சிம்பிளான... ஆலு புஜியா

Posted By:
Subscribe to Boldsky

ஆலு புஜியா என்பதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது ஸ்நாக்ஸ் தான். ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆலு புஜியாவானது மசாலா போன்றது. இந்த ஆலு மசாலாவானது சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுடன் சாப்பிட ஏற்றதாக இருக்கும். குறிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

சரி, இப்போது அந்த ஆலு புஜியா என்னும் உருளைக்கிழங்கு மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Easy And Quick Aloo Phujia

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து நறுக்கியது)

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்

சீரகம்/சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், சீரகம் சேர்த்து, வெங்காயம் நன்கு பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும்.

பின்னர் அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பின் அதனை சிறிது நேரம் மூடி வைத்து, குறைவான தீயில் மசாலா அனைத்தும் ஒன்று சேரும் வரை நன்கு வேக வைத்து இறக்கினால், ஆலு புஜியா ரெடி!!!

English summary

Easy And Quick Aloo Phujia

Aloo phujia is an Indian dish that is made from aloo. It is a popular aloo recipe. Read on how to make easy aloo phujia. 
Story first published: Friday, October 31, 2014, 12:39 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter