் மிகவும் எளிதாகக் கிடைக்கும். இந்தப் பருவத்தில் ஆரஞ்சு உங்கள் பழக்கூடையைப் பிரகாசமாச் செய்யுமெனில், காலிஃபிளவர் உங்களின் உணவிற்கு சுவை கூட்டும்.

குளிர்காலத்தில் பல்வேறு காய்கறிகளைப் பற்றிப் பேசும் போது, நம்மால் பச்சை பட்டாணியைத் தவிர்க்க முடியாது. பச்சைப் பட்டாணி கேக் முதல் புலாவ் வரை, நீங்கள் இதைப் பயன்படுத்தி பல உணவுகளைத் தயாரிக்க முடியும்.

இன்று, நாம் பச்சைப் பட்டாணியைப் பயன்படுத்தி ஒரு புதுமையான பான் கேக்கை செய்யும் குறிப்புகளை உங்களுக்காக வழங்கியுள்ளோம். இந்த ஆரோக்கியமான உணவைத் தயாரித்து அதை உங்களின் அன்புக்குரியவர்களுக்கு காலை சிற்றுண்டியாக வழங்கி ஒரு சிறந்த நாளை தொடங்குங்கள்.

இந்த கேக்கை செயவதற்கு தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை குறிப்புகளை உங்களுக்காக கீழே கொடுத்துள்ளோம்.

பறிமாறும் அளவு - 30 கேக்குகள்

தயாரிப்பு நேரம் - 15 நிமிடங்கள்

சமையல் நேரம் - 20 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்:

1. பச்சை பட்டாணி - முக்கால் கப் (வேகவைத்தது)

2. அரிசி மாவு - அரை கப்

3. கடலை மாவு - அரை கப்

4. மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

5. பழ உப்பு - அரை தேக்கரண்டி

6. உப்பு - தேவையான அளவு

7. எண்ணெய் - 2 தேக்கரண்டி (வழவழப்பிற்கு மற்றும் சமையலுக்கு)

8. தக்காளி - அரை கப் (நறுக்கியது)

9. கேரட் - அரை கப் (துறுவியது)

10. பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன் (நறுக்கியது)

11. பாலாடைக்கட்டி (பன்னீர்) - 4 தேக்கரண்டி (துறுவியது)

12. தண்ணீர் - தேவையான அளவு

செயல்முறை:

1. நன்கு வேகவைத்த பச்சை பட்டாணியை மசித்து அதை ஒரு பேஸ்ட் போன்று மாற்றவும்.

2. இப்போது, மசித்த பட்டாணியை ஒரு கிண்ணத்தில் எடுத்து அதனுடன் அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், உப்பு சேர்க்கவும்.

3. மெதுவாக தண்ணீர் சேர்த்து அதை தொடர்ந்து கலக்கவும். கலவை ஒரு தடிமனான நிலைத்தன்மையை அடையும் வரை தொடர்ந்து கலக்கவும். அதன் பின்னர் பழ உப்பைச் சேர்க்கவும்.

4. கலவையை நன்கு கலக்கவும். அடிக்கக் கூடாது. அதுவும் பழ உப்பை கலந்த பின்னர் கலவை நன்றாஅ ஒன்று சேரும் வரை தொடர்ந்து நன்கு கலக்கவும். ஆனால் கலவையை அடித்து கலக்கி விடாதீர்கள். அவ்வாறு அடித்தீர்கள் எனில் கேக் பஞ்சு போல் உப்பி வராது.

5. இப்போது, ஒரு தட்டையான நான்ஸ்டிக் பேனை எடுத்து சூடுபடுத்தவும். அதன் பின்னர் அதில் எண்ணெய் தடவவும். இவ்வாறு செய்வது கேக்கை எளிதாக திருப்ப உதவும்.

6. இப்போது, கலவையை ஒரு கரண்டியால் எடுத்து பான் மீது ஊற்றவும். இது ஒரு சிறிய கேக்கை உருவாக்கும்.

7. இறுதியாக கேக்கின் மீது துறுவிய பாலாடைக்கட்டி, தக்காளி, கேரட் மற்றும் சிறிதளவு எண்ணெயைத் தெளித்திடுங்கள். இப்போது, கேக்கை திருப்பிப் போட்டு அதை அடுத்த பக்கத்திலும் வேக விடுங்கள்.

8. இப்பொழ்து உங்களுடைய பச்சை பட்டாணி கேக் பறிமாறத் தயாராக இருக்கின்றது. இதை சூடாக பரிமாறவும்.

இந்தக் கேக்கை சட்னி மற்றும் சாஸ் உடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். இந்த கேக்கில் வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் இதர அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன. எனவே இது ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டி ஆகும். இந்த எளிமையான செய்முறை குறிப்புகளை முயற்சி செய்து பாருங்கள்.

Read more about: recipe ரெசிபி
English summary

Green Peas Pancake:A Very Healthy Snack Recipe

Green Peas Pancake:A Very Healthy Snack Recipe
Desktop Bottom Promotion