For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவராத்திரி விரதத்திற்கான சுரைக்காய் கோப்தா ரெசிபி

By Maha
|

மகா சிவராத்திரி வரப்போகிறது. சிலர் மகா சிவராத்திரிக்கு விரதம் இருப்பார்கள். அப்படி விரதம் இருக்கும் போது, சிலர் எதையும் சாப்பிடமாட்டார்கள். ஆனால் சிலரோ ஒருசில உணவுப் பொருட்களை சமைக்கும் போது சேர்க்காமல், உணவை உட்கொண்டு விரதம் இருப்பார்கள். அதிலும் குறிப்பாக வெங்காயம், பூண்டு, எண்ணெய் போன்றவற்றை சமைக்கும் உணவில் சேர்க்காமல் சமைப்பார்கள்.

இங்கு அப்படி வெங்காயம், பூண்டு, எண்ணெய் போன்றவற்றை சேர்க்காமல் செய்யப்படும் ஒரு ரெசிபியைக் கொடுத்துள்ளோம். பொதுவாக இது வட இந்திய உணவுகளில் ஒன்று. அது தான் சுரைக்காய் கோப்தா. இப்போது அந்த ரெசிபியை எப்படி சமைப்பதென்று பார்ப்போமா!!!

Dudhi Kofta Recipe For Shivratri Vrat

தேவையான பொருட்கள்:

சுரைக்காய் - 1 (துருவியது)
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பேஸ்ட் - 1 டீஸ்பூன்
அரைத்த தக்காளி - 3 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உலர் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கல் உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
நெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1/2 கப்

செய்முறை:

முதலில் துருவிய சுரைக்காயில் உள்ள நீரை மஸ்லின் துணி மூலம் பிழிந்து எடுத்துவிட்டு, பின் அதனை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலை மாவை போட்டு லேசாக வறுக்க வேண்டும்.

பின் அதில் சுரைக்காயை சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை வதக்கி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு நெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

அடுத்து வதக்கி வைத்துள்ள சுரைக்காய் கலவையானது குளிர்ந்ததும், அதில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி, 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதனை சிறு உருண்டைகளாக பிடித்து, நெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பெருங்காயத் தூள், உலர் திராட்சை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் இஞ்சி பேஸ்ட், மீதமுள்ள சீரகப் பொடி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து, 2-3 நிமிடம் மிதமான தீயில் கிளறி விட வேண்டும்.

பின் அதில் அரைத்த தக்காளியை ஊற்றி, 4-5 நிமிடம் வேக வைத்து, பின்பு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் வறுத்து வைத்துள்ள கோப்தாவை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 3-4 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியை தூவினால், சுவையான சுரைக்காய் கோப்தா ரெடி!!! இது குட்டு சப்பாத்திக்கும் மிகவும் சூப்பராக இருக்கும்.

English summary

Dudhi Kofta Recipe For Shivratri Vrat

The Dudhi Kofta recipe is perfect for the Shivratri vrat. You can easily make this Shivratri fast recipe. Take a look.
Story first published: Tuesday, February 25, 2014, 12:32 [IST]
Desktop Bottom Promotion